இந்திய மாலத்தீவு இருதரப்பு உறவுகள்


டாக்டர் எம் சமதா ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம். தமிழில் பி இராமமூர்த்தி. கடந்த டிசம்பர் மாதத்தில் மாலத்தீவின் அதிபர் இப்ராஹிம் முகமது சோலி இந்திய பயணம் மேற்கொண்டிருந்த வேலையில் நுழைவு விசா ஒப்பந்தம் இரு நாடுகளுக்கிடையே கையெழுத்தாகியது, இருதரப்பு உறவில் சிறந்த முன்னேற்றம் என்று கூறிலாம்.  மாலத்தீவு அதிபர் பயணத்தின் போது பண்பாட்டுதுறை, விவசாயம், தொழில் தொடர்பு துறைகளில் உதவி செய்யும் வகையில் 140 கோடி அமெரிக்க டாலர்கள் அளவிற்கு…

பெட்ரோடெக் 2019 – ஏறுமுகத்தில் இந்தியாவின் எரிசக்தி நிலை.


(அரசியல் விமரிசகர் சுனில் கடாடே அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி) சமீபத்தில் நடந்து முடிந்த பெட்ரோடெக் 2019 மாநாட்டின் முக்கிய நிகழ்வாக, வெனிசுவேலா, இந்தியாவுக்குத் தனது பெட்ரோலியப் பொருட்களின் ஏற்றுமதியை இரட்டிப்பாக்க முடிவு செய்ததைக் குறிப்பிடலாம். தனது கச்சா எண்ணெய்த் துறை அமைச்சரை பெட்ரோடெக் 2019 மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியாவுக்கு அனுப்பியது வெனிசுவேலா, அவர், இந்தியாவிலுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளிடம் வெனிசுவேலிருந்து கச்சா எண்ணெய்க் கொள்முதலை…

புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான்


(ஆல் இந்தியா ரேடியோ செயலுத்தி ஆய்வாளர் கௌஷிக் ராய் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஸ்ரீபிரியா சம்பத்குமார்.) ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில், நேற்று, பாகிஸ்தான் ஆதரவுபெற்ற பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-ஏ-மொஹம்மத் நடத்திய கொடூரமான தாக்குதலில், மத்திய ரிசர்வ் காவல் படையைச் சேர்ந்த சுமார் நாற்பது இந்திய வீரர்கள் உயிர்த் தியாகம் செய்தனர். 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஊரியிலுள்ள எல்லை பாதுகாப்புப் படை முகாமில் தாக்குதல் நடத்தப்பட்டது.…

நாடாளுமன்றத்தில் இந்த வாரம்.


(பத்திரிக்கையாளர் வி,மோகன் ராவ் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி) 16 ஆவது நாடாளுமன்ற இறுதிக் கூட்டத் தொடர், இருஅவைகளிலும் நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ளது. வரவிருக்கும் பொதுத் தேர்தலை முன்னிட்டு, முன்னதாகவே, மறு தேதி குறிப்பிடாமல் நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இருவாரங்கள் நடைபெற்ற மக்களவைக் கூட்டத் தொடரின் கடைசி நாளான நேற்று உரையாற்றிய பிரதமர் திரு நரேந்திர மோதி, தமது அரசின் சாதனைகளைப் பட்டியலிட்டார். முக்கியமான மசோதாக்களை நிறைவேற்ற…

ஊக்கம் பெறும் சீனாவுக்கான இந்திய ஏற்றுமதி.


(தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் மூத்த சிறப்பு நிருபர் மணீஷ் ஆனந்த் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஆ.வெங்கடேசன்.) நடப்பு நிதி ஆண்டின் முதல் 9 மாதங்களில், சீனாவிற்கு இந்தியாவின் விவசாய ஏற்றுமதி, திருப்திகரமான 70 சதவீதம் அளவு உயர்ந்துள்ளது. அமெரிக்காவுடன் வர்த்தக இடைவெளி ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில், சீனா, இந்தியாவின் விவசாயப் பொருட்களுக்குத் தனது கதவை மேலும் திறந்துள்ளது. சீனா, மொத்தம் 870 கோடி டாலர்…

மீண்டும் ஒரு முறை பாகிஸ்தானின் தேவையற்ற தலையீடு.


