“ இந்திய பொருளாதாரத்தை 5 லட்சம் கோடி டாலர் அளவிற்கு உயர்த்துவதில் உட்கட்டமைப்பின் பங்கு “

மூத்த பொருளாதார பத்திரிக்கையாளர் ஜி. சீனிவாசன் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் ஆ. வெங்கடேசன்.
அடுத்த ஐந்து வருடங்களில் இந்திய பொருளாதாரத்தை 5 லட்சம் கோடி டாலர் அளவிற்கு உயர்த்துவது மற்றும் அதைத் தொடர்ந்து அடுத்த எட்டு வருடங்களில் 10 லட்சம் கோடி டாலர் அளவிற்கு உயர்த்துவதற்காக இந்தியா தன்னைத்தானே தயார்படுத்திக் கொண்டுள்ளது. இந்த இலட்சிய இலக்கை அடைவதற்கு உட்கட்டமைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது என்றால் அது மிகையல்ல. தற்போது நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தெரிவிக்கப்பட்ட விவரங்களின் படி, உட்கட்டமைப்புக்காக இந்தியா வருடம் தோறும் ஒரு லட்சம் கோடி டாலருக்கு மேலாக செலவு செய்து வருகின்றது. நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் சிங் தாகூர் அவர்கள் லோக்சபாவில் இதை தெரிவித்தார். அரசாங்கத்தின் செலவு கணக்கில் 2018 19 ஆம் வருட பட்ஜெட் மதிப்பீடு உட்கட்டமைப்புக்காக ரூபாய் 5.97 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
2025 ம் வருடத்திற்குள் உள்நாட்டு பொருளாதாரத்தை 5 லட்சம் கோடி டாலர் அளவிற்கு உயற்துவது என்பது பிரம்மாண்டமாக தோன்றினாலும் அது எட்டும் தொலைவில் தான் உள்ளது. உட்கட்டமைப்பை ஊக்குவிப்பது என்பதும் மற்றும் அதை சரியாக தேர்ந்தெடுத்தது என்பதும் மிகவும் முக்கியமானது. தற்பொழுது உள்ள பொருளாதாரத்தின் நிலை 2.8 லட்சம் கோடி டாலர் அளவில் உள்ளது அது அடுத்த 5 வருடத்தில் எட்டு சதவிகித வருடாந்திர வளர்ச்சி விகிதமாக இருக்கும். இது நம்பகமான இலக்கு, தேக்க நிலையிலும் கூட இந்திய பொருளாதாரம் கடந்த வருடங்களில் ஆறு முதல் ஏழு சதவிகித வளர்ச்சியை கண்டுள்ளது என்று வல்லுனர்கள் கூறுகின்றனர்.
பொருளாதாரத்தில் இந்த வாரம், ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கை குழு, வட்டி விகிதத்தில் 35 அடிப்படை புள்ளிகளை குறைத்துள்ளது. இந்த வருடம் பிப்ரவரி மாதம் முதல் இது வரை தொடர்ந்து 4 முறை ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. மொத்தம் 110 அடிப்படை புள்ளிகள் குறைந்து உள்ளது. மொத்தத்தில் இது பொருளாதார நடவடிக்கைகளுக்காக உற்பத்தி பிரிவில் கடன் வழங்குவதற்கு வழிவகுக்கும், குறிப்பாக உட்கட்டமைப்பு துரிதப்படுத்தப்படும்.
நாட்டின் உட்கட்டமைப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி இவை இரண்டிற்கும் இடையே உள்ள தொடர்பு மிகவும் உயர்ந்த அளவில் உள்ளது. உள்நாடு ,சாலை, ரயில் மற்றும் விமான நிலைய உட்கட்டமைப்பில் உள்ள முதலீடுகளின் தொடர்பு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) யில் 0.9 என்ற அளவிற்கு மேல் உள்ளது. இது உட் கட்டமைப்பில் ஜி டி பி மற்றும் முதலீடுகளுக்கு இடையே உள்ள வலுவான தொடர்பை குறிப்பிட்டுக் காட்டுகிறது. இதன் காரணமாகவே தேசிய ஜனநாயக கூட்டணி ( என் டி ஏ) அரசாங்கம் 2014 ம் வருட தனது ஆட்சிக் காலத் தொடக்கம் முதல் உட்கட்டமைப்பு முதலீட்டில் அதிக கவனம் காட்டி வருகின்றது.
மிக வெற்றிகரமான சமூக மற்றும் பொருளாதார மாற்றமானது, நீடித்த மட்டும் உள்ளடக்கிய உட்கட்டமைப்பு வசதிகளை மக்களுக்கு அளிப்பதன் மூலம் வெற்றி அடையும் என்று உலக அளவில் ஒப்புக்கொள்ளப்பட்ட நியதியை இந்த அரசாங்கம் கடைப்பிடிக்கின்றது. உள்நாடு, ரயில், சாலை மற்றும் விமான நிலையம் போன்ற நீண்டகால உட்கட்டமைப்பு திட்டங்களில், உட்கட்டமைப்புகளுக் காண செலவு சந்தேகமில்லாமல் பொது முதலீடு மற்றும் தனியார் துறை பங்கேற்பு போன்றவை மூலமுன் நடைபெறுகின்றது, அது சமீப காலத்தில் வெகுவாக உயர்ந்துள்ளது. உட்கட்டமைப்பு கடன் நிதி, உட்கட்டமைப்பு முதலீட்டு அறக்கட்டளைகள், வீட்டுமனை முதலீடு அறக்கட்டளைகள், மற்றும் உட்கட்டமைப்பு துறைகளில் பொது – தனியார் கூட்டாளித்துவத்தை பிரதான படுத்துவது போன்ற புதுமையான நிதி வழிகள் மூலம் முதலீடுகளை அதிகப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
உட்கட்டமைப்பில் முதலீடுகளை அதிக படுத்தியதன் மூலம், தேசிய முதலீடு மற்றும் உட்கட்டமைப்பு நிதி ( என் ஐ ஐ எஃப் ) இல், தோராயமாக 40 ஆயிரம் கோடி டாலர் மூலதனம் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய ஓய்வு ஊதிய நிதி அமைப்பு மற்றும் கனடாவின் ஒன்ராரியோ மாகாணம் இவை இரண்டும் தலா 100 கோடி டாலர் NIIF இல் முதலீடு செய்ய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. 2015 ஆம் வருடம் துவங்கப்பட்ட இந்த NIIF நிதி அமைப்பில் , சமீபத்தில் ஏற்பட்டுள்ள இந்த முதலீடு திட்டங்கள் உட்கட்டமைப்பு நீதியை மேம்படுத்த உதவும். அடுத்த ஐந்து வருடங்களில் ரூபாய் 100 லட்சம் கோடியை முதலீடு செய்வதற்கு இந்த வருட மத்திய பட்ஜெட்டில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.