கருத்துரை

ஒளிரும் புதிய தொழில் முனைவு இயக்கம்


தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் –ன் மூத்த சிறப்பு நிருபர், மனிஷ் ஆனந்த் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் நித்யா வெங்கடேஷ் புதிய தொழில்முனைவு இந்தியா திட்டம் 71 ஆவது குடியரசு தினத்தன்று தனக்குரிய இடத்தைப் பெற்றது. குறுகிய காலத்தில் மூன்று லட்சம்  வேலை வாய்ப்புக்களை உருவாக்கியுள்ள 26 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய தொழில் முனைவுகள் நாடு முழுவதும் உருவாகியுள்ளன. அரசால் உருவாக்கப்பட்டிருக்கும் ஆரோக்கியமான சூழல் இந்தத் தொழில்முனைவுகளை உயர்…

பொருளாதார அமைப்பில் உலகின் கவனத்தை ஈர்க்கத் தவறிய இம்ரான் கான்.


(ஆல் இண்டியா ரேடியோ செய்தி ஆய்வாளர் கௌஷிக் ராய் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.) அதிகம் பேசப்பட்ட பயணமாக, உலகப் பொருளாதார அமைப்பு, 2020 கூட்டத்தில் பங்கேற்க பாகிஸ்தான் பிரதமர் டாவோஸுக்கு மேற்கொண்ட பயணம் நிகழ்ந்தது. சுவிட்ஸர்லாந்து சொகுசு விடுதியில் அவர் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அவர்களை சந்தித்தார். அவர் வழக்கம் போல், இந்தியாவுக்கு எதிராகவும், காஷ்மீர் விவகாரம் குறித்தும் பேச்செடுத்தார். இந்தியாவுடன் நல்லுறவை வளர்த்துக்…

இந்திய அரசியல் சாசனம் : தேசத்தின் உச்சபட்ச சட்டம்


பேராசிரியர் பல்வீர் அரோரா அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய உரையின் தமிழாக்கம் பி குருமூர்த்தி மூன்றாண்டுகள் கடும் உழைப்பிற்குப் பிறகு நடைமுறைக்கு வந்த இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஆயுட்காலம் நீண்டதாக  இருக்கும் என்று சில ஆய்வாளர்கள் அன்றே கணித்திருந்தனர். இன்றும் இந்தியாவின் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் உறுதியான அடித்தளமாக இது விளங்குவது, அறிவும் தொலைநோக்குப் பார்வையும் கொண்டு இதை உருவாக்கியவர்களுக்கு ஒரு மிகப்பெரிய அஞ்சலியாகும். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பொது மக்களுக்கும் கலங்கரை விளக்கமாகத்…

மேற்கத்திய நாடுகளுடனான அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து ஈரான் விலகுமா?


சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் மத்திய கிழக்கு பிரிவின் மூத்த ஆய்வாளர் டாக்டர் ஆசிஃப் ஷுஜா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் பி குருமூர்த்தி ஈரானிய ஜெனரல் காசிம் சொலைமானி அமெரிக்காவால் கொல்லப்பட்டதையடுத்து நிகழ்ந்த நிகழ்வுகளின் தொடர்ச்சியாக, ஐரோப்பிய ஒன்றியம் ஐ நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ஈரானின் அணு ஆயுதங்கள் குறித்த விவகாரத்தை எழுப்பினால், அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக ஈரான் அச்சுறுத்தியுள்ளது. அவ்வாறு நிகழ்ந்தால், அது…

வெற்றிகரமாக ஏவப்பட்ட ஜி – சாட் 30 செயற்கைக்கோள்


INDIA’S SUCCESSFULLY LAUNCHES GSAT-30 மூத்த அறிவியல் விமரிசகர் பிமன் பாசு அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் பி குருமூர்த்தி 14 வருடங்களுக்கு முன் ஏவப்பட்ட இன்சாட் – 4ஏ செயற்கைக்கோள் தனது ஆயுட்கால முடிவில்,  செயல்பாட்டை நிறுத்தவிருக்கும் தருவாயில், தடையில்லாத் தொடர்புச் சேவைகள் தொடர, இம்மாதம் 17 ஆம் தேதி வெற்றிகரமாக ஏவப்பட்ட 41ஆவது தொலைதொடர்புச் செயற்கைக் கோள் ஜிசாட்-30 மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்தியாவில் உள்ள…

