நாடாளுமன்ற நடவடிக்கைகள்


சர்வதேச நீதி மன்றத்தின் ஆணைப்படி, பாகிஸ்தான் அரசு உடனடியாக இந்திய கடற்படை வீரர் குல்பூஷன் யாதவ் அவர்களை இந்தியாவிற்கு திருப்பி அனுப்ப  நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் கேட்டு கொண்டார். சர்வதேச உடன்படிக்கைகளில் நம்பிக்கை கொண்டுள்ளவர்களும், சட்டத்தின் ஆட்சி மீது உறுதி உள்ளவர்களும் சர்வதேச நீதிமன்றத்தின் ஆணை வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது என நாடாளுமன்றத்தில் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள்.…

இந்தியா-உஸ்பெகிஸ்தான் இடையில் வலுப்பெறும் பாதுகாப்புக் கூட்டுறவு


(மத்திய ஆசியாவிற்கான செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் அதர் ஸஃபர் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஸ்ரீபிரியா சம்பத்குமார்.) இந்தியா-உஸ்பெகிஸ்தான் இடையில், பயங்கரவாத எதிர்ப்பிற்கான கூட்டுப் பணிக் குழுவின் எட்டாவது சந்திப்பு புது தில்லியில் நடைபெற்றது. இருதரப்பிலிருந்து இந்த சந்திப்பில் கலந்துகொண்ட அதிகாரிகள், எல்லை தாண்டிய பயங்கரவாதம் மற்றும் அவரவர் பகுதிகளிலும் உலகின் மற்ற பாகங்களிலும் இயங்கிக்கொண்டிருக்கும் பயங்கரவாதக் குழுக்கள் ஆகியவற்றால் உண்டாகும் அச்சுறுத்தல்களைப் பற்றி ஆராய்ந்தனர். பயங்கரவாத எதிர்ப்பில்…

ஐந்து லட்சம் கோடி டாலர் பொருளாதாரத்தை நோக்கி வீறுநடை போடும் இந்தியா.


(தேசிய பொதுநிதி மற்றும் கொள்கை நிறுவனத்தின் பேராசிரியர் டாக்டர் லேகா சக்ரவர்த்தி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஸ்ரீப்ரியா சம்பத்குமார்.) 2019 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில், இந்திய நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்கள், 2024 ஆம் ஆண்டிற்குள், இந்தியப் பொருளாதாரம், 5 லட்சம் கோடி டாலர் என்ற அளவை எட்டுவதற்கு அதிக கவனம் செலுத்தியுள்ளார். ‘பத்து ஆண்டுகளுக்கான முன்னோக்கு’ என்ற கொள்கை நடவடிக்கைகளுக்கான தொடரை அவர்…

சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியாவுக்குக் கிடைத்த ராஜதந்திர வெற்றி.


(ஐ.நா.வுக்கான இந்தியாவின் முன்னாள் நிரந்தரப் பிரதிநிதி, அசோக் குமார் முகர்ஜி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.) 2016 ஆம் ஆண்டு,  மார்ச் மாதம், இந்தியக் குடிமகனான குல்பூஷன் சுதிர் ஜாதவ், உளவு பார்த்தல் மற்றும் பயங்கரவாதக் குற்றம் சாட்டப்பட்டு பாகிஸ்தனால் கைது செய்யப்பட்டார். 2017 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம், பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டார். இதனை எதிர்த்து, 2017 ஆம் ஆண்டு, மே மாதம்,…

ஹஃபீஸ் சயீத் மீது மீண்டும் பிடிதளர்த்தும் பாகிஸ்தான்.


(இட்சா தெற்காசிய மையத்தின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் அஷோக் பெஹூரியா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஆ. வெங்கடேசன்.) லாகூரில் உள்ள ஏடிசி எனப்படும் பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம், தடைவிதிக்கப்பட்டுள்ள ஜமாத் உத் தாவா (ஜேயூடி) தலைவர் ஹபீஸ் முகமது சயீத் மற்றும் மூன்று நபர்களுக்கு, முன் ஜாமீன் வழங்கியுள்ளது. இது ஒன்றும் ஆச்சரியமல்ல!  ஜேயூடி  தமது இடத்தை சட்ட விரோதமாகப் பயன்படுத்திய குற்றத்துக்காகவும், பயங்கரவாதத்திற்கு நிதி வழங்கியதற்காகவும் இந்த…

கர்தார்பூர் வழித்தடத்தில் இறுதி ஒப்பந்தத்தை எட்டும் நிலையில் இந்தியாவும், பாகிஸ்தானும்.


