வளர்ந்து வரும் வெளிநாடுவாழ் இந்தியரின் தாய்நாட்டுப் பிணைப்புக்கள்.


(அரசியல் விமர்சகர் சுனில் கடாடே அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஆ.வெங்கடேசன்.) உலகின் பல்வேறு இடங்களில் வசிக்கும் இந்தியாவிலிருந்து புலம் பெயர்ந்தவர்கள் செய்த சாதனைகள் மற்றும் பங்களிப்புகளினால் இந்தியா மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளது. புலம்  பெயர்ந்தவர்கள் என்பதைக் குறிக்கும்  டயாஸ்போரா என்ற சொல், கிரேக்க மொழியிலிருந்து வந்ததாகும். சொந்த நாட்டை விட்டு வெளிநாடுகளுக்குப் பல காரணங்களுக்காக சென்று அங்கே வசிக்கும் மக்களை அச்சொல் குறிக்கும். இந்திய வம்சாவளியினராகவோ, வெளிநாடுவாழ்…

இந்தியாவிலேயே தயாரிப்போம் முயற்சி,  ஒரு வெற்றிகரமான கதை


  மூத்த பத்திரிகையாளர் சங்கர் குமார் ஆங்கிலத்தில் எழுதிய ஆய்வுரையைத் தமிழில் வழங்குபவர் வீர.வியட்நாம்   எந்தவொரு நாட்டிலும், வளர்ச்சி பெற வேண்டும் என்று முயற்சிக்கு அதன் உற்பத்தித்துறையின் சக்கரங்களை வேகமாகவும் திறமையாகவும் நகர்த்தவேண்டியது அவசியம். 2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் இந்தியாவிலேயே தயாரிப்போம் என்ற முக்கியக் கொள்கையை எடுத்ததற்கு இந்தக் குறிக்கோளே காரணமாகும். இதன் உண்மையான நோக்கம், நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு…

அமெரிக்காவும் துருக்கியும் குர்துகள் பற்றிய கேள்வியும்.


(மேற்காசியாவிற்கான செயலுத்தி ஆய்வாளர்  டாக்டர் மொஹம்மத் முடாசிர் குவாமர் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஸ்ரீபிரியா சம்பத்குமார்.) வட சிரியாவில், குர்துகள் தொடர்பான விவகாரத்தில் அமெரிக்காவுக்கும் துருக்கிக்கும் இடையில் மீண்டும் கடுமையான மோதல் உருவாகியுள்ளது. அலெப்போ பிராந்தியத்தில், மன்பிஜ், செயலுத்தி ரீதியாக முக்கியத்துவம் பெற்ற நகரமாகும். இந்நகரத்தை குர்துகள் படையின் ஆதிக்கத்தில் உள்ள எஸ்.டி.எஃப் எனப்படும் சிரிய ஜனநாயகப் படையின் கட்டுப்பாட்டிலிருந்து நீக்க, அங்கு தாக்குதல் நடத்தப்போவதாக துருக்கி…

பிரெக்ஸிட் ஒப்பந்தம் தோல்வி  –  எதிர்கால சாத்தியக்கூறுகள் பற்றிய ஒரு பார்வை


(ஐரோப்பிய விவகாரங்கள் செலுத்தி ஆய்வாளர் டாக்டர் சங்கமித்ரா ஷர்மா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம்  – ஆ. வெங்கடேசன்.) தெரசா மே அவர்களின் பிரெக்ஸிட் ஒப்பந்தம் 230 வாக்கு வித்தியாசத்தில் நிராகரிக்கப்பட்டதால், பிரெக்ஸிட் விஷயத்தில் நிச்சயமற்ற நிலை மேலும் கூடியுள்ளது. இதனோடு, தொழிலாளர் கட்சியின் தலைவர் ஜெரீமி கோர்பென் அவர்கள் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை முன்வைத்ததால், கன்சர்வேட்டிவ் அரசாங்கத்திற்கு நெருக்கடி அதிகரித்தது. இந்தத் தீர்மானத்திற்கு, ஸ்காட்ஸ் தேசிய கட்சி, தாராளவாத…

சி.பி.ஈ.சி செலவினங்களைக் குறைக்க முயல்கிறதா பாகிஸ்தான்?


(ஐ.டி.எஸ்.ஏ தெற்காசிய மைய இணை ஆய்வாளர் டாக்டர். ஸாய்னாப் அக்தர் ஆவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஸ்ரீபிரியா சம்பத்குமார்.) இம்ரான் கான் தலைமையிலான பி.டி.ஐ என்ற பாகிஸ்தான்-தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சி அரசாங்கம், சி.பி.ஈ.சி எனப்படும் சீனா பாகிஸ்தான் பொருளாதார வழித்தடப் பணித்திட்டத்தில் அதிக வெளிப்படைத் தன்மையைக் கொணர்ந்து லஞ்சத்தை ஒழிக்க, இத்திட்டத்தை மறு ஆய்வு செய்யப்போவதாகக் கூறியிருந்தது. இந்த மாத இறுதியில் துவங்கவிருக்கும் பொதுத் துறை வளர்ச்சித் திட்டத்தின் விரிவான…

சபஹார் இந்தியா, ஈரான், ஆப்கானிஸ்தான் முத்தரப்பு உறவுகளுக்கு ஓர் மணி மகுடம்.


