நரேந்திர மோதி அவர்கள் இரண்டாம் முறையாக, பிரதமராகப் பதவியேற்பு.


(நியூ இன்டியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையின் மூத்த நிருபர் மணிஷ் ஆனந்த் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஆ. வெங்கடேசன்.) நரேந்திர மோதி அவர்கள் பெருவாரியான வாக்குகளைப் பெற்று ,தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்தியாவின் பிரதமராகப் பதவியேற்றுள்ளார். பிரதமரின் தலைமையின் கீழ், 58 கேபினட் அமைச்சர்களுக்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்தியாவின் முன்னாள் வெளியுறவுச் செயலர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் அவர்களையும் சேர்த்து,…

ஐ.சி.சி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019 துவக்கம்.


(ஆல் இந்தியா ரேடியோ செய்தி ஆய்வாளர், கௌஷிக் ராய் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஸ்ரீபிரியா சம்பத்குமார்.) ‘ஜெண்டில்மேன்ஸ் கேம்’ என்றழைக்கப்படும் கிரிக்கெட் விளையாட்டில் உலகக் கோப்பையானது நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் கிரிக்கெட் திருவிழாவாகும். இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் –சில் நடைபெறும் 12-ஆவது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைப் போட்டிகள் இன்று துவங்குகின்றன. ஜூலை மாதம் 14 ஆம் தேதி வரை இந்தப் போட்டிகள் நடைபெறும்.…

பாகிஸ்தானில் தொடர்கதையாகும் சிறுபான்மையினருக்கு எதிரான துன்புறுத்தல்.


(இட்சாவின் தெற்காசிய மையத்தின் ஆய்வாளர் டாக்டர் ஸைனப் அக்தர் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஆ.வெங்கடேசன்.) பாகிஸ்தானின் சிறுபான்மையினருக்கு எதிரான பாரபட்சமான கொள்கையின் விளைவாக, அரசிடமிருந்தும், வலதுசாரி தீவிரவாதிகளிடம் இருந்தும் சிறுபான்மையினர் துன்புறுத்தலுக்கு ஆளாவது தொடர்கிறது.  பாகிஸ்தானில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 30 லட்சத்திற்கும் அதிகமாக உள்ள, இந்துக்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் சீக்கியர்கள், சில சமயம் தங்களது  மத நம்பிக்கைகளின்படி நடப்பது மிகவும் ஆபத்தாக விளங்குகிறது. மோசமான…

மோதி அவர்களின் இரண்டாவது ஆட்சியில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை முயற்சிகள்.


(ஐ.நா விற்கான இந்தியாவின் முன்னாள் நிரந்தரப் பிரதிநிதி, தூதர் அசோக் குமார் முகர்ஜி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் ஆ. வெங்கடேசன்.) 2014ஆம் வருடம் முதல் பிரதமர் நரேந்திர மோதி அவர்கள், இந்தியாவின் அதீத மாற்றத்திற்காக  எடுத்த முயற்சிகளைத் தொடர, சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தியாவின் 90 கோடி மக்கள் ஜனநாயக முறைப்படி பெருவாரியாக வாக்களித்து, அதன் மூலம், அடுத்த 5 ஆண்டுகளில் எடுக்கப்படவுள்ள இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை முயற்சிகளுக்கு வித்திட்டுள்ளனர்.…

வல்லரசு நாடாகும் இலக்குடன் இந்தியாவின் வெற்றி நடை


(மூத்த பத்திரிக்கையாளர் ஷங்கர் குமார் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஸ்ரீபிரியா சம்பத்குமார்.) நாட்டிற்கு அனுகூலமான நல்ல முடிவுகளை எடுப்பதில், பிரதமர் நரேந்திர மோதி அவர்களுக்கு நிகர் எவரும் இல்லை என்றே கூற வேண்டும். ‘புதிய உத்வேகத்துடன் கூடிய ஒரு புதிய இந்தியாவை’ உருவாக்க, இரண்டாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தனது அரசாங்கம் ஒரு புதிய பயணத்தைத் துவங்கும் என அவர் கூறியதிலிருந்து இது தெளிவாகிறது. நாடாளுமன்றத்தின் மத்திய அரங்கில்…

அதிபர் ஜோக்கோவி, இந்தோனேஷியாவில் மீண்டும் அதிபரானார்.


