2018 –ல் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் சாதனைகள்


  ஐ நா- வுக்கான இந்தியாவின் முன்னாள் நிரந்தரப் பிரதிநிதி அஷோக் குமார் முகர்ஜி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் பி குருமூர்த்தி 2018 ஆம் ஆண்டில் குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர், பிரதமர், வெளியுறவுத் துறை அமைச்சர் ஆகியோர் 58 வெளிநாட்டுப் பயணங்களை  மேற்கொண்டதும்  44 உலக நாடுகளின் தலைவர்கள் இந்தியப் பயணம் மேற்கொண்டதும் குறிப்பிடத்தகுந்தவை. இவற்றில் பெரும்பான்மையானவை ஆசியக் கண்டம் குறித்து அதிக கவனம் செலுத்துபவையாகவே…

இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தும் இந்தியா – பூட்டான்


  இந்தியப் பாதுகாப்பு ஆய்வு மற்றும் பகுப்பாய்வு நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர் முனைவர் நிஹார் ஆர் நாயக் அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய உரையின் தமிழாக்கம் சத்யா அசோகன். பிரதமர் திரு நரேந்திர மோதியின் அழைப்பிற்கிணங்க, பூட்டானில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பிரதமர் லோட்டே ஷெரிங்க் மூன்று நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். பூட்டானின் வெளியுறவுத் துறை அமைச்சர், பொருளாதார விவகாரங்கள் துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகள் ஆகியோர் அவருடன்…

விண்வெளியில் இந்த ஆண்டு இந்தியாவின் சாதனை


பத்திரிக்கையாளர் யோகேஷ் சூட் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் பி ராமமூர்த்தி இந்திய அரசின் விண்வெளி ஆய்வில், 2018 ஆம் ஆண்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டாகக் கருதப்படுகிறது. 1960 ஆம் ஆண்டில் மிகக் குறைந்த நிதி ஆதாரத்துடன் உருவாக்கப்பட்ட இஸ்ரோ நிறுவனம், 2018 ஆம் ஆண்டில் 108 செயற்கைக் கோள்களை விண்வெளியில் செலுத்திச் சாதனை படைத்துள்ளது. தொலையுணர்வு புவிக் கண்காணிப்புச் செயற்கைக் கோள் கார்டோசார் – 2, தொலை…

மேல் நோக்கிச்  செல்லும் இந்தியா – ஐரோப்பிய ஒன்றிய உறவுகள்


நிவேதிதா முகர்ஜி, பத்திரிக்கையாளர் ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம். தமிழில், ஸ்ரீபிரியா சம்பத்குமார் இந்தியா-ஐரோப்பா இடையிலான உறவுமுறை, பன்மைவாத, ஜனநாயக ரீதியான நன் மதிப்புகளின் ஒருங்கிணைப்பால் நிலைத்திருக்கின்றது. இரு தரப்பிலும் உள்ள துடிப்புமிக்க மக்கள் தொகையின் வளர்ந்து வரும் பொருளாதாரக் கூட்டு முயற்சிகள், உலகின் அதிக அளவு ஒத்திசைவுள்ள, நீடித்த கூட்டாளித்துவத்தில் ஒன்றாக இருக்கும் என்ற உறுதியை அளிக்கின்றது. இவ்வாண்டு ஏப்ரல் மாதம் நடந்த முதல் நார்டிக் உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர…

ரோஹிங்யா அகதிகளுக்காக பங்களாதேஷிற்கு இந்தியா வழங்கும் நிவாரணங்கள்


பத்திரிக்கையாளர் திபாங்கர் சக்ரவர்த்தி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் ஆ. வெங்கடேசன். பங்களாதேஷ் தற்பொழுது தேர்தல் பரபரப்பில் தீவிரமாக உள்ள நிலையில்,  ரோஹிங்கியா அகதிகள் விவகாரம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. “ஜதியோ சங்சத்” என்று அழைக்கப்படும் 350 உறுப்பினர்கள் கொண்ட அந்நாட்டின் தேசிய சட்டசபைக்கு, வருகிற 30-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. ரோஹிங்யா அகதிகள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதன் மூலம் பங்களாதேஷ் உடன் இருக்கும் உறவுகளை இந்தியா வலுப்படுத்த…

