போராட்டத்தை நோக்கிச் செல்கிறதா பாரசீக வளைகுடா?
(மேற்காசியாவிற்கான செயலுத்தி ஆய்வாளர் டாக்டர். மொஹம்மத் முதசிர் நாசர் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஸ்ரீபிரியா சம்பத்குமார்.) அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையில் கடந்த சில நாட்களாக நடந்துகொண்டிருக்கும் வாக்குவாதம், பாரசீக வளைகுடா பகுதியில் இறுக்கத்தை அதிகபடுத்தியுள்ளன. அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான பிரச்சனை, நீண்ட காலமாக சிக்கல் நிறைந்ததாக விளங்குகிறது. 2018 ஆம் ஆண்டு மே மாதம் ஏற்படுத்தப்பட்ட ஜெ.சி.பி.ஓ.ஏ எனப்படும் விரிவான கூட்டு…