வெனிசுலாவின் நெருக்கடி ஆழமாகிறது

சமூக நிறுவனங்களின் இயக்குனர் டாக்டர் ஆஷ் நாராயண ராய் ஆங்கிலத்தில் எழுதிய ஆய்வுரையைத் தமிழில் வழங்குபவர் வீர.வியட்நாம்

கடந்த சில நாட்களாகவே அரசியல் ஸ்திரமின்மை, வன்முறை, உயர் பணவீக்கம், உணவு மற்றும் மருந்துகளுக்கான பற்றாக்குறையால் வெனிசுலா மோதிக்கொண்டிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் 30 இலட்சம் வெனிசுலாக்காரர்கள் அந்நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர், அதாவது 12ல் ஒரு வெனிசுலாக்காரர் தன் சொந்த நாட்டை விட்டு வெளியேற்றியுள்ளார். அவர்களுள் பெரும்பாலோனோருக்கு கொலம்பியா இடம் அளித்துள்ளது. பெரு, ஈக்குவேடார், அர்ஜென்டினா, சிலி ஆகிய நாடுகளும் வெனிசுலாக்காரர்களுக்கு புகலிடம் அளித்துள்ளனர்.

இலத்தீன் அமெரிக்காவின் புகலிடம் குறித்த திறந்தவெளிக் கொள்கைக்கே நன்றி கூறவேண்டும். உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஆதாரம் கொண்ட நாடான வெனிசுலா, மாபெரும் ஏற்ற இறக்கங்களை சந்தித்துள்ளது. இது அபரிமிதத்தின் புதிராகவும் உள்ளது. அந்நாட்டின் ஏற்றுமதி வருமானத்தில் எண்ணெய்யின் மதிப்பு 98 சதவீதமாக உள்ளது. அதன் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில்  இது 50 சதவீதமாகும். ஒரு பெட்ரோலிய நாட்டிற்கு  சராசரியாக நடக்கும் உயர்ச்சியும் வீழ்ச்சியுமே வெனிசுலாவின் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியில் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள வளமையே சாபமாக மாறி அந்நாட்டு அரசாங்கத்தின் மேல் பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது.

வெனிசுலாவின் அரசியல் நெருக்கடி தற்போது ஒரு நெருக்கடியான சூழலில் நுழைந்துள்ளது. எதிர்க்கட்சி தலைவர் ஜூவான் கய்டோ தன்னிலையாக அறிவித்த சுயாட்சியை பல்வேறு உலகத்◌தலைவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரா, தன்  அதிபர் பதவியை தக்கவைப்பதற்கான  கடினமான சோதனையை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. முன்னாள் அதிபர் ஹூயூகோ சாவேசும்  அமெரிக்க எதிர்ப்பையும் பொருளாதாரத் தடைகளையும் சந்திக்க வேண்டியிருந்தது, ஆனால் அவர் கொண்டுவந்த பரவலான நீதிமுறையும் வேறு சில நடவடிக்கைகளும், வெனிசுலா அரசியலை புதிய மாற்றுக்கு கொண்டு வந்ததும்  பெரும்பாலான வெனிசுலாக்காரர்களின் ஆதரவை அவருக்குப் பெற்றுத் தந்தது.

புஷ் நிர்வாகத்தில் ஆரம்பித்து பொலிவேரிய புரட்சியை கலைக்க அமெரிக்கா முயற்சித்தது. 2002ஆம் ஆண்டு, ஒரு இராணுவ புரட்சி கிட்டத்தட்ட வெற்றியடைந்தது. ஆனால் மக்களின் ஆதரவு சாவேசை மீண்டும் பதவியில் அமர்த்தியது. மதுரோவின் அரசை நிலைகுலைய வைக்க அமெரிக்க அரசாங்கங்கள் தொடர்ச்சியாக முயற்சித்தன. முன்னாள் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ரெக்ஸ்  டில்லர்சன், ஓர் இராணுவு புரட்சிக்கான சாத்தியக்கூற்றை அதிகரித்தார். அங்குள்ள மனிதாபிமான நெருக்கடிகளை களைவதற்காக, தேசிய அசெம்பிளியானது வெனிசுலா அதிபர் மதுரோவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் இராணுவம் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற அறைகூவல்கள் எழுந்தன. அத்தகைய வெளிப்படையான குறுக்கீடுகள்  நாட்டினை ஒரு முகப்படுத்தியுள்ளன. எனினும் வெளிநாட்டு குறுக்கீடுகள் ஏற்றுகொள்ளக்கூடியவை அல்ல.

