மொசாம்பிக் நாட்டுடனான உறவை வலுவாக்கும் இந்தியா.


(பத்திரிக்கையாளர் வினித் வாஹி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம்  – ஆ. வெங்கடேசன்.) இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள், சமீபத்தில் மொசாம்பிக் நாட்டிற்கு மேற்கொண்ட மூன்று நாட்கள் பயணத்தின் போது, அந்நாட்டுடன் இரண்டு முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. அவை வெள்ளை கப்பல் போக்குவரத்து குறித்த தகவல் பரிமாற்றம் மற்றும் ஹைட்ரோ கிராஃபி துறையில் ஒத்துழைப்பு ஆகியவையாகும். மொசாம்பிக் நாட்டில் இந்தியா கணிசமான அளவில் பொருளாதார முதலீடுகளைச்…

வட கொரிய ஏவுகணைச் சோதனைகளால் மீண்டும் அதிகரிக்கும் இறுக்கம்.


(கிழக்கு மற்றும் தென் கிழக்காசியாவிற்கான செயலுத்தி ஆய்வாளர் டாக்டர். ராகுல் மிஷ்ரா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஸ்ரீபிரியா சம்பத்குமார்.) கொரிய தீபகற்பத்தில் நிலையான அமைதி என்ற சூழலுக்கான சாத்தியக்கூறுகளுக்கு ஒரு எதிர் அதிர்வாக, கடந்த வாரம், வட கொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் இரண்டு ஏவுகணைகளை சோதித்தது. வட கொரியா தென் கொரியா இடையிலுள்ள ராணுவ நடவடிக்கையற்ற பகுதியில், வட கொரியத் தலைவர் கிம் ஜாங்க்-உன்-னும்…

பிரிக்ஸ் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு.


(சமூக அறிவியல் நிறுவன இயக்குனர் ஏஷ் நாராயண் ராய் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.) உலக வரலாறு புரட்டிப் போடப்பட்டு வருகிறது. மேற்கிலிருந்து கிழக்கு நோக்கியும், வடக்கிலிருந்து தெற்கு நோக்கியும் அதிகாரம் இடம் பெயர்ந்து வருகிறது. இது வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றமாகும். நவீன உலகில், முதல்முறையாக, மக்கள் தொகையும், செல்வமும் ஒரே இடத்தில் குவிகின்றன. இந்த மாற்றமே பிரிக்ஸ் அமைப்புக்கு வழிகோலியுள்ளது. வேகமாக மாறிவரும் உலகை வழிநடத்துவோரும்…

நாடாளுமன்றத்தில் கடந்த வாரம்


திரு வி மோகன்ராவ் ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்.  தமிழில் பி இராம மூர்த்தி. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் விஞ்ஞானிகளுக்கு, சந்திரயான் -2,  வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதையொட்டி, குடியரசு தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் குடியரசு துணை தலைவர் திரு வெங்கையா நாயுடு, பிரதமர் திரு நரேந்திர மோதி ஆகியோர் நாடாளுமன்றத்தில் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.  சந்திரயான்  திட்டம் வெற்றி பெற்றதையொட்டி,  மேலும் பல்வேறு கண்டுபிடிப்புகள் இந்திய மக்களுக்கு கை கூடும்…

மூடி மறைத்த உண்மையை வெளிப்படுத்தும் பாகிஸ்தான்.


(ஆல் இண்டியா ரேடியோ ஆய்வாளர் கௌஷிக் ராய் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.) வியப்பூட்டும் வகையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அவர்கள், பாகிஸ்தான் மண்ணில் 40 பயங்கரவாதக் குழுக்கள் செயல்படுகின்றன என்றும், நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட பலவித பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் தற்சமயம் உள்ளனர் என்றும் ஒப்புக்கொண்டுள்ளார். அமெரிக்காவுக்கு அவர் மேற்கொண்ட முதல் பயணத்தின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த உண்மையை இதுகாறும் பாக் அரசு அமெரிக்காவுக்குத் தெரிவிக்கவில்லை என்றும்…

வளர்ச்சிப் பாதையில் இந்தியப் பொருளாதாரம்.