(மூத்த பொருளாதார விமரிசகர் சத்யஜித் மொஹாந்தி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் –  ஆ.வெங்கடேசன்.) சபஹார் ஒப்பந்தம் என்று பிரபலமாக அழைக்கப்படும் சர்வதேச போக்குவரத்து வழித்தடத்தின் மீது  இந்தியா, ஈரான், ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கிடையே ஏற்பட்டுள்ள முத்தரப்பு ஒப்பந்தமானது, பலசுற்று பரபரப்பான பேரங்களுக்கக் கிடைத்த பலன் ஆகும். ஈரான் நாட்டில் சிஸ்டன்- பலுசிஸ்தான் மாகாணத்தில் அமைந்துள்ள, வர்த்தகத்துக்கு மிகவும் முக்கியமான சபஹார் துறைமுகத்தை, இந்தியா போர்ட்ஸ் குளோபல் லிமிடெட் என்ற நிறுவனம்,…

உறவை மேம்படுத்தும் அமைச்சர்கள் நிலையிலான இந்தியா – மத்திய ஆசியா பேச்சுவார்த்தைகள்.


(மத்திய ஆசியா பற்றிய செயலுத்தி ஆய்வாளர் டாக்டர், அதர் ஸஃபர் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஸ்ரீபிரியா சம்பத்குமார்) இந்தியாவுக்கும் கஸகஸ்தான், கிரிகிஸ்தான், தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய மத்திய ஆசியாவின் ஐந்து குடியரசுகளுக்கும் இடையில், வெளியுறவுத் துறை அமைச்சர்கள் நிலையிலான இந்தியா-மத்திய ஆசியா பேச்சுவார்த்தைகள் உஸ்பெகிஸ்தானின் சமர்கண்டில் நடைபெற்றது. இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் திருமதி சுஷ்மா ஸ்வராஜும் உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் திரு.…

இந்திய, நேபாள இருதரப்பு உறவுகள் ஆய்வு.


(அரசியல் விமரிசகர் ரத்தன் சால்டி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி) புதுதில்லியில் நடைபெற்ற நான்காவது ரெய்ஸினா பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள, நேபாள வெளியுறவு அமைச்சர் பிரதீப் குமார் கியாவாலி அவர்கள் கடந்த வாரம் புதுதில்லி வந்திருந்தார். இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டு அவர், இந்திய வெளியுறவு அமைச்சர் திருமதி சுஷ்மா ஸ்வராஜ் அவர்களை சந்தித்து, இருதரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தினார். 2018 ஆம் ஆண்டிற்குப் பின்னர்,…

நாடாளுமன்றத்தில்  சென்ற வாரம் நடந்தவை


பத்திரிக்கையாளர்    வி.மோஹன் ராவ் ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம் சத்யா அசோகன் பொருளாதார ரீதியாக நலிந்த முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில்  நிறைவேற்றப்பட்டதுடன் 16வது மக்களவையின் இறுதி கூட்டத்தொடருக்கு முந்தைய கூட்டத்தொடரில் நிறைவடைந்தது.  அரசு நிறுவன உயர்கல்வி மற்றும் அரசு வேலை வாய்பில் பொருளாதார ரீதியாக நலிந்த பொதுப்பிரிவினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வழி செய்வதற்காக அரசியல் சாசன சட்டத்தை திருத்துவதற்கான மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. அரசியல் சாசன 124வது சட்ட…

தெரஸா மே அவர்களின் அரசுக்கு பிரக்ஸிட் விடுக்கும் சவால்.


(ஐரோப்பிய விவகாரங்களுக்கான செயலுத்தி ஆய்வாளர் தினோஜ் குமார் உபாத்யாய் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி) பிரிட்டன் பிரதமர் தெரஸா மே அவர்களுக்கு, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அமைப்பிலிருந்து பிரிட்டன் விலகுவதற்கான ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் எனப்படும் நாடாளுமன்ற மேலவை  ஒப்புதல் பெறுவதில் பெரும் சிக்கல் எழுந்துள்ளது போல் தோன்றுகிறது. ஒருவேளை இதற்கான ஒப்புதல் கிடைக்காத பட்சத்தில், அரசுக்கு வரியை உயர்த்தும் அதிகாரத்தைக் குறைக்கும் நிதி திருத்த மசோதா,…