இந்தியா தெற்கு ஆப்பிரிக்கா இரு தரப்பு உறவுகள்

கெளசிக் ராய் ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்—தமிழில்  பி இராமமூர்த்தி.

இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் அழைப்பின் பேரில் தெற்கு ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமாபோசே இந்திய  பயணம் மேற்கொண்டார்.  2019-ம் ஆண்டின் சுதந்திர தின கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக சிரில் ராமாபோசே கலந்து கொண்டு சிறப்பித்தார்.  தெற்கு ஆப்பிரிக்க அதிபரின் துணைவியார் முனைவர் சிபோ மோட்ஸ்பே மற்றும் 9 அமைச்சர்கள், 50-க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர் உள்ளிட்ட முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலே-க்கு பிறகு கலந்து கொண்ட தெற்கு ஆப்பிரிக்க அணி இதுவேயாகும்.

கடந்த 25 ஜனவரி அன்று குடியரசு தலைவர் மாளிகையில் அதிபர் ராமாபோசே-ற்கு விருந்து அளிக்கப்பட்டது.  குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் வரவேற்பு விருந்து அளித்து சிறப்பித்தார்.  தெற்கு ஆப்பிரிக்காவில் மகாத்மா காந்தியடியின் பங்கினை சிறப்பிக்கும் வகையில் அவரது 150-வது ஆண்டு பிறந்த தின விழாக் கொண்டாட்டங்களை சிறப்பிக்கும் வகையில் தெற்கு ஆப்பிரிக்க அதிபர் ராமாபோசேயும் அவரது மனைவியும் ராஜ்காட் பகுதியில் மகாத்மா காந்திக்கு சிறப்பு அஞ்சலி செலுத்தினார்கள்.

இந்தியா-பிரேசில் தெற்கு ஆப்பிரிக்கா நாடுகளடங்கிய IBSA அமைப்பினரால் ஒருங்கிணைக்கப்பட்ட காந்தி-மண்டேலா-நினைவு சொற்பொழிவை அதிபர் ராமாபோசே நிகழ்த்தினார்.  இந்திய பிரதமர் மோதியுடன் இருதரப்பு உறவுகள் குறித்து நீண்ட விவாதங்கள் நடத்தினர்.  அதிபர் ராமாபோசே அவர்கள் பிரதமர் மோதி தெற்கு ஆப்பிரிக்க அதிபருக்கான சிறப்பு மதிய விருந்து அளித்து சிறப்பித்தார்.

இரு நாட்டு வர்த்தக உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் தெற்கு ஆப்பிரிக்கா வர்த்தக குழுவினரிடையே அதிபர் ராமாபோசேவும் பிரதமர் மோதியும் விரிவாக கலந்துரையாடினர்.  ஜனவரி 26-ம் தேதியன்று இந்திய அரசின் 70-வது குடியரசு தினக் கொண்டாட்டங்களில் பங்கெடுத்து கொண்ட அதிபர் ராமாபோசேவும், அவரது துணைவியார் முனைவர் சிபோ மோட்சுபேயும் முதன்மை விருந்தினராக பங்கேற்று சிறப்பித்தனர்.அன்று மாலை குடியரசு தலைவர் மாளிகையில் நடந்த வரவேற்பு உபசார விழாவிலும் இருவரும் பங்கெடுத்து கொண்டு சிறப்பித்தார்கள்.

1997 ஆண்டு முதலாகவே வரலாற்று, பண்பாட்டு பொருளாதார தொடர்புகளில் இந்தியாவும், தெற்கு ஆப்பிரிக்காவும் இணைந்து செயல்பட்டு வருகின்றன.  பிரேசில், ரஷ்யா,சீனா, தெற்கு ஆப்பிரிக்கா நாடுகளடங்கிய BRICS மகாநாடு கடந்த ஆண்டு ஜோகன்ஸ்பர்க் நகரில் நடைபெற்றது முதலாகவே 15 இலட்சத்திற்கு அதிகமான இந்திய வம்சா வழியினர் தெற்கு ஆப்பிரிக்காவில் இரு நாட்டு உறவுகளை பறைசாற்றி வருகின்றனர்.150-க்கும் மேற்பட்ட இந்திய வணிக நிறுவனங்கள் தெற்கு ஆப்பிரிக்காவில் முதலீடு செய்து 20,000-க்கும் மேற்பட்ட ஆப்பிரிக்க மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளனர்.

தெற்கு ஆப்பிரிக்காவில் முதலீடு  செய்துள்ள 5 மிகப்பெரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக திகழ்கின்றது.  2017-18 ஆண்டுகளில் 938 கோடி அமெரிக்க டாலர்கள் என்ற அளவில் இருந்த இருதரப்பு வர்த்தகம் 2018-19 ஆண்டுகளில் 1065 கோடி அமெரிக்க டாலர்கள் என்ற இலக்கை எட்டியுள்ளது.

ஐக்கிய நாடுகள், G-20, இந்திய பெருங்கடல் அமைப்பு, IBSA, BRICS போன்ற பல்வேறு அமைப்புகளில் இந்தியாவும், தெற்கு ஆப்பிரிக்காவும் இரட்டை சூழல் துப்பாக்கிகளை போல இணைந்து செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்க நிகழ்வாகும்.

டாக்டர் நெல்சன் மண்டலே தலைமையிலான ஆப்பிரிக்கா தேசீய காங்கிரசை முதன்முதலாக உலகுக்கு பறை சாற்றியது இந்திய அரசேயாகும்.

1990-ம் ஆண்டுகளில் இன வேற்றுமை ஒழிந்த பின்னர் முதலில் அமைந்த அதிபர் பெட்ரிக் D  கிளர்க் அவர்களின் கட்சிக்கு தூதரக உறவுகளின் மூலம் பலப்படுத்தியது இந்திய அரசேயாகும்.  சிறையிலிருந்து வெளிவந்த நெல்சன் மண்டேலே முதன்முதலில் இந்திய பயணம் மேற்கொண்டு சிறப்பித்தார். மண்டலே –வுக்கு பாரத் ரத்னா விருது வழங்கி இந்திய அரசு சிறப்பித்தது.  மண்டேலேவுக்கு காந்தி சமாதான விருது வழங்கிய இந்திய அரசு பல்வேறு வளர்ச்சி திட்டங்களில் தெற்கு ஆப்பிரிக்க அரசுடன் இணைந்து செயலாற்றி வருகின்றது என்று கூறினால் அது மிகையாகாது.