ரஷ்யா-சீனா-இந்தியா சந்திப்பு – ஒருங்கிணைப்பில் வலுசேர்ப்பு.


(சீன, யூரேஷிய விவகாரங்களுக்கான ஆய்வாளர் சனா ஹாஷ்மி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி) சீனாவிலுள்ள வூசென் நகரில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனாவின் வெளியுறவு அமைச்சர்களின் 16 ஆவது உச்சிமாநாடு நடைபெற்றது. முன்னதாக, டோக்லாம் பிரச்சனை முடிவுக்கு வந்த சமயத்தில், 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் புதுதில்லியில் இம்மூன்று நாட்டு வெளியுறவு அமைச்சர்களின் 15 ஆவது உச்சிமாநாடு நடைபெற்றது. இம்மூன்று நாட்டு வெளியுறவு அமைச்சர்களும், 2018…

இந்தியாவின் முன்னெச்சரிக்கைத் தாக்குதல் – புல்வாமா தாக்குதலுக்கு சரியான பதிலடி.


(டாக்டர் அஷோக் பெஹூரியா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம்  – ஆ. வெங்கடேசன்.) இம்மாதம் 26 ஆம் தேதி அதிகாலையில் இந்திய விமானப்படை, எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டைத்  தாண்டி, பாகிஸ்தானிலுள்ள பாலாகோட், சகோடி மற்றும் முஸஃப்ஃபராபாத் ஆகிய இடங்களில் அமைந்திருந்த ஜெய்ஷ்-ஏ-முகமதுவின் பயங்கரவாத முகாம்களை மிகவும் துல்லியமாகத் தாக்கி அழித்தது. இந்தத் தாக்குதலில், அதிக அளவிலான ஜெயிஷ் பயங்கரவாதிகள், பயிற்சியாளர்கள், மூத்த தளபதிகள், மற்றும் நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட ஜிகாதிகள்…

விவசாயிகளுக்கான முதன்மைத் திட்டம் – பிரதமர் துவக்கி வைப்பு.


(பத்திரிக்கையாளர் யோகேஷ் சூது அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஆ. வெங்கடேசன்.) இந்தியாவிலேயே மிகப்பெரும் பிராந்தியமான உத்தரப் பிரதேசத்திலுள்ள கோரக்பூரில், பிரதமர் நரேந்திர மோதி அவர்கள், பி.எம். கிசான், அதாவது, பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி எனப்படும் விவசாயிகளுக்கான முதன்மைத் திட்டத்தைத் துவக்கி வைத்தார். அப்போது, முதல் தவணையாக, ஒரு கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் ரூ.2,000/- நேரடியாக வரவு வைக்கப்பட்டது. இத்திட்டத்தைத் துவக்கி வைத்துப் பேசிய…

இந்திய, தென்கொரிய உறவுகளுக்கு வலு சேர்ப்பு.


(கிழக்கு,தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் ராகுல் மிஷ்ரா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி) 2014 ஆம் ஆண்டில், மிகுந்த உற்சாகத்துடனும், உத்வேகத்துடனும் துவக்கப்பட்ட இந்தியாவின் கிழக்கு நோக்கிய செயல்பாட்டுக் கொள்கை, வலுவாக முன்னேறி, இந்தோ – பஸிஃபிக் பிராந்தியம் வரை விரிவடைந்துள்ளது. இதற்கு பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் முன்னின்று வழிநடத்தியுள்ளார் என்பதற்குச் சான்றாக, தென்கொரியாவுக்கு அவர் அண்மையில் மேற்கொண்ட பயணம் அமைந்துள்ளது. பிரதமர்…

கொள்கையில் தெளிவு பெற வேண்டிய கட்டாயத்தில் சீனா


  சீன மற்றும் யுரேஷிய விவகாரங்கள் குறித்த ஆய்வாளர் சானா ஹாஷ்மி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் பி குருமூர்த்தி சீனாவின் அண்மைக் கால வெளியுறவுக் கொள்கை நடவடிக்கைகள், அவற்றின் குறைபாடுகளையும் வெளிப்படைத் தன்மையின்மையையும் வெளிப்படுத்தியுள்ளன. பெல்ட் மற்றும் சாலை முன்னெடுப்புகள் குறித்த அதன் கூட்டாளிகளான மலேசியா, இலங்கை ஆகிய நாடுகளின் கவலைகள் மற்றும் சந்தேகங்கள் சீனாவின் முதலீடுகள் மற்றும் தொடர்புகளின் இரட்டை நிலைப்பாட்டை எடுத்துக்காட்டுகின்றன. மேலும், அமெரிக்காவுடனான வர்த்தகப்போரும்…