(ஆல் இந்தியா ரேடியோ செயலுத்தி ஆய்வாளர்  கௌஷிக் ராய் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஸ்ரீபிரியா சம்பத்குமார்.) இந்தியாவின் உள்விவகாரங்களில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், தேவையில்லாமல் மீண்டும் மூக்கை நுழைத்துள்ளார். இந்தியாவில் வாழும் சிறுபான்மையினரின் நிலைகுறித்து அவர் கருத்து தெரிவித்துள்ளார். அவரது அபத்தமான குற்றச்சாட்டு, இந்தியாவில் அனைவரும் மத நம்பிக்கைகளுக்கு மதிப்பளித்து இணக்கமாக வாழும் இயல்பு நிலைக்கு முற்றிலும் மாறாகவும், இந்தியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கக்கூடியதாகவும் அமைந்துள்ளது. மேலும்,…

சீனாவின் அபத்தமான எதிர்ப்பு.


(ஜேஎன்யூ கிழக்காசிய மையத் தலைவர் ஸ்ரீகாந்த் கொண்டப்பள்ளி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி) பிரதமர் நரேந்திர மோதி அவர்கள், அருணாச்சலப் பிரதேசத்திலுள்ள சே லா வில் சுரங்கப் பாதைத் திட்டத்தைத் துவக்க அங்கு பயணித்ததற்கு, எதிர்பார்த்ததைப் போல, தனது வழக்கமான எதிர்ப்பை சீனா வெளியிட்டுள்ளது. இத்திட்டம், தவாங் பகுதியை மாநிலத்தின் பிற பகுதிகளுடன் இணைக்கும். சீனாவின் இந்த எதிர்ப்பு, வழக்கமான, குறிப்பிட்ட வடிவில் வரும் எதிர்ப்பாக உள்ளது.…

பேச்சுவார்த்தை பொறுப்பு பாகிஸ்தான் மீது


தி ஹிந்து பத்திரிக்கையின் மூத்த ஆசிரியர் கல்லோல் பட்டாச்சார்ஜீ ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம் சத்யா அசோகன் பாகிஸ்தான் அரசானது மீண்டும் இந்தியாவுக்கு எதிராக தன் விஷமத்தனமான கைவரிசையை காட்ட துவங்கியுள்ளது.  பாகிஸ்தான் வெளியுறவுதுறை அமைச்சர் ஷா மஹமூத் குரேஷி, ஹூரியத் மானாட்டு அமைப்பின் தலைவரான மிர்வாய்ஸ் உமர் ஃபரூக்கை தொலைபேசியின் தொடர்பு கொண்டு பேசிய விவகாரத்தில் இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் பாகிஸ்தான் தூதர் சொஹைல் முகமதுவை நேரில் அழைத்து…

வளர்ந்து வரும் இந்திய, மொனாக்கோ உறவுகள்.


(ஜேஎன்யூ பேராசிரியர் உம்மு சல்மா பாவா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி) மொனாக்கோ நாட்டுத் தலைவர், இளவரசர் இரண்டாம் ஆல்பர்ட் தனது முதல் இந்தியப் பயணத்தை மேற்கொண்டார். இரு நாடுகளுக்குமிடையே, நீண்டநாள் உறவு இருந்து வந்தபோதிலும், 2007 ஆம் ஆண்டு தான் இருநாடுகளுக்குமிடையிலான ராஜீய உறவுகள் துவக்கப்பட்டன. வாடிகனுக்கு அடுத்தபடியாக, உலகிலேயே இரண்டாவது மிகச்சிறிய நாடான  மொனாக்கோ, முப்புறமும் ஃபிரான்ஸ் நாட்டுடனும், ஒருபுறம் மத்திய தரைக் கடலுடனும்…

இந்தியா – பங்களாதேஷ் உறவுகள்.


(ஆய்வாளர் டாக்டர் ஸ்மிரிதி பட்னாயக் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.ராமமூர்த்தி). இந்தியா – பங்களாதேஷ் உறவுகளை மேலும் வலுப்படுத்தும் விதமாக, இருநாடுகளின் அமைச்சர்கள் நிலையிலான ஒருங்கிணைப்புக் குழுவின் ஐந்தாவது கூட்டம் புது தில்லியில் நடைபெற்றது. பங்களாதேஷ் வெளியுறவு அமைச்சர் டாக்டர் ஏ கே அப்துல் மோமென் உயர்மட்டக் குழுவுடன் கலந்து கொண்டு, இருநாட்டு உறவுகளின் பலதரப்பட்ட அம்சங்களைப் பற்றி  விவாதித்தார். புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் சிலவும் கையெழுத்தாயின. பங்களாதேஷில்…