டாக்டர் எம் சமதா ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம். தமிழில் பி இராமமூர்த்தி.
கடந்த டிசம்பர் மாதத்தில் மாலத்தீவின் அதிபர் இப்ராஹிம் முகமது சோலி இந்திய பயணம் மேற்கொண்டிருந்த வேலையில் நுழைவு விசா ஒப்பந்தம் இரு நாடுகளுக்கிடையே கையெழுத்தாகியது, இருதரப்பு உறவில் சிறந்த முன்னேற்றம் என்று கூறிலாம். மாலத்தீவு அதிபர் பயணத்தின் போது பண்பாட்டுதுறை, விவசாயம், தொழில் தொடர்பு துறைகளில் உதவி செய்யும் வகையில் 140 கோடி அமெரிக்க டாலர்கள் அளவிற்கு உதவிகளை மாலத்தீவிற்கு இந்திய அரசு அறிவித்தத்து.
சுற்றுலா, கல்வி, மருத்துவம், தொழிற்துறை ஆகியவற்றிற்காக இந்தியர்கள் மாலத்தீவிற்கு செல்லவும் மாலத்தீவு நாட்டினர் இந்தியாவிற்குள் வரவும் உறுதி செய்ய நுழைவு விசா ஒப்பந்தம் வருகின்ற மார்ச் 11-ம் தேதியன்று நடைமுறைபடுத்தபடும் வகையில் தேவையான முயற்சிகளை வெளியுறவு துறை அமைச்சகம் மேற்கொண்டுள்ளது. கடந்த2018-ம் ஆண்டில் மட்டும் 91,000-க்கும் அதிகமான இந்தியர்கள் மாலத்தீவுகளுக்கு சுற்றுலா மேற்கொண்டனர். 2018-ம் ஆண்டில் சீனா இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலி போன்ற நாடுகளில் இருந்தும் பெருமளவில் மாலத்தீவுகளுக்கு சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர்.
சுகாதாரம், கல்வி மற்றும் சுற்றுலா போன்ற துறைகளில் மாலத்தீவுகளில் இந்திய பணியாளர்கள் அதிகமாக வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு நுழைவு விசா ஒப்பந்தம் பெருமளவில் உதவி செய்யும் எனலாம். மாலத்தீவின் முன்னாள் அதிபர் யாமீன் ஆட்சிகாலத்தில் நுழைவு விசா வழங்குவதில் ஏகப்பட்ட குளறுபடிகள் ஏற்பட்டது. இது குறித்து கேரள முதலமைச்சர் இந்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தற்போது நுழைவு விசா ஒப்பந்தம் இரு நாடுகளுக்கிடையே ஏற்பட்டுள்ளது.
சுற்றுலா, கணிணி தொழில் நுட்பம், கட்டமைப்பு துறை ஆகிய துறைகளில் பல்வேறு இந்தியர்கள், மாலத்தீவில் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு உதவி செய்யும் வகையில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, டாடா குழுமம், தாஜ் குழுமம் ஆகியோரும் திறம்பட தொழில் துறையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்திய நிறுவனங்கள் மாலத்தீவுகளில் முதலீடு செய்து தொழில் துவங்க வேண்டுமென்று கேட்டுக் கொண்ட மாலத்தீவு அதிபர் கடந்த டிசம்பர் மாதத்தில் இந்திய தொழில் முனைவோர்களிடம் விரிவாக விவரித்தது குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். 2018-19-ம் ஆண்டில் இந்தியாவின் மாலத்தீவுகளுக்கான உதவி 125 கோடிகள் என்ற அளவில் இருந்து 2019-20 ஆண்டில் 575 கோடிகளாக உயர்த்தி அளிக்கப்பட்டுள்ளது.
இலங்கையிலும், மாலத்தீவுகளிலும், இந்து மகா சமுத்திரத்திலும் வளர்ந்து வரும் சீன ஆதிக்கத்தை எதிர்கொள்ளும் வகையில் மாலத்தீவுகளின் கடற்பகுதிகளில் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க இந்திய அரசு பல்வேறு வழிகளிலும் மாலத்தீவுற்கு உதவி செய்ய முன்வந்துள்ளது. மாலத்தீவுகளின் தேர்தலில் வெற்றி பெற்று புதிய அதிபர் பதவி ஏற்றது முதலாகவே இந்தியா-மாலதீவு இருதரப்பு உறவில் புதிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது எனலாம். இரு நாட்டு மக்களும் அனைத்து துறைகளிலும் இணைந்து செயல்படும் வகையிலும் வர்த்தகத்தை முன்னெடுத்து செல்லும் வகையிலும் நுழைவு விசா ஒப்பந்தம் உதவி செய்யும் எனக் கூறலாம். வருகின்ற ஏப்ரல் மாதத்தில் மாலத்தீவுகளில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல்கள் இந்தியாவுடன் ஆன இருதரப்பு உறவை மேலும் பலப்படுத்தும் வகையில் அமையும் என்று கூறினால் அது மிகையாகாது