இந்தியக் குடியரசின் பெருமைமிகு வீர நடை

இராஜதந்திர ஆய்வாளர் டாக்டர் ரூப் நாராயண தாஸ் ஆங்கிலத்தில் எழுதிய ஆய்வுரையைத் தமிழில் வழங்குபவர் வீர.வியட்நாம்

இந்தியா தனது 70ஆவது குடியரசுத்தினத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. இத்தகு தருணத்தில் இந்திய குடியரசு சந்தித்த சவால்கள், போட்டிகள், இன்னல்கள், இன்பங்கள் ஆகியவை குறித்து சிந்திக்க வேண்டியது அவசியம். மகாத்மா காந்தி அவர்களின் ஈடு இணையற்ற தலைமையின் கீழ் நடத்தப்பட்ட விடுதலைப் போராட்டத்தின் விளைவாக  தேசம் பிறந்தது. ஒரு கண்டத்தின் அளவு பெரிய பரப்பளவு கொண்ட இந்த தேசத்தில், பல்வேறு விதமான சிக்கல்கள் இருந்தன. 1950ஆம் ஆண்டு இந்தியா குடியரசாக பிரகடனப்படுத்தப்பட்ட போது, ஒட்டுமொத்த ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா முழுவதும் காலனியாதிக்கம் ஒழிந்து புதிய விடியல் உதித்தது. வறுமை, எழுத்தறிவின்மை, நோய்கள், கட்டமைப்பு இன்மை, சமூக ரீதியான ஒடுக்குமுறைகள் ஆகியவை மாபெரும் சவால்களாக இருந்தன. பல ஆண்டுகளாக, குறிப்பாக கடந்த சில ஆண்டுகளில் தேசத்தின் மகத்துவம் உயிரூட்டமான ஜனநாயகமாகவும் மாபெரும் பொருளாதாரமாகவும் மற்ற நாடுகள் மத்தியில் வளர்ந்துள்ளது.

 இன்று இந்தியா ஒரு மாபெரும் மீட்டுருவாக்க அரசியலாகவும் உலகிலேயே வேகமாக வளர்ந்துவரும் பொருளாதாரமாகவும் உள்ளது. பஞ்சாயத்திலிருந்து நாடாளுமன்றம் வரை நடத்தப்படும் சீரான கால ரீதியான தேர்தல்கள் இந்திய நாட்டின், இந்திய மக்களின் ஜனநாயக உணர்வை நிரூபித்துள்ளது. இந்தியாவின் சவால்மிகு பொருளாதாரத் திறன் தேசத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் மக்களின் நலனுக்கும் மாபெரும் சந்தர்ப்பங்களை வழங்கியுள்ளது. 2014-15லிருந்து 2017-2018 வரை ஒட்டுமொத்த உள்நாட்டு வளர்ச்சியானது சராசரி 7.3 சதவீத வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இதனால் உலகிலேயே வேகமாக வளர்ந்துவரும் பொருளாதாரங்களில் இதுவும் ஒன்றாக இந்தியா மாறியுள்ளது. 2019-2020ஆம் ஆண்டில் இந்தியாவின் பெருளதார வளர்ச்சி 7.5 சதவீதமாக இருக்கும் என்று சர்வதேச நிதியம் கணித்துள்ளது. இதிலிருந்து இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி குறிப்பிடப்படுகிறது. குறைவான பணவீக்கம், மேம்பட்ட நடப்புக்கணக்கு நிலுவை மற்றும் குறிப்பிடத்தக்க நிதிப்பற்றாக்குறைக்கும் ஜிடிபிக்கும் இடைப்பட்ட விகிதம்  ஆகியவற்றின் பின்னணியில்தான் வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது. வங்கிகளின் வாராக்கடன்களை சமாளிக்க ஜிஎஸ்டியை அறிமுகப்படுத்தியது பெருமளவு உதவியுள்ளது. வெளிநாட்டு நேரடி முதலீட்டை தாராளமயப்படுத்தியது பொருளாதார சீர்திருத்தங்களுக்கு உத்வேகம் அளித்துள்ளது. 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம்  அந்நியச் செலாவணி இருப்பு 414 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது மற்றொரு  வெற்றி.

