இராணுவ பாதுகாப்பில் செயற்கை கோள்.

(உத்தம் குமார் பிஸ்வாஸ் ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம். தமிழில் பி இராமமூர்த்தி.)

இந்திய விமானப் படைக்கு வலு சேர்க்கும் விதமாக, ஆந்திர மாநிலத்தின் ஸ்ரீ ஹரிகோட்டா விண்வெளி தளத்திலிருந்து ஜி-சாட் 7A  என்ற இராணுவ தொடர்பு செயற்கைகோள் வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது.  இந்திய விமானப் படையின் போர் விமானங்கள், கட்டுப்பாட்டு துறைகள், ஆளில்லா விமானங்கள், தரை நிலையங்கள் ஆகியவற்றை இணைக்கும் சூத்திரதாரியாக இந்த செயற்கை கோள் இயங்கும் என்றால் அது மிகையாகாது.

இராணுவத்தின் பாதுகாப்பில் உள்ள ரேடார் மற்றும் தரை வழி கட்டுப்பாட்டு நிலையங்களை விட பன்மடங்கு தொலைதொடர்பு வசதியுள்ள வகையில் ஜி சாட் 7A  செயற்கை கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்திய விமானப் படையின் தாக்குதல் திறனை மேம்படுத்தும் வகையில், கணிணி தொழில் நுட்பத்துடன் இணைந்த செயல் திறனை கொண்டிருப்பதால் இந்த  செயற்கை கோள் விமான படைகளை பலப் படுத்துவதாக அமையும்.

எதிர்காலத்தில் நடக்கும் இராணுவ தாக்குதல்கள், நிலத்தின் வழியாகவும், கடல் வழியாகவும் இருப்பதை விட அதிகமாக விண்வெளி மூலம் நடக்கும் சாத்திய கூறுகள் அதிகரித்துள்ள நிலையில், ஜி சாட் தொலை தொடர்பு செயற்கைகோள் இராணுவத்தின் பயன்பாட்டை பலமடங்குகள் பெருக்கி எதிரிகளை நிலைகுலைய செய்யும் ஆற்றல் பெற்றதாக அமையும் எனலாம்.

நுண்ணறிவு உணர் கருவிகள், தாக்குதல்களை மேற்கொள்ளும் கருவிகள் இவையனைத்தும் செயற்கைகோள் மூலமாக இணைக்கபட்டுள்ளதால்,  நாட்டின் பாதுகாப்பு அதிகரித்துள்ளதால் அனைத்து நாடுகளும் அமைதியை காத்திட விண்வெளி தயார்நிலையில் உதவும் எனலாம்.

இந்திய அரசின் கொள்கைப்படி, நமது எல்லைகளை பாதுகாக்கும் முயற்சியில் நாம் வெற்றி பெற்றால் மட்டுமே, இந்து மகா சமுத்திரப் பகுதிகளில் நிலவி வரும் அச்சுறுத்தலை முழுவதுமாக எதிர் கொல்ள முடியும் என்ற நிலை தற்போது உருவாகியுள்ளது.

இந்திய விமான படையின் ஜி சாட் 7A செயற்கை கோள், தரைக் கட்டுப்பாட்டு நிலையங்களை விட துல்லியமாக ஆளில்லா விமானங்களை இயக்குவதில் வலிமை பெற்றிருப்பதால், விமானபடையின் பலத்தை பல மடங்கு அதிகரிக்கும் என கூறலாம். ஆளில்லா விமானங்கள் இயங்கிடும் தூரம், தாக்கும் வலிமை, குறைந்த நேரத்தில் பல்வேறு பணிகளை செய்யும் திறன் இவற்றை தீர்மானிப்பதில் ஜி சாட் 7A செயற்கை கோள் வெற்றிகரமாக இயங்கும் எனலாம்.

இராணுவ படையின் திறனை அதிகரிக்கவும் கடற்படையின் செயல் ஆக்கத்தை மேம்படுத்தவும் இந்த செயற்கை கோள் தொடர்புகளை பயன்படுத்த இயலும் என்பது கூடுதல் சிறப்பாகும்.

கடந்த செம்டம்பர் மாதத்தில் இஸ்ரோ அமைப்பினர் ருக்மினி எனப் பெயரிடப்பட்ட செயற்கை கோளை இந்திய கடற்படையினருக்கு உதவும் வகையில் விண்வெளியில் அனுப்பி சாதனை படைத்தனர்.

இந்திய போர் கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்கள், கடற்படை விமானிகள் இவற்றின் செயல்பாடுகளை ஓருங்கிணைப்பதில் ”ருக்மணி” செயற்கை கோள் பெரும் பங்கு ஆற்றி வருகிறது.

ரேடார் தொழில் நுட்பத்துடன் கூடிய செயற்கை கோள்கள் ஜி-சாட் 7C  செயற்கை கோள் போன்றவற்றை வரும் காலங்களில் வடிவமைப்பதில் இஸ்ரோ நிறுவனம் முயற்சி செய்து வருகிறது.  இந்தியாவின் எல்லைகளை பாதுகாப்பதில் இஸ்ரோவின் அளப்பரிய பங்கு இந்தியர்கள் அனைவராலும் போற்றபடும் என்று கூறினால் அது மிகையாகாது.