ஏறுமுகத்தில் இந்தியா – சௌதி அரேபியா உறவுகள்


(மேற்காசியாவிற்கான செயலுத்தி ஆய்வாளர்  டாக்டர். முகமது முடாசிர் குவாமர் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஸ்ரீபிரியா சம்பத்குமார்.) சௌதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான், இந்த வாரம், இந்தியாவிற்கான தனது முதல் அரசுமுறைப் பயணத்தை மேற்கொண்டார். இந்தப் பயணம், இந்தியா-சௌதி அரேபியா இடையிலான உறவுகளில் ஏற்பட்டுள்ள உத்வேகத்துடன் கூடிய ஒரு புதிய முனைப்பை எடுத்துக்காட்டுகின்றது. முகமது பின் சல்மான் அவர்களுடன் ஒரு பெரிய பிரதிநிதிக் குழு வந்திருந்தது.…

பாகிஸ்தானின் வீண் முயற்சி.


காஷ்மீரில் 40 இந்திய மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்களைக் காவு கொண்ட புல்வாமா பயங்கரவாதத் தாக்குதல் நடந்து, ஒருவாரம் கழித்து, அரைமனதுடன், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், தங்கள் நாட்டின் மீதான குற்றச்சாட்டுகளிலிருந்து விடுபட முயன்றுள்ளார். உலகின் கவனம் முழுவதும் பாகிஸ்தானின் மீது திரும்பிய நிலையில், அவரது இம்முயற்சி வலுவற்ற நிலையில் வெளிப்படுகிறது. பயங்கரவாதத்தைத் தங்கள் ஆட்சியின் கருவியாகவே உபயோகப்படுத்தும் கொள்கையை பாகிஸ்தான் மேற்கொண்டுள்ளது என்பதை உலகறியும். புல்வாமாவில் நடத்தப்பட்ட…

அர்ஜென்டினா அதிபரின் இந்தியப் பயணம்.


(சமூக அறிவியல் மைய இயக்குனர், டாக்டர் ஆஷ் நாராயண் ராய் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஆ.வெங்கடேசன்.) அர்ஜென்டினா கால்பந்து மற்றும் டாங்கோ நடனத்திற்குப் பெயர் பெற்ற நாடாகும். தென் அமெரிக்க நாடுகளில் மக்களுக்கு கால்பந்து தான் கடவுள். அவர்கள் அதிலேயே மூழ்கி விடுவார்கள். மரடோனா ,மெஸ்ஸி மற்றும் பதிஸ்டுவா போன்ற பிரபல கால்பந்தாட்ட வீரர்களின் உருவச் சிலைகள், பியூனஸ் ஏர்ஸ் மற்றும் இதர நகரங்களை அலங்கரிக்கின்றன. கால்பந்து…

இந்தியா – மொராக்கோ உறவுகளுக்கு ஊக்கம்.


( வட ஆப்பிரிக்க நாடுகளுக்கான செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் மீனா சிங் ராய் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஸ்ரீபிரியா சம்பத்குமார்.) வட ஆப்பிரிக்காவுடனான இணைப்புக்களை வலுப்படுத்தும் முயற்சிகளின் ஓர் அங்கமாக, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் திருமதி சுஷ்மா ஸ்வராஜ் அவர்கள், மொராக்கோ நாட்டிற்கான தனது முதல் பயணத்தை மேற்கொண்டார். மொராக்கோவுடனான இந்தியாவின் உறவுகளுக்கு புத்துயிரூட்டி, இந்தப் பகுதிகளில் மாறிவரும் புவிசார் அரசியல் சூழலில் இந்தியாவின் செயலுத்திக்…

தீவிரவாதத்தை ஒழிப்பதில் சர்வதேச ஒத்துழைப்பு.


(ஐ.நா. வுக்கான, இந்தியாவின் முன்னாள் நிரந்தரப் பிரதிநிதி அஷோக் முகர்ஜி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி) கடந்த வாரம், ஜம்மு- காஷ்மீரில்,  புல்வாமாவில் மத்திய பாதுகாப்புப் படையினரின் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலில், 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். பல வீரர்கள் படுகாயமடைந்தனர். இத்தாக்குதலுக்குத் தான் காரணம் என்று, பாகிஸ்தான் மண்ணிலிருந்து செயல்பட்டு வரும் ஜெயிஷ் ஏ முகம்மது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இச்சம்பவம், தீவிரவாதத்துக்கு எதிரான…