 2019ஆம்  ஆண்டு வணிகம் செய்யும் அறிக்கையை உலக வங்கி வெளியிட்டது. இதில் இந்தியாவின் நிலையை 23ஆம் இடத்திற்கு தரம் உயர்த்தி வணிகத்திற்காகவும் தொழில்துறைக்காகவும் ஒரு கவர்ச்சிகரமான இலக்காக தேசத்தின் நம்பத்தன்மையை இது கவர்ந்துள்ளது. எளிதாக வணிகம் செய்யும் நாடுகளில் முன்னேற்றம் அடைந்ததில் இது இரண்டாவது தொடர் ஆண்டாகும். கடந்த ஆண்டுகளாக இந்தப் பிண்ணனியில் இந்தியா தனது மக்கள் தொகையில் 78 சதவீதத்திற்கு மேற்பட்டோரை வறுமைக்கோட்டிற்கு மேல்  , தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், தீன் தயால் அந்தோதயா திட்டம், தேசிய கிராமப்புற நகர்ப்புற வாழ்வாதாரத் திட்டம், தேசிய சமூக உதவித் திட்டம், பிரதமரின் ஜன் தன் திட்டம், பிரதம மந்திரியின் ஜீவன் ஜோதி பீமா திட்டம், அடல் பென்சன் திட்டம் போன்ற சில திட்டங்களின் மூலம் உயர்த்தியுள்ளது. நாட்டின் துடிப்பான இளைஞர்களின் வளர்ச்சிக்காக அவர்கள் சிறு தொழில் வணிகத்தை ஊக்குவிக்க முத்ரா திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பிரதம மந்திரி வேலைவாய்ப்பு உற்பத்தித் திட்டம், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு, நிதி உத்தரவாத நிதியம் ஆகியவை உருவாக்கப்பட்டு வருமானம் வளர்ந்து வாழ்வாதாரம் வளர்க்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 1.9 டாலர்களுக்கு குறைவான வருமானத்தில் வாழ்வதே அதிகபட்ச வறுமை என்று கணக்கிட்டுள்ள ப்ரூக்கிங்ஸ் நிறுவனம், 2022ஆம் ஆண்டுக்குள் இந்தியர்களில் 3 சதவீதத்திற்கும் குறைவானோர்  ஏழைகளாக உள்ளனர். மேலும் அதிகபட்ச வறுமையானது 2030ஆம் ஆண்டுக்குள் நீக்கப்படும் என்றும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.

வசதியற்ற மட்டத்தில் வாழும் மக்களின் வாழ்கைத் தரத்தை  மேம்படுத்தவும் முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. தேசிய கிராமப்புற குடிநீர் திட்டம், தேசிய நதிநீர் பாதுகாப்பு திட்டம், பிரதம மந்திரி உஜ்வாலா திட்டம், ஷ்யாமா பிரசாத் முகர்ஜி கிராமப்புற நகர்ப்புற திட்டம், அனைவருக்கும் வீடு, டிஜிட்டல் இந்தியா, ஆயுஷ்மான் பாரத் சுகாதாரப் பாதுகாப்புத் திட்டட்ம ஆகிய திட்டங்களின் மூலம் மக்களின் வாழ்கைத் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.  2016ஆம் ஆண்டு மே மாதம் நிறைவேற்றப்பட்ட உஜ்வாலா திட்டமானது  ஒவ்வொரு தகுதியுடைய வீடுகளுக்கும் சமையல் எரிவாயு இணைப்பு அளிக்க நிதி உதவி அளிக்கிறது.

 இதுவரை நாடு சாதித்துள்ள சாதனைகளுக்குப் பின் குறிப்பிட்ட திசையும் காரணமும் உள்ளது. நாட்டின் வளர்ச்சி இதே வேகத்தில் தொடர்வது  தேசத்தின் நலனுக்கம் மக்ககளின் நலனுக்கும் நல்லது.