இந்தியாவின் விண்வெளி வெற்றி சரித்திரம் தொடர்கிறது

 

ஆல் இந்திய ரேடியோ செய்தி ஆய்வாளர் பதம் சிங் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் ஆ.வெங்கடேசன்
விண்வெளியில் செயற்கைக் கோள் செலுத்துதலில் இந்தியாவின் வெற்றி தொடர்கிறது. சமீபத்தில் மைக்ரோசாட் ஆர் மற்றும் கலாம் சாட் விண்ணில் ஏவப்பட்டது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் துருவ செயற்கைக்கோள் செலுத்தும் சாதனம் பிஎஸ்எல்வி சி 44, ஆந்திர பிரதேஷ் சதீஷ்தவான் விண்வெளி நிலையத்திலிருந்து இந்தியாவின் ராணுவ செயற்கைக்கோளான மைக்ரோசாட் ஆர் மற்றும் மாணவர்களின் கலாம் சாட் இரண்டையும் ஏற்றிக்கொண்டு வியாழக்கிழமை விண்ணில் செலுத்தப்பட்டது.

இருபத்தி எட்டு மணி நேர, பின்னோக்கிய எண்ணிக்கைக்குப் பிறகு இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம், 2019 ஆம் வருடத்திற்கான முதல் செயற்கைக்கோளை இரவு 11 மணி 37 நிமிடத்திற்கு விண்ணில் செலுத்தியது.

46வது விமானமான, துருவ செயற்கைக்கோள் செலுத்தும் வாகனம், பி எஸ் எல் வி சி 44, 740 எடையுடைய , ராணுவத்திற்காகப் புகைப்படம் எடுக்கும், முதன்மைச் செயற்கைக்கோள் மைக்ரோ சாட் ஆர், செலுத்தப்பட்ட 14 நிமிடத்தில், துருவ சூரிய ஒத்திசை வட்டப்பாதையில் 274 கிலோமீட்டர் தொலைவில் நிலை நிறுத்தப்படும் என்று இஸ்ரோ கூறியுள்ளது.

ராக்கெட்டின் நான்காவது நிலையில் 10 சென்டிமீட்டர் கனசதுர அளவுள்ள, ஒரு கிலோ 200 கிராம் எடையுடைய கலாம் சாட், தொலைதூர வட்டப்பாதையில் சோதனைக்காக நிலைநிறுத்தப்படும். கலாம் சாட் இந்தியாவின் மிகவும் எடை குறைவான செயற்கைக்கோள் என்று கூறப்படுகிறது.

கலாம் சாட் என்பது ஒரு femto செயற்கைக்கோள் ஆகும்.femto செயற்கைக்கோள் என்பது பொதுவாக, மிகச் சிறிய அளவுடைய செயற்கையான செயற்கைக்கோளை குறிக்கும். Femto செயற்கைக்கோளின் சில வடிவமைப்பில், தரைக் கட்டுப்பாட்டுடன், தொடர்புக்காக மிகப்பெரிய தாய் செயற்கைக்கோள் தேவைப்படும். 2011ம் வருடம் மே மாதம் முன்மாதிரி செயற்கைக்கோள் , சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ஐ எஸ் எஸ்) க்குச் செலுத்தப்பட்டது.

முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் நினைவாக கலாம் சாட் பெயரிடப்பட்டது. இது தமிழ்நாட்டின் மேல்நிலைப் பள்ளி மாணவர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் பள்ளப்பட்டி என்ற நகரத்திலிருந்து 18 வயதான ரிஃபாத் ஷாருக் என்பவர் தலைமையில் இதில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நாசா மற்றும் idoodle பயிற்சி நிறுவனங்களின் கல்வித் திட்டம் மற்றும் பயிற்சிப் பட்டறைகளில் இந்த மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் குழு கலந்து கொண்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர் குழு நாசா மூலமாக வடிவமைக்கப்பட்ட சோதனை செயற்கைக்கோளைச் செலுத்துவதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள். 2017 ஆம் வருடம் ஜூன் மாதம் 22ஆம் தேதி வர்ஜினியா மாகாணத்தின் தீவு விமான சேவை மையத்தில் இருந்து கலாம் சாட், நாசா மூலமாகச் செலுத்தப்பட்டது.

PS 4 கலாம் சாட் சோதனை மிகவும் குறுகிய காலத்தைக் கொண்டது என்று இஸ்ரோவின் தலைவர் கே சிவன் அவர்கள் கூறினார். இது விண்ணில் செலுத்தப்பட்ட ஒன்றரை மணி நேரத்திற்குப் பிறகு வேலை செய்யத் துவங்கும் மற்றும் 14 மணி நேரம் அதாவது வெள்ளிக்கிழமை மதியம் வரை செயல்படும்.

பாதுகாப்பு ஆய்வகம் மற்றும் வளர்ச்சி நிறுவனம் (DRDO) வின் ஆய்வகம் மூலமாக மைக்ரோ சாட் ஆர் இராணுவத் தேவைக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது . இந்தச் செயற்கைக் கோளானது வெளியே ஒன்றுசேர்க்கப்பட்டுப் பிறகு இஸ்ரோ தனது சொந்த அமைப்பு மற்றும் ஏவு வாகனம் மூலமாக இணைப்பு மட்டும் செய்தது. மையம், இதை ஒரு வாடிக்கையாளர் செயற்கைக்கோள் ஆக கையாண்டது.

இந்த வருடம் இஸ்ரோ, சந்திரயான் இரண்டு ஏற்பாட்டில் மிகவும் பரபரப்பாக இருக்கும், இந்தியாவின் இரண்டாவது சந்திர பணி திட்டமிடப்பட்டுள்ளது. இஸ்ரோ தனது புதிய சிறிய செயற்கைக் கோள் ஏவு வாகனம் (எஸ் எஸ் எல் வி) ராக்கெட்டையும் செலுத்தவுள்ளது. இந்திய தகவல் ரிலே செயற்கைக்கோள் அமைப்பு ( ஐ டி ஆர் எஸ் எஸ் ) இன் இரண்டு செயற்கைக்கோளை அனுப்புவது ,என்பதும் மற்றுமொரு முக்கிய பணியாகும், அதில் முதலாவது 2019 ஆம் வருடம் செலுத்தப்பட உள்ளது.

2022 ஆம் வருடம் இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளை நிறைவு செய்யும் அந்த வேளையில், இந்தியர் ஒருவர் தனது கையில் மூவண்ணக் கொடியை ஏந்தி ,விண்ணிற்குச் செல்வார் என்று பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் 2018 ஆம் வருட ஆகஸ்டு 15 ஆம் தேதி தனது சுதந்திர தின விழா உரையில் கூறினார். பிரதமர் நரேந்திர மோதி அவர்களின் நடைமுறைக்கேற்ற தலைமை பண்பு, மற்றும் இந்திய விண்வெளிப் பணியை ஒரு உச்சத்திற்கு அடையச் செய்வது என்ற தனது ஈடுபாடு இவை அனைத்தும் குறிப்பிடத்தக்கது. சமீப காலத்தில் இந்தியாவிலிருந்து புதிய மிக நுண்ணிய செயற்கைக்கோள் வடிவமைப்பு மற்றும் இத்துறையில் மிகவும் பிரகாசமான யோசனைகள் வெளிப்பட்டுள்ளது.