மீண்டும் வெளிப்பட்டுள்ள சீனா-பாகிஸ்தான் இடையேயான கூட்டு


காஷ்மீர் பிரச்சனை குறித்து விவாதிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு குழுவில் சீன அரசு கேள்விகள் எழுப்பியது.  பாகிஸ்தான் அரசு ஆதரவு அளித்த போதும், பாதுகாப்பு குழுவின் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு அளிக்கவில்லை. அரசியல் சட்டப்பிரிவின் 370 பிரிவு நீக்கப்பட்ட பின்னர் மூன்றாவது முறையாக சீன அரசு இந்த பிரச்சனையை ஐக்கிய நாடுகள் சபையில் எடுக்க முயற்ச்சி செய்த குறிப்பிட தக்கது ஆகும்.  இது இருதரப்பு பிரச்சனை…

வளர்ச்சிப் பாதையில் இந்திய-அமெரிக்க உறவுகள்


டாக்டர். ஸ்துதி பேனர்ஜி, அமெரிக்க விவகாரங்களுக்கான செயலுத்தி ஆய்வாளர் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம்  ஸ்ரீபிரியா சம்பத்குமார் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்காவின் உதவிச்  செயலர் திருமதி அலைஸ் வெல்ஸ் மற்றும் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மேத்யு போடிங்கர் ஆகியோர், தொடர்ச்சியான பல இருதரப்பு சந்திப்புகளில் கலந்து கொள்ளவும், ஐந்தாவது ராய்சினா பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ளவும் இந்தியா வந்தனர். திருமதி வெல்சின் இந்த பயணத்தில், பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கான…

இந்தியா-லாட்வியா உறவுகளில் புதிய உத்வேகம்.


(ஐ.நா.வுக்கான இந்தியாவின் முன்னாள் நிரந்தரப் பிரதிநிதி அசோக் முகர்ஜி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – மாலதி தமிழ்ச்செல்வன்.) லாட்வியாவின் வெளியுறவு மந்திரி எட்கர்ஸ் ரிங்கெவிக்ஸின் அதிகாரபூர்வ இந்தியப் பயணம், இருதரப்பு உறவுகளின் சமீபத்திய உத்வேகத்தை முன்னெடுத்துச் செல்கிறது. 2016 செப்டம்பர் மாத்தில், இந்தியாவின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சட்டம், நீதித்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அவர்கள், லாட்வியாவுக்கு விஜயம் செய்திருந்தார். லாட்வியா பிரதமர் 2017 நவம்பரில் இந்தியாவுக்கு முதன்முறையாக…

ஓமன் – ஒரு சகாப்தத்தின் முடிவு


(பாதுகாப்புத் துறை ஆய்வு மைய ஆய்வாளர் டாக்டர் லக்ஷ்மி பிரியா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம்  – ராஜ்குமார் பாலா.) ஓமன் நாட்டை ஐம்பது ஆண்டுகாலத்துக்கு ஆட்சி செய்த அந்நாட்டு மன்னர் கபூஸ் பின் சையித் அல் சையித் ஜனவரி 10 ஆம் தேதி மறைந்தது ஒரு சகாப்தத்தின் முடிவாகக் கருதப்படுகிறது. நீண்டகாலம் நோய்வாய்ப்பட்டிருந்த அவரின் மறைவு முக்கியமான இந்த வளைகுடா நாட்டில் ஆட்சி மாற்றத்துக்கு வித்திட்டுள்ளது. உலக அளவில் மதிக்கப்படும்…

இலங்கை வெளியுறவு அமைச்சரின் முதல் இந்தியப் பயணம்.


(இட்ஸா ஆய்வாளர் குல்பின் சுல்தானா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஆ.வெங்கடேசன்.) இலங்கை வெளியுறவு, திறன் வளர்ப்பு மற்றும் தொழிலாளர் நலத் துறை அமைச்சர் தினேஷ் குணவர்தனா அவர்கள், இந்தியாவுக்கு முதல்முறையாக அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். அவருடன், நால்வர் அடங்கிய உயர்மட்டக் குழுவும் பயணித்தது. கடந்த நவம்பர் மாதம் இலங்கையின் புதிய அதிபர் கோட்டாபய ராஜபக்ச அவர்கள் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டதைத் தொடர்ந்து, வெளியுறவு அமைச்சரின் இப்பயணம் அமைந்துள்ளது.…