(மூத்த பொருளாதார விமர்சகர் சத்யஜித் மொஹந்தி, ஐ.ஆர்.எஸ் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஸ்ரீபிரியா சம்பத்குமார்.) ஐ.எம்.எஃப். எனப்படும் சர்வதேச நாணய நிதியம், தன்னுடைய சமீபத்திய, உலகப் பொருளாதாரக் கண்ணோட்டம் குறித்த  அறிக்கையில், இந்த நிதி ஆண்டில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 7 சதவிகிதமாகவும், அடுத்த நிதியாண்டில் 7.2 சதவிகிதமாகவும் இருக்கும் எனக் கூறியுள்ளது. 2019 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டிற்கு முன்னர், இந்திய அரசாங்கத்தால்…

புதிய பிரிட்டன் பிரதமரும் பிரெக்ஸிட்டுக்கான வழிகளும்


(ஐரோப்பிய விவகாரங்களுக்கான செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் சங்கமித்ரா சர்மா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.) ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான பிரெக்ஸிட் என அழைக்கப்படும் விவகாரத்தின் மீது, 2016 ஆம் ஆண்டில் வாக்கெடுப்பு நடந்த சமயம் தொட்டே, பிரிட்டிஷ் அரசியலில் கொந்தளிப்பான சூழல் நிலவி வந்துள்ளது. தமது திட்டத்திற்கு இணங்க, ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கு ஒப்புதல் பெறுவதில் தோல்வியுற்ற தெரெஸா மே அவர்கள், தனது கட்சி…

” டிரம்ப் அவர்களுக்கு மீண்டும் அதிர்ச்சி”


த ஹிந்து பத்திரிக்கையின் மூத்த நிருபர் கலோல் பட்டாச்சார்ஜீ அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் ஆ. வெங்கடேசன். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அவர்கள், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அவர்களுடன் ஏற்பட்ட சந்திப்பின்போது, காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்யும்படி பிரதமர் மோதி அவர்கள் தன்னை கேட்டுக்கொண்டதாக தெரிவித்திருந்தார். இருப்பினும் அது பாதி கதை தான், அமெரிக்கா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே நடைபெறும் செயல் உத்தி பேச்சுவார்த்தையை, இந்தியா, முனைப்போடு…

நிலவிற்கான இந்தியாவின் இரண்டாவது பணித்திட்டத்தின் வெற்றிகரமான புறப்பாடு


  மூத்த அறிவியல் எழுத்தாளர் பீமன் பாசு அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம்  ஸ்ரீப்ரியா சம்பத்குமார்   நிலவிற்கான இந்தியாவின் இரண்டாவது விண்கலமான சந்திரயான்-2, திங்களன்று வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டது. இந்திய விண்வெளித் திட்டங்களில் மிக சிக்கலான அதே சமயம் துணிகரமான திட்டங்களில் ஒன்றான சந்திரயான்-2, திங்களன்று மதியம் விண்ணில் பாய்ந்தது. நிலவுக்கான இந்தியாவின் இரண்டாவது ஆய்வு விண்கலமான சந்திரயான்-2-ஐ சுமந்துச் சென்ற, நாட்டின் அதீத வல்மை மிக்க ராக்கெட்டான ஜி.எஸ்.எல்.வி…

இலங்கையில் அதிகரிக்கும் இந்திய முதலீடுகள்.


(இந்தியப் பெருங்கடல் பகுதிகளுக்கான செயலுத்தி ஆய்வாளர் டாக்டர். எம்.சமந்தா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஸ்ரீபிரியா சம்பத்குமார்.)  இந்தியாவும் இலங்கையும், மாஹோவிலிருந்து ஓமந்தை வரையிலான 130 கிலோமீட்டர் நீள ரயில்வே தடத்தை மேம்படுத்துவதற்கான, 9.126 கோடி  டாலர் மதிப்பிலான ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன. 100 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வழிப்பாதை முதன் முறையாக மேம்படுத்தப்படுவதால், இந்த ஒப்பந்தம் மிகவும் முக்கியத்துவத்தைப் பெறுகின்றது. இலங்கை ரயில் துறையை மேம்படுத்துவதில் இந்தியாவிற்கு…