ஜி-7 நாடுகளின் உச்சிமாநாடு.

(ஐ.நா.வுக்கான இந்தியாவின் முன்னாள் நிரந்தரப் பிரதிநிதி அசோக் முகர்ஜி அவர்களின் ஆன்கில உரையின் தமிழாக்கம் – ஸ்ரீப்ரியா சம்பத்குமார்.)

ஜி-7 உச்சிமாநாடுகள், 1975 ஆம் ஆண்டு, ஃபிரான்ஸால் துகக்கப்பட்டன. தீவிரமான உலகளாவியப் பிரச்சனைகள் பற்றி பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்கான ஒரு எளிய தளத்தை, உலகின் மிகப் பெரிய ஏழு நாடுகளின் தலைவர்களுக்கு வழங்கும் நோக்குடன் இது அமைக்கப்பட்டது. ஜி-7 நாடுகளைத் தவிர, இந்த பேச்சுவார்த்தைகளில், தேவையான முக்கிய இடங்களில், மற்ற முக்கிய நாடுகளையும் சேர்த்துக்கொள்வதன் மூலம், ஜி-7 பேச்சுவார்த்தைகளில் உலகளாவிய தாக்கம் ஏற்படும். 1989 ஆம் ஆண்டு, ஃபிரான்சில் நடைபெற்ற ஜி-7 உச்சிமாநாட்டில், பண மோசடி மற்றும் பயங்கரவாத நிதி உதவி ஆகியவற்றை எதிர்த்து நடவடிககைகள் எடுக்க, எஃப்.ஏ.டி.எஃப் என்ற நிதி நடவடிக்கை பணிக்குழு உருவாக்கப்பட்டது. சமீப ஆண்டுகளில், எப்.ஏ.டி.எஃப்- இன் உறுப்பினர் என்ற முறையில், இந்தியா, இந்தத் தளம் மூலமாக, பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதத்திற்கான நிதி வழங்கலை நிறுத்த, சர்வதேச ஒத்துழைப்பை நாடியுள்ளது.

ஃபிரான்ஸின் பியாரிட்ஸில் நடந்த ஜி-7 உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள, ‘பியாரிட்ஸின் சிறப்புக் கூட்டாளியாக’, பிரதமர் மோதி அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. வேறுபாட்டின் அனைத்து வகைகளையும் திறமையாக, சட்டப்பூர்வமாக, தெளிவாக எதிர்கொள்ளும் ஒரு பெரிய ஜனநாயகமாக இந்தியாவைப் பட்டியலிட வேண்டும் என்ற ஃபிரான்ஸின் விருப்பமே இதற்கு முக்கியக் காரணமாக இருந்தது. பன்முகத்தன்மையை ஊக்கப்படுத்தும் ஜனநாயக சமூகங்கள் என்ற வகையில், இந்தியாவும் ஃபிரான்ஸும், பருவ நிலை மாற்றம், பல்லுயிர் துறை மற்றும் கடல்கள், மற்றும் டிஜிட்டல் மாற்றங்கள் ஆகிய துறைகளில் ஜி-7 கட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்த முன்னுரிமை அளித்துள்ளன.

பருவநிலை மாற்றம் மற்றும் பல்லுயிர்த் துறைகளைப் பொறுத்த வரை, ஜி-7 மற்றும் இவ்வாண்டு செப்டம்பர் மாதம் 23 ஆம் தேதி நடக்கவிருக்கும் ஐ.நா-பொதுச் செயலாளரின் பருவநிலை நடவடிக்கைக்கான உச்சிமாநாடு ஆகியவற்றின் கட்டமைப்பின் கீழ் இருக்கும் புதிய முயற்சிகளுக்கு இந்தியா ஆதரவு தெரிவிக்கும். சந்திப்பின் போது, பிரதமர் மோதி அவர்கள், நிலையான எதிர்காலத்திற்கான நோக்குடன், ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குகளை நீக்குதல், நீர் சேமிப்பு, சூரிய சக்தியின் முறையான பயன்பாடு, தாவர மற்றும் விலங்கினங்களின் பாதுகாப்பு ஆகியவற்றில் இந்தியா எடுத்து வரும் அதிக அளவிலான முயற்சிகளைப் பற்றித் தான் வலியுறுத்திக் கூறியுள்ளதாகத் தெரிவித்தார்.

ஜி-7 உச்சிமாநாட்டிற்குப் பிறகு, யு.என்.எஃப்.சி.சி.சி-யின் 2015 ஆம் ஆண்டின் பாரிஸ் ஒப்பந்தத்தின்படி, நிதி வரவு மூலம், பசுமைக் குடில் வாயுக்களின் உமிழ்வைக் குறைத்து, பருவநிலை மாற்றத்தைக் குறைக்கத் தேவையான நடவடிக்கைகளை இந்தியா எடுக்கும். மோண்ட்ரியல் ப்ரோடோக்காலின் கிகாலி திட்டத்தின் படி, திறம்பட்ட குளிரூட்டலுக்கான துரித நடவடிக்கைகளுக்காக எடுக்கப்பட்டுள்ள ஜி-7 இன் பியாரிட்ஸ் உறுதிப்பாட்டின் கீழ், ஹைட்ரோ ஃப்ளூரோ கார்பன்களின் குறைப்பு மற்றும் குளிர்சாதனப் பெட்டித் துறையில் அதிகப்படியான செயல்திறன், தரங்கள் ஆகியவற்றிற்கான திட்டங்களில் இந்தியா பங்கெடுக்கும்.

