புதுப்பிக்கப்பட்ட, துடிப்புமிக்க இந்தியா, மாலத்தீவு உறவுகள்.


(இட்ஸா ஆய்வாளர் குல்பின் சுல்தானா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஆ .வெங்கடேசன்.) மாலத்தீவின் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்துல்லா ஷாஹீத் அவர்களின் அழைப்பை ஏற்று, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் திருமதி சுஷ்மா சுவராஜ், வெளியுறவுத் துறை செயலர் விஜய் கோகலே மற்றும் மூத்த அலுவலர்களுடன் மாலத்தீவிற்கு இந்த வாரம் அரசு முறைப் பயணம் மேற்கொண்டார். மாலத் தீவுகளுக்கு சுஷ்மா சுவராஜ் அவர்கள் பயணம் மேற்கொள்வது, 2014 ஆம்…

பயங்கரவாதப் பிரச்சனையில் சீனாவுக்கு யதார்த்த அணுகுமுறை தேவை.


(சீனாவிற்கான செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் எம்.எஸ். பிரதிபா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஸ்ரீபிரியா சம்பத்குமார்.) ஜெயிஷ்-ஏ-மொஹம்மத் பயங்கரவாத இயக்கத்தின் தலைவன் மசூத் அஸாரை, ஐக்கிய நாடுகளின் தடைகளுக்கான குழு 1267-ன் பட்டியலில் சேர்ப்பதை சீனா நான்காவது முறையாக தொழில்நுட்பக் காரணங்கள் காட்டி நிறுத்தி வைத்துள்ளது. ஐ.நா-வால் அதிகாரபூர்வ முறையில் அறிவிக்கப்பட்ட பயங்கரவாதியாக அஸாரை வகைப்படுத்துவதற்கான சர்வதேச முயற்சிக்கு இதனால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த முயற்சிக்கு பிரான்சு, அமெரிக்கா…

ஸ்திரமின்மையை நோக்கிப் பயணிக்கிறதா பிரெக்ஸிட் தேக்க நிலை?


(இட்ஸா ஆய்வாளர் ரஜோர்ஷி ராய் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் –பி.குருமூர்த்தி) எல்லோராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட, பிரெக்ஸிட் எனப்படும் ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டனின் வெளியேற்றம், குழப்பத்திலும், ஸ்திரமின்மையிலும் ஆழ்த்தப்பட்டுள்ளது. பிரிட்டன் பிரதமர் தெரெஸா மே அவர்கள் கொண்டுவந்த, ஐரோப்பிய யூனியலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான ஒப்பந்தத்தை நிராகரித்த பிரிட்டிஷ் நாடாளுமன்றம், ஒப்பந்தமின்றி பிரிட்டன் ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறும் வாய்ப்பையும் நிராகரித்துள்ளது. முன்னதாக, பிரிட்டனின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் இரண்டாவது வாக்கெடுப்புக்கும் பிரிட்டிஷ் நாடாளுமன்றம்…

ஜனநாயகத்தை வலுப்படுத்தும் தேர்தல்கள்


மூத்த பத்திரிக்கையாளர் ஷங்கர் குமார் ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம் சத்யா அசோகன்   எந்த ஒரு ஜனனாயகத்திற்கும் முதுகெலும்பாக திகழ்வது தேர்தல்களே.  அனைத்து அரசியல் நிறுவனங்களும் நேரடியாகவோ மறைமுகமாகவோ தேர்தலில் இருந்தே பெறப்படுகின்றன என்று பார்க்கும்போது, நாட்டில் ஜன நாயகத்தை மேலும் முன்னெடுத்து செல்லும் கருவிகளாக தேர்தல்கள் விளங்குகின்றன என்று கூறினால் அது மிகையாகாது.  இந்தியா இன்னமும் இரண்டு மாதங்களில் தேர்தலை சந்தித்து தனது `17வது மக்களவையை தேர்ந்தெடுத்து அதன் மூலம் அடுத்த அரசை…

சீனா சொல்வதை செயலில் காட்டுவது அவசியம்.


(சீன, யூரேஷிய விவகாரங்களுக்கான செயலுத்தி ஆய்வாளர் சானா ஹஷ்மி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி) புல்வாமா கொடூரத் தாக்குதலுக்குப் பிறகு, ஐ.நா.வில், பாதுகாப்புக் கவுன்ஸிலின் அல்கைதா தடைகள் கமிட்டி பிரிவு 1267 இன் கீழ், ஜெய்ஷ் ஏ முகமது வின் தலைவன் மசூத் அஸரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கக் கோரி, இந்தியா எடுத்து வரும் முயற்சிகளுக்கு சீனா மீண்டும் முட்டுக்கட்டை போடாது என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், புல்வாமா…

சவால்கள் நிறைந்த காலகட்டத்தில் இந்திய – அமெரிக்க பேச்சுவார்த்தை.


(ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சிந்தாமணி மஹாபாத்ரா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஆ. வெங்கடேசன்.) இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே, பாதுகாப்பு மற்றும் செயல் உத்தி சார்ந்த பேச்சுவார்த்தையின் ஒன்பதாவது சுற்று நடத்தப்பட்டது. இரு நாடுகளுக்கிடையே நிலவும் முக்கியமான பிரச்சனைகளுக்கு தீர்வுகள் எட்டப்பட வேண்டிய நிலையில், இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. ரஷ்யாவுக்கும் ஈரானுக்கும் எதிரான அமெரிக்காவின் தடைகள், அத்தடைகளுக்கு  ட்ரம்ப் அரசாங்கத்தால் இந்தியாவிற்குக் கொடுக்கப்பட்ட விதிவிலைக்கை நீட்டிப்பதற்கான தேவை,…

மசூத் அசாரைத் தடை செய்யும் நடவடிக்கைக்கு சீனா மீண்டும் முட்டுக்கட்டை


  அரசியல் விமரிசகர் அஷோக் ஹாண்டூ அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் பி குருமூர்த்தி   ஜெய்ஷ் ஏ முகமது என்ற தீவிரவாத இயக்கத்தின் தலைவனான பாகிஸ்தானைச் சேர்ந்த மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதி என அறிவிக்கும் ஐ நா வின் முயற்சிக்குத் தொடர்ந்து நான்காவது முறையாக சீனா முட்டுக்கட்டை போட்டுள்ளது. இந்திய - பாகிஸ்தான் உறவுகளில் அண்மையில் ஏற்பட்டுள்ள தொய்வுக்குக் காரணமான 40 மத்திய ரிசர்வ் காவல் படையினரின்…

“ நேபாள் , மதேசி பிரச்சினைகளை தீர்க்க வேண்டும்”


அரசியல் விமர்சகர் ரத்தன் சால்டி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் ஆ. வெங்கடேசன். நேபாள் ராஷ்ட்ரீய ஜனதா கட்சி, கே பி ஷர்மா ஒலி அவர்களின் அரசாங்கத்திற்கு அளித்துவந்த ஆதரவை விளக்கி கொள்வதாக அறிவித்ததையடுத்து, இந்தியாவின் எல்லைப் பகுதிக்கு அருகே உள்ள மதேஷ் பிராந்தியத்தின் மக்களுக்கு இடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது. ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் உரிமைகளை பாதுகாக்கும் பொருட்டு, தங்களது கிளர்ச்சியை பொது மக்களிடையே எடுத்துச் செல்லப் போவதாக ஆர் ஜே…

இந்திய சவுதி உறவுகளில் ஒரு புதிய போக்கு


    மேற்கு ஆசியாவிற்கான செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் முஹம்மத் முடாசிர் குவாமர் அவர்களின் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் ஆ.வெங்கடேசன். சவுதி அரேபியாவின் இளவரசர் முஹம்மத் பின் சல்மான் அவர்களின் இந்தியப் பயணத்தைத் தொடர்ந்து, சவுதி அரேபியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் அடெல் அல் ஜூபெயர் அவர்கள் புதுதில்லிக்குப் பயணம் மேற்கொண்டு இருப்பது, இந்தியா மற்றும் சவுதி அரேபியாவிற்கு இடையே உள்ள இருதரப்பு உறவுகளுக்கு ஒரு முக்கியத்துவமாக அமைந்துள்ளது. இந்திய…

நாடாளுமன்ற பொதுத் தேர்தல் அறிவிப்பு.


( ஆல் இண்டியா ரேடியோ செய்தி ஆய்வாளர் பதாம் சிங் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி. குருமூர்த்தி) இந்தியாவின்  17 ஆவது நாடாளுமன்றத்தின் ஏழு கட்ட பொதுத் தேர்தல் குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. முதல்கட்ட தேர்தல் வாக்களிப்பு, ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி துவங்குகிறது. ஏழாவது மற்றும் இறுதிக் கட்டம், மே மாதம் 19 ஆம் தேதியுடன் முடிவுறுகிறது. மொத்தமுள்ள 543 தொகுதிகளின்…