” டிரம்ப் அவர்களுக்கு மீண்டும் அதிர்ச்சி”

த ஹிந்து பத்திரிக்கையின் மூத்த நிருபர் கலோல் பட்டாச்சார்ஜீ அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் ஆ. வெங்கடேசன்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அவர்கள், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அவர்களுடன் ஏற்பட்ட சந்திப்பின்போது, காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்யும்படி பிரதமர் மோதி அவர்கள் தன்னை கேட்டுக்கொண்டதாக தெரிவித்திருந்தார். இருப்பினும் அது பாதி கதை தான், அமெரிக்கா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே நடைபெறும் செயல் உத்தி பேச்சுவார்த்தையை, இந்தியா, முனைப்போடு பார்க்க வேண்டும். காஷ்மீர் என்பது இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே உள்ள இரு தரப்பு பிரச்சனை, அதில் பங்கு பெற முயற்சி செய்யவில்லை என்று அமெரிக்க அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது.

பிரதமர் மோதி அவர்கள் அமெரிக்க அதிபர் இடம் அப்படி ஒரு கோரிக்கையை வைக்க வில்லை என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர் அவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமர் பெருவாரியான வாக்குகள் பெற்று இரண்டாவது முறையாக தேர்தெடுக்கப்பட்ட பின்னர், போன மாதம் ஜப்பான் நாட்டில், ஒசாகா நகரில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டிற்கு இடையே, அமெரிக்க அதிபருடன் இந்திய பிரதமர் பேச்சுவார்த்தை நடத்தினார். ஐநா பாதுகாப்பு சபை கூட்டத்திற்கு இடையே இரு தலைவர்களும் சந்திக்க உள்ளார்கள். இருதரப்பு பேச்சு வார்த்தைக்காக அதிபர் டிரம்ப் அவர்கள் கூடிய விரைவில் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். இது போன்ற உயர் அளவிலான ஈடுபாடுகள் நடைபெறும் இந்த வேளையில், பல முக்கியமான பிரச்சனைகளை பேசுவதற்கு இருதரப்பும் தயாராக உள்ள நிலையில், அதிபர் டிரம்ப் அவர்களின் இந்த அறிக்கை வெளிவந்துள்ளது.

ஒருபுறம், நேட்டோ நட்பு என்ற அந்தஸ்தை இந்தியாவிற்கு வழங்குவது என்ற சட்டத்தை அமெரிக்கா நிறைவேற்றியுள்ளது, மறுபுறம், ஆப்கானிஸ்தானின் பிராந்திய பிரச்சனைகளில் இருதரப்பும் ஆலோசனை செய்து வருகின்றது. இதைத் தவிர உயர் அளவிலான ராணுவ தொடர்புகளும் பட்டறையில் உள்ளது. இவ்வாறு இருக்கையில், காஷ்மீர் என்பது இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே உள்ள இரு தரப்பு பிரச்சனை, இதில் அமெரிக்க அதிபர் விடுத்துள்ள அறிக்கை தெளிவு படவில்லை.

இதன் மூலம், பாரம்பரிய புனிதமான கொள்கைகளின் ராஜதந்திரம், அமெரிக்காவில் இனி செல்லுபடி ஆகாது என்று தோன்றுகிறது. பாகிஸ்தான் நாட்டுடன் உள்ள பிரச்சனைகள், இரு நாடுகளுக்கு இடையே தீர்க்கப்பட வேண்டும் இதில் மூன்றாம் நபர் தலையீடு வரவேற்கப் பட மாட்டாது என்ற 1972 ஆம் வருட சிம்லா ஒப்பந்தத்தை இந்தியா இதுவரை நடைமுறைப்படுத்தி வருகிறது. 1971 ஆம் வருடம் நடைபெற்ற போருக்குப் பிறகு சில வாரங்களில் இந்த கொள்கையானது பாகிஸ்தானுடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டது, அது இன்னும் பிணைப்புடன் உள்ளது. அந்த போரில் இந்தியா வெற்றி பெற்றது.

அப்பொழுது முதல், பாகிஸ்தான் மூன்றாம் நபர் தலையீட்டை கோரி வருகின்றது, இந்தியா தொடர்ந்து அதை நிராகரித்து வருகின்றது. இருபக்க பிரச்சனைகளில் மூன்றாம் நபர் தலையீடு இருக்கக்கூடாது என்பதை இந்த முறையும் இந்தியா தெளிவாக குறிப்பிட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில், கடந்த 20 வருடங்களாக, ராணுவ பிரச்சாரத்தை மேற்கொண்ட அமெரிக்கா, தற்பொழுது படைகளை விலக்கிக் கொள்வது என்ற முடிவை தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் பிரச்சனைகளை கையாள்வதற்கான பொறுப்பை பாகிஸ்தானிடம் ஒப்படைக்க அமெரிக்க நிர்வாகம் செயல்படுகின்றது என்று தெரிகின்றது. கொடுப்பது மற்றும் எடுத்துக் கொள்வது, என்ற கொள்கையின் படி அமெரிக்கா பாகிஸ்தானிற்கு இதை வழங்குகிறது என்றுதோன்றுகிறது. காஷ்மீர் மீது அமெரிக்க அதிபர் விடுத்துள்ள அறிக்கை கவனத்தை ஈர்த்தாலும், பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா இரண்டும் கடந்த பல மாதங்களாக, சிக்கலான ராஜதந்திர பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றனர். பாகிஸ்தான் என்ன செய்ய வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகின்றதோ, அதை நிறைவேற்றுவது என்ற தோற்றத்தை உள்நாட்டில், ஹபீஸ் சயீத் போன்ற பயங்கரவாதிகளை, தடை செய்வது போன்ற செயல்களை பாகிஸ்தான் செய்து வருகின்றது. அதிபர் டிரம்ப் அவர்களிடமிருந்து வெளிப்படையான ஆதரவு கிடைத்துள்ளதால், அமெரிக்காவிலிருந்து தனது பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பிய உடன், பிரதமர் இம்ரான் கான் அவர்கள், ஒரு புதிய ஆட்டத்தை தொடங்குவார்   என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய-அமெரிக்க உறவுகளை பொருத்தவரை, இறையாண்மையை பாதிக்காமல், செயல் உத்திகளை இந்தியா கவனமாக கையாள வேண்டும். வெளிநாட்டுக் கொள்கைகளை பொருத்தவரை பொறுப்பற்ற அறிக்கைகள் விடுவதை தவிர்த்து, முதிர்ச்சியான அணுகுமுறையை, கையாள வேண்டும் என்பதை அமெரிக்கா உணர வேண்டும். பல்வேறு அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும், காஷ்மீரைப் பொருத்தவரை மூன்றாம் நபர் தலையீடு அல்லது மத்தியஸ்தம் கூடாது என்பதே இந்தியாவின் கொள்கை.