டிஜிட்டல் துறையில், இந்தியாவும் ஃபிரான்ஸும், சர்வதேச சட்டங்கள் செல்லுபடியாகும், ஒரு திறந்தவெளியிலான, பாதுகாப்பான மற்றும் அமைதியான சைபர் தளம் மூலம் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு ஆதரவளித்துள்ளன. ஜி-7- இல் ஃபிரான்ஸ் நாட்டின் குறிக்கோள், சைபர் தளத்தில்  டிஜிட்டல் தொழில்நுட்பமும், செயற்கை நுண்ணறிவும் புரட்சியை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் வேளையில்,  அடிப்படை சுதந்திரத்தைப் பாதுகாக்கும் வடிவமைப்புடன் இருந்தது.

தரவுத் தொகுப்புகளைத் தேர்ந்தெடுத்து, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை உருவாக்குவதன் முக்கியத்துவம் பற்றியும் ஜி-7 உச்சிமாநாட்டில் பேசப்பட்டது. இந்தத் துறையில் சர்வதேசக் கூட்டுறவை மேம்படுத்த, இந்தியா உட்பட, பல்வேறு நாட்டு செயற்கை நுண்ணறிவு வல்லுனர்களை நியமிக்க யோசனை அளிக்கப்படுள்ளது. இரண்டாவதாக, ஆன்லைன் தளங்களின் பொறுப்பு மற்றும் வெளிப்படைத்தன்மைப் பற்றியும் ஜி-7 உச்சிமாநாட்டில் பேசப்பட்டது. திறந்தவெளி, இலவச, பாதுகாப்பான  இணையத்திற்கான ஒரு பிரிவும் இதில் அடங்கும். இணையத்தில் ஆபத்தான உள்ளடக்கங்கள் பரவப்படுவதைத் தடுக்க நிலையான உறுதிப்பாட்டை எடுக்கத் தயாராக இருக்கும் அரசாங்கங்கள், டிஜிட்டல் துறையில் இருக்கும் தளங்கள் மற்றும் வர்த்தகங்கள் இதில் சேர்த்துக்கொள்ளப்படும். ஜி-7 உச்சிமாநாட்டில், மூன்றாவதாக, தரவு-சார் தொழில்நுட்பங்கள் மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றில், குறிப்பாக 5-ஜி தொலழில்நுட்பம் மற்றும் தடையற்ற தரவுப் பரிமாற்றம், ஆகியவை தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தியா இந்த முக்கியத் துறைகளில் கலந்து கொள்வதன் மூலம், இந்தியாவில் மாறுதல்களுக்கு சைபர் தளத்தை உபயோகிப்பது குறித்த சர்வதேச முடிவுகளில் ஆக்கப்பூர்வமான தாக்கம் ஏற்படும்.

நமது பூமியை பலப்படுத்த, தொழில்நுட்பத்தைத் துரித கதியில் மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை பிரதமர் மோதி அவர்கள் வலியுறுத்தினார். குறிப்பாக, புதுமுயற்சிகளை ஊக்குவிப்பதில், உருமாறும் தொழில்நுட்பத்திற்கு உள்ள ஆற்றலையும், புதுமுயற்சிகளை ஊக்குவிக்கவும், இணையவழி கட்டண வசூல்களை ஊக்குவிக்கவும் இந்தியா தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் வகைகளையும் அவர் கோடிட்டுக் காட்டினார்.

ஜி-7 டிஜிட்டல் முயற்சிகள், எதிர்காலத்தில், ஐ.நா பொதுச்சபையில், சைபர் தளத்திற்கான, பலவகைப் பங்குதாரர்களைக் கொண்ட ஒரு அமைப்பை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளையும் ஊக்குவிக்கலாம். மக்களை மையமாகக் கொண்ட நிலையன வளர்ச்சிப் பணிகளுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த, நேர்த்தியான சர்வதேச கூட்டுறவிற்கான நியமங்களையும் குறிக்கோள்களையும் வழங்க, இப்படிப்பட்ட ஒரு அமைப்பு தேவையாக இருக்கும்.

பியாரிட்ஸில் நடந்த ஜி-7 உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் கலந்து கொண்டதும், அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் மற்றும் மற்ற உலக நாட்டுத் தலைவர்களுடன் அவர் நடத்திய இருதரப்பு சந்திப்புகளும், இந்தியாவிற்கு ஒரு குறிப்பிடத்தக்க அரசியல் ஆதாயத்தை அளித்துள்ளது. 2022 ஆம் ஆண்டு, இந்தியா ஜி-20 நாடுகளின் கூட்டமைபிற்கு தலைமை ஏற்கவுள்ள நிலையில், இந்தியாவின் வளர்ந்து வரும் தலைமைப் பண்பிற்கு இது ஒரு ஆக்கப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தும்.