கிழக்கு மற்றும் தென் கிழக்காசிய செயலுத்தி ஆய்வாளர் முனைவர் ராகுல் மிஸ்ரா ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம் சத்யா அசோகன்.  ஒரு மாத கால காத்திருப்புக்கு பின், ஜோக்கோவி என்று பிரபலமாக அறியப்படும் ஜோக்கோ விடோடோ இந்தோனேசிய அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.  இந்தோனேசியாவில் ஏப்ரல் 17 ஆம் தேதியன்று தேர்தல்கள் நடந்ததன.  அதிபர் மற்றும் துணை அதிபர் பதவிகளுக்கான தேர்தல்கள் உடனே நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான தேர்தல்கள்…

ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு.


(சீன, யூரேஷிய விவகாரங்கள் செயலுத்தி ஆய்வாளர் சானா ஹாஷ்மி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி) இந்த வாரத் துவக்கத்தில், இந்திய வெளியுறவு அமைச்சர் திருமதி சுஷ்மா ஸ்வராஜ் அவர்கள், ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பில் கலந்துகொள்ள, கிர்கிஸ்தானிலுள்ள பிஷ்கேக் நகருக்குப் பயணம் மேற்கொண்டார். தற்போதைய வெளியுறவு அமைச்சர் பதவியில் அவர் மேற்கொள்ளும் கடைசி அயல்நாட்டுப் பயணமாகும் இது. நாடாளுமன்றத் தேர்தலில் முடிவுகள் வெளிவருவதற்கு ஒருநாள்…

வலுவான மத்திய அரசுக்கு இந்திய மக்களின் தெளிவான தீர்ப்பு.


(அரசியல் விமர்சகர் பேராசிரியர் ஷிவாஜி சர்கார் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஸ்ரீபிரியா சம்பத்குமார்.) பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான என்.டி.ஏ என்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி, 90 கோடியையும் விட அதிகமான இந்திய வாக்காளர்களால் பெரும்பான்மை மிக்க கூட்டணியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. முப்பத்து ஐந்து ஆண்டுகளில் முதன்முறையாக, ஒரு தனிக்கட்சி, இந்திய அரசின் மக்களவையில் 303 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. தேசிய பாதுகாப்பு மற்றும் நாட்டு முன்னேற்றம் என்ற இரண்டு…

விண்வெளிக் கண்காணிப்பை மேம்படுத்த, இந்தியாவுக்குப் புதிய கூர்பார்வைத் திறன்.


(மூத்த அறிவியல் விமரிசகர் பிமன் பாசு அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி) ரிசாட் -2பி என்ற பூமி கண்காணிப்பு செயற்கைக் கோளை இந்தியா வெற்றிகரமாகவும், மிக நேர்த்தியாகவும் விண்ணில் கடந்த புதனன்று காலை செலுத்தியுள்ளது. 615 கிலோ எடையும், ஐந்தாண்டு திட்ட கால அளவும் கொண்ட இந்த செயற்கைக் கோள், அனைத்துப் பருவ காலங்களிலும்,   குறிப்பாக, எல்லைப் பகுதிகளில், 24 மணி நேரமும் கண்காணிப்புத் திறனை அதிகரிக்கப்…

விண்ணில் பாயத் தயாராகும் இந்தியாவின் சந்திரயான்-2


(பத்திரிக்கையாளர் யோகேஷ் சூது அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஸ்ரீப்ரியா சம்பத்குமார்.)                                                  நிலவுக்கான இந்தியாவின் இரண்டாவது பணித்திட்டத்தில், சந்திரயான்-2 விண்கலத்தை இவ்வாண்டு ஜுலை மாதம் விண்ணில் செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. நாடு முழுவதிலும் உள்ள பல…