“ பி பி ஐ என் ‘ துணை பிராந்திய ஒத்துழைப்புக்கான சாத்தியக்கூறுகள் “

 

தெற்காசிய செலுத்தி ஆய்வாளர் டாக்டர் ஸ்ம்ருதி எஸ் பட்நாயக் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் ஆ.வெங்கடேசன்.
பொருளாதார ஒருங்கிணைப்புகள் பல நாடுகளுக்கு முன்னுரிமையையாக உள்ளது, பிராந்திய ஒத்துழைப்பு என்பது பிராந்தியத்தில் உள்ள நாடுகளை பொதுவான தளத்தில் கொண்டுவருவதற்கான மாற்றும் திறனாக உள்ளது. தெற்காசியாவில் தொடர்பு என்பது பூலோக அரசியல் மூலமாக பார்க்கப்படுவதால் இந்தப் பிராந்தியத்தில் தேவையான தொடர்பு தோல்வி அடைந்துள்ளதை தெற்காசியா கண்டுள்ளது. துணை பிராந்திய ஒத்துழைப்பில், ஒரே மாதிரியான எண்ணங்கள் உடைய புவியியல் ரீதியாக நெருக்கமாக உள்ள நாடுகள் மற்றும் ஒரே மாதிரியான முன்னேற்ற முன்னுரிமைகள் கொண்ட நாடுகள், ஒன்று சேர்ந்து செயல்பட முடியும். அந்தவகையில் பங்களாதேஷ் -பூட்டான் -இந்தியா – நேபால்,( பி பி ஐ என்) துணை பிராந்திய ஒத்துழைப்பில் அதிக நாணயத்தை பெற்றுள்ளது. பி பி ஐ என் என்பது துணை பிராந்திய ஒத்துழைப்பில், சார்க் அமைப்பில் ஒரு அங்கம் வகிப்பது மட்டுமல்லாமல், தெற்காசியாவின் கிழக்குப் பகுதியை போக்குவரத்து தொடர்பு மற்றும் ஆற்றல் மூலமாக இணைப்பதற்கு உத்தரவாதம் அளிக்கிறது.
காட்மாண்டுவில் நடைபெற்ற சார்க் உச்சிமாநாட்டில் சார்க் மோட்டார் வாகன ஒப்பந்தம் MVA தோல்வியடைந்த பிறகு, 2015 ஆம் வருடம் ஜூன் மாதம், BBIN இன் நான்கு உறுப்பினர் நாடுகள், தற்பொழுது இருக்கும் போக்குவரத்து தொடர்பில் ஒத்துழைப்பது, மற்றும் புதிய தடையில்லா தொடர்பை நான்கு நாடுகளுக்கிடையே ஏற்படுத்துவது என்று ஒப்புக்கொண்டனர். இந்தியா ,நேபால் மற்றும் பங்களாதேஷ் இதற்கு ஒப்புதல் அளித்துவிட்டது, பூட்டான் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. ஒப்பந்தத்தின்படி இந்த திட்டத்தை மேலெடுத்துச் செல்ல மற்ற மூன்று நாடுகளுக்கு, திம்பு பச்சைக்கொடி காட்டியுள்ளது, அந்நாட்டின் தேசிய சட்ட சபை சுற்றுச்சூழல் பிரச்சனையை எடுத்துள்ளதால், ஒப்புதல் அளிக்க இன்னும் சில கால அவகாசம் கேட்டுள்ளது. பூட்டான் தொடர்ந்து பார்வையாளராக கூட்டங்களில் கலந்து கொண்டு வருகிறது.