(அரசியல் விமர்சகர் ரத்தன் சால்டி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஆ. வெங்கடேசன்.) பாகிஸ்தானின் நராவால் மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தர்பார் சாஹிப் குருத்வாராவிற்குப் பயணம் மேற்கொள்ளும் இந்திய யாத்ரீகர்களுக்கான கர்தார்பூர் வழித்தடம் குறித்து, இந்திய, பாகிஸ்தான் அதிகாரிகளுக்கிடையே, வாகா அட்டாரி எல்லையில், பாகிஸ்தான் பகுதியில், இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பதினாறாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த குருத்வாரா, மதம் மற்றும்…

ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பையைக் கைப்பற்றியது இங்கிலாந்து.


(விளையாட்டு விமரிசகர் ராகுல் பேனர்ஜி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.) ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை வரலாற்றில் நாற்பத்து நான்கு ஆண்டுகால காத்திருப்புக்குப் பின்னர், 2019 ஆம் ஆண்டுக்கான கோப்பையை இங்கிலாந்து கைப்பற்றியது. நேற்று, இங்கிலாந்தில் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற, நியூஸிலாந்து அணிக்கு எதிரான, உணர்ச்சிக் கொந்தளிப்புக்கள் நிறைந்த, பரபரப்பான, இறுதிக்கட்டம் வரை விறுவிறுப்பு நிறைந்த இறுதி ஆட்டத்தில், சூப்பர் ஓவரில், ஏராளமான ரசிகர்களின் எதிர்பார்ப்புக்களுக்கு இணங்க,…

நாடாளுமன்றத்தில் கடந்த வாரம்


  பத்திரிக்கையாளர் வி  மோகன் ராவ் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் பி ராமமூர்த்தி புது தில்லி சர்வதேச நடுவர் மன்றத்தை அமைக்கும் வகையில் புது தில்லி சர்வதேச நடுவர் மன்ற சட்ட மசோதா 2019 மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. புதன் கிழமையன்று மக்களவையில் பேசிய மத்திய சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், தேசிய, சர்வதேச சட்ட சிக்கல்களுக்குத் தீர்வு காணும் தலைசிறந்த நடுவர் மன்றமாக புதுதில்லி மையம் அமைக்கப்படும்…

வலுத்துவரும் ஈரான் – அமெரிக்க சச்சரவு – ராஜ தந்திரத் தீர்வு அவசியம்.


(ஈரான் விவகாரங்களுக்கான செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் அசிஃப் ஷூஜா அவகளின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஆ.வெங்கடேசன்.) ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான மோதல் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இப்பிரச்சனையின் மீது, சர்வதேச சமுதாயம் கவனம் செலுத்துவது அவசியமாகிறது. ஈரான் – அமெரிக்கா மோதல், 1979 ஆம் வருடம் ஈரான் புரட்சி ஏற்பட்ட காலத்தில் துவங்கியது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அவர்கள், கடந்த ஆண்டு, அதுவரை அமலில்…

இந்திய, ஐக்கிய அரபு அமீரக உறவுகள் – புதிய உச்சத்தில்.


(மேற்காசியாவுக்கான செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் ஃபஸூர் ரஹ்மான் சித்திக்கி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி) கடந்த ஐந்து ஆண்டுகளாக, தொடர்ச்சியாக, ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவு அமைச்சர் இந்தியாவுக்கு வருகை அளித்திருப்பது, இருநாட்டு உறவுகள் எந்த அளவுக்கு ஆழமாக உள்ளன என்பதைப் பறைசாற்றுகின்றது. தொடர்ந்து ஐந்தாவது முறையாக, இம்மாதம் 7 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை, ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவு மற்றும்…