ஆஃப்கானிஸ்தானிலிருந்து திரும்பும் அமெரிக்கப் படைகள் – தெற்காசியாவில் இதன் தாக்கமும் விளைவுகளும்


அஷோக் சஜ்ஜன்ஹர், முன்னாள் இந்தியத் தூதர் ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்.  தமிழில், ஸ்ரீபிரியா சம்பத்குமார் அமெரிக்க அதிபர் திரு. டோனல்ட் டிரம்ப், ஆஃப்கானிஸ்தானிலிருக்கும் அமெரிக்கப் படைகளில் பாதிப்படை அமெரிக்காவிற்குத் திரும்பும் என அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு, காபுல் அரசாங்கத்திற்கு ஒரு அதிர்வை அளித்துள்ளது. முன்னதாக, 2017 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம், ஆஃப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகளை அதிகரிப்பது குறித்து தன் ஆலோசகர்கள் அளித்த ஆலோசனையை தான் ஏற்றதாக அவர் கூறியிருந்தார்.…

சமூக அடிப்படையில் பரிணமிக்கும் இந்திய, சீன உறவுகள்.


(ஜேஎன்யூ பேராசிரியர் ஸ்ரீகாந்த் கொண்டப்பள்ளி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.ராமமூர்த்தி) கடந்த ஏப்ரல் மாதத்தில் வூஹான் நகரில் பிரதமர் மோதி அவர்களும், சீன அதிபர் ஸீ ஜின்பிங் அவர்களும் சந்தித்து, ஒருமித்த கருத்துடன் அமைத்துக் கொடுத்த வூஹான் சித்தாந்தத்துக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ அவர்களின் அண்மை இந்தியப் பயணம் அமைந்தது எனலாம். இருநாட்டு மக்களுக்கிடையிலான தொடர்புகள், கலாச்சாரப் பரிவர்த்தனைகள்…

பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் ஜி எஸ் டி வரிக் குறைப்பு.


(மூத்த பொருளாதாரப் பத்திரிக்கையாளர் ஜி ஸ்ரீனிவாசன் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் - ஆ. வெங்கடேசன்.) 2017 ஆம் வருடம் ஜூலை மாதம் முதல் தேதி அமலுக்கு வந்த இந்தியாவின் மிக முக்கிய மறைமுக வரியான சரக்கு மற்றும் சேவை வரியில் வரிக் குறைப்பு செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமான 28 சதவீதத்தில் இருந்த 7 முக்கியப் பொருட்களின் வரியை ஜி எஸ் டி சபை குறைத்துள்ளது, இதைத் தவிர, பொதுவான உபயோகத்தில்…

இராணுவ பாதுகாப்பில் செயற்கை கோள்.


(உத்தம் குமார் பிஸ்வாஸ் ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம். தமிழில் பி இராமமூர்த்தி.) இந்திய விமானப் படைக்கு வலு சேர்க்கும் விதமாக, ஆந்திர மாநிலத்தின் ஸ்ரீ ஹரிகோட்டா விண்வெளி தளத்திலிருந்து ஜி-சாட் 7A  என்ற இராணுவ தொடர்பு செயற்கைகோள் வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது.  இந்திய விமானப் படையின் போர் விமானங்கள், கட்டுப்பாட்டு துறைகள், ஆளில்லா விமானங்கள், தரை நிலையங்கள் ஆகியவற்றை இணைக்கும் சூத்திரதாரியாக இந்த செயற்கை கோள் இயங்கும் என்றால் அது மிகையாகாது.…

புனிதத் தலங்களுக்கு சுற்றுலா – இந்தியா, நேபாளம் ஊக்கம்.


(அரசியல் விமரிசகர் ரத்தன் சால்டி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி) பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் நேபாளத்துக்குப் பயணம் மேற்கொண்டபோது, இருநாடுகளும் தங்களுக்கிடையேயான தொடர்புகளை ஊக்குவிப்பது தவிர, இருதரப்பு வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு குறித்தும் விவாதித்தன. இருநாடுகளும் தங்களின் சமய மற்றும் கலாச்சாரப் பிணைப்புக்களை மேம்படுத்துவது குறித்து வலியுறுத்தின. நேபாளத்தில் இம்மாதத் துவக்கத்தில் நடைபெற்ற விவாஹ பஞ்சமி திருவிழாவில் கலந்து கொள்வதற்காக, ராம பெருமானின் துணைவியான…