இந்த பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கிடையே பலதரப்பட்ட,  இணைப்பு திட்டங்கள் ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளன அல்லது செயல்படுத்தப்பட்டுள்ளன. நெடுஞ்சாலை மேம்படுத்துவது, ரயில் பாதையை மீட்டர் பாதையிலிருந்து அகலப்பாதைக்கு மாற்றுவது, மற்றும் 1965-ஆம் வருடம் முதல் இருந்து வரும் இணைப்பு பாதையை மறுசீரமைப்பது போன்றவற்றுக்காக அண்டை நாடுகளுக்கு இந்தியா கடன் வழங்கியுள்ளது. இந்தியன் ரயில்வே உடன் நேபாளத்தை இணைப்பதற்காக ரயில்வே பாதையையும் மேம்படுத்தி உள்ளது, மற்றும் காட்மாண்டு விற்கு தடையில்லா எரிவாயு எண்ணெய் வழங்குவதற்கு பெற்றோலிய குழாய் வழி அமைக்கப்பட்டு வருகின்றது. இந்த இணைப்பின் மூலம் வர்த்தகம் மற்றும் மக்களுக்கு இடையே தொடர்பு சிறப்படையும் என்பதே முக்கிய நோக்கமாகும். கலாதன் பல நிலை திட்டத்தையும் மற்றும் இந்தியா, மியான்மர் மற்றும் தாய்லாந்தைத் இணைக்கும் முத்தரப்பு நெடுஞ்சாலை திட்டத்தையும் இந்தியா மேம்படுத்தி வருகிறது.
பொருளாதாரரீதியாக, தெற்காசியாவின் பல ஓரங்களை இந்தத் திட்டம் இணைப்பதால், BBIN துணை பிராந்திய இணைப்பானது, புவி அரசியலில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளை மேம்படுத்த வேண்டியுள்ளது, இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் வழியாக ,நேபால் மற்றும் பூட்டான் நாடுகள், மிக அருகில் உள்ள பங்களாதேஷின் துறைமுகத்தை அணுக முடியும். நிலப்பரப்பு மூலமாக மூடப்பட்டிருக்கும், நேபால் மற்றும் பூட்டான் நாடுகளுடன் வர்த்தக உறவுகளை மேம்படுத்த, டாக்கா இந்த இணைப்பை உபயோகப்படுத்தும். வெற்றிகரமான சோதனை ஓட்டம் இந்த வழித்தடங்களில் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டது.
BBIN துணை பிராந்திய ஒத்துழைப்பில், தங்களது மின்சார வர்த்தகத்தை இணைப்பது என்று இந்த மூன்று நாடுகளும் முடிவு செய்துள்ளனர். இந்தியாவும் பங்களாதேஷும் ஏற்கனவே மின்சாரத்தில் வர்த்தகம் செய்து வருகின்றன. 660 மெகாவாட் மின்சாரம் பங்களாதேஷிற்கு வழங்கப்பட்டுள்ளது, வரும் காலத்தில் மேலும் 1000 மெகாவாட் மின்சாரம் வழங்க இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது. நேபால் மற்றும் பூட்டான் நாடுகளில் நீர்மின்சார திட்டங்கள் தவிர பங்களாதேஷில், ராம்பால் மின்சார நிலையத்திற்கும் இந்தியா முதலீடு செய்து வருகிறது. பூட்டானின் நீர்மின்சார திட்டத்தில் முதலீடு செய்ய பங்களாதேஷ் தற்பொழுது முடிவெடுத்துள்ளது, இந்தியா-பூட்டான் மின்சார விநியோக அமைப்பை உபயோகப்படுத்த உள்ளது. அதேபோல் ஏற்கனவே இருக்கும் இந்தியாவின் மின்சார விநியோக அமைப்பின் உதவியுடன் நேபாளத்தில் இருந்து மின்சாரத்தை பங்களாதேஷ் இறக்குமதி செய்ய உள்ளது. இதுபோன்ற வர்த்தகம் செயல்படுவதை அனுமதிக்கும் வகையில், இந்தியா, ஏற்கனவே, எல்லை தாண்டிய மின்சார வர்த்தக வரைவு திருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. பிராந்தியத்தின் ஆற்றல் தேவைகளை இதுபோன்ற துணை பிராந்திய மின்சார விநியோக அமைப்பு பூர்த்தி செய்கிறது.
BBIN என்பது பிராந்திய ஒத்துழைப்பில் ஒரு வெற்றிகரமான வாகனமாக தன்னை மாற்றிக் கொள்வதற்கான அனைத்து சாத்தியக் கூறுகளையும் கொண்டுள்ளது. துணை பிராந்திய ஒத்துழைப்பு வெற்றிகரமாக அமைய, தடையில்லா போக்குவரத்து, மற்றும் பலநிலை மோட்டார் வாகன ஒப்பந்தம், போக்குவரத்து இணைப்பு போன்றவை மிக முக்கியமாக தேவைப்படுகின்றது.