இலத்தீன் அமெரிக்காவில் அமெரிக்கா குறுக்கிட்டதற்கு நீண்ட நெடிய வரலாறு உண்டு. 1954ஆம் ஆண்டு குவாட்டிமாலாவில் ஜேக்கப்போ அர்பென்ஸ் அரசுக்கு எதிரான சிஐஏ தலைமையிலான இராணுவ ஆட்சியாக இருந்தாலும் சரி, 1962ஆம் ஆண்டின் க்யூப எறிகணை நெருக்கடியாக இருந்தாலும் சரி, 1965ஆம் ஆண்டில் டொமினிய குடியரசின் இராணுவ குறுக்கீடாக இருந்தாலும் சரி, 1973ஆம் ஆண்டு சிலியில் சால்வடார் அலெண்டே அரசுக்கு எதிரான  இராணுவ கலகமாக இருந்தாலும் சரி, எல்லாவற்றிலுமே அமெரிக்காவின் தலையீடு உண்டு. சென்ற ஆண்டு நடைபெற்ற, வெனிசுலாவின் கடந்த தேர்தலை எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. அப்போது வெனிசுலாவின் தற்போதைய அதிபரான மதுரோ இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சென்ற வாரம் மதுரோவின் போட்டியாளரான குவான் குவைடோ தன்னை செயல் அதிபராக அறிவித்ததிலிருந்து மதுரோ கடும் நெருக்கடியில் உள்ளார். அமெரிக்காவும் பல்வேறு இலத்தீன் அமெரிக்க நாடுகளும் தற்போது குவைடோவை அதிபராக ஆதரிக்கின்றன. உடனடியாக அதிபர் மதுரோ தேர்தலைச் சந்திக்கவேண்டும், இல்லை என்றால் குவைடோவின் தலைமையை தாங்கள் ஏற்றுக்கொள்ள நேரிடும் என்று ஐரோப்பிய சக்திகள் கூறுகின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிக்கையானது மிகவும் எச்சரிக்கை மிகுந்ததாக இருக்கும்போதும், ஐக்கிய ஒன்றியமும் பிரான்சும் ஒரு கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளன. புதிதாக தேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வெனிசுலா நிராகரித்துள்ளது. வெளியுறவுத்துறை  அமைச்சர் ஜார்கே அரியசா அழுத்தமான தந்திரங்களை மறுத்துள்ளார். எல்லா விருப்பத்தேர்வுகளும் மேசையின் மீது உள்ளன என்று அமெரிக்கா வெனிசுலாவை எச்சரித்துள்ளது.

மதுரோவின் ஆட்சிக்கு இரஷ்யா முழு ஆதரவு அளித்துள்ளது. எதிர்க்கட்சி தலைவருக்கு வெளிநாடுகள் ஆதரவளிப்பது சர்வதேச சட்டத்தை மீறுவதாகும் என்று மாஸ்கோ ஒரு நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இது இரத்தவெள்ளத்திற்கான நேரடி பாதையாகும். சீனா, மெக்சிகோ மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் மதுரோவின் அரசின் பக்கம் சாய்ந்துள்ளன.

மற்றொரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாமல் இருப்பதே தங்கள் கொள்கை என்ற தன் நிலைப்பாட்டை இந்தியா ஆழமாக தெரிவித்துள்ளது. பல்வேறு தென் அமெரிக்க நாடுகளிலும் வெனிசுலாவுடன் இந்தியா சிறந்த உறவுகளை பாராட்டியுள்ளது. வன்முறைக்கு ஆட்படாமல் பேச்சுவார்த்தையின் மூலமும் ஆக்கபூர்வமான விவாதத்தின் மூலமும் தங்கள் கருத்து வேறுபாடுகளைக் களைந்து அரசியல் தீர்வு காணவேண்டியவர்கள் வெனிசுலாவின் மக்கள்தான் என்று புதுதில்லி நம்புகிறது. இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. வெனிசுலாவின் நடைபெற்றுவரும் அரசியல் சூழ்நிலையை இந்தியா கவனமாகக் கண்காணித்து வருகிறது.

வெனிசுலா மக்களின் முன்னேற்றத்திற்கும் வளமைக்கும் அந்நாட்டில் ஜனநாயகம், அமைதி மற்றும் பாதுகாப்பு  ஆகியவை முக்கியம் என தான் நம்புவதாக இந்தியா தெரிவித்துள்ளது. அணிசேராக் கொள்கை மற்றும் குறுக்கிடாமல் இருப்பது என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. அந்நாட்டில் ஆட்சிமாற்றம் நடைபெறுவதை இந்தியா ஆதரிக்கவில்லை.  அங்கு ஜனநாயகத்தை வளர்க்கவேண்டும் என்ற மேற்கத்திய நாடுகளின் அழைப்பையும் இந்தியா மறுத்துள்ளது. தங்கள் நாட்டின் நலனுக்கு எது தேவை என்று முடிவெடுத்து நெருக்கடியை சமாளிப்பது வெனிசுலா மக்களின் கையிலேயே உள்ளது.