“ ஜப்பான் தென்கொரியா வர்த்தக பதட்டம்”

கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் டிட்லி பாசு அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் ஆ.வெங்கடேசன்.

கிழக்கு ஆசியாவின் இரண்டு முக்கிய பொருளாதார நாடுகளான ஜப்பான் மற்றும் தென்கொரியா இரண்டும் வர்த்தக பதட்டங்களில் சிக்கியுள்ளது. தேசிய பாதுகாப்பு பிரச்சனைகளை சுட்டிக்காட்டி, ஜப்பான், ஹைட்ரஜன் ஃப்ளோரைடு எரிவாயு, புளோரிட்டபாலிமைடு, மற்றும்உயர் தொழில்நுட்ப தொழிற்சாலையில் பயன்படுத்தப்படும் புகைப்பட எதிர்ப்புத்திறன், போன்ற முக்கிய ரசாயனமூன்று ரசாயனப் பொருட்களை தென்கொரியாவுக்கு ஏற்றுமதி செய்வதில் வர்த்தக கட்டுப்பாடு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

ராணுவ பயன்பாட்டிற்காகவும் உபயோகப்படுத்தப்படும் இந்த ரசாயனப் பொருட்களின் உபயோகத்தை முற்றிலும் முடிவுக்கு கொண்டுவர ஜப்பான் கருதுகின்றது . ஜப்பானின் நண்பக மற்றும் விருப்ப வர்த்தக கூட்டாளி நாடுகள் பட்டியலில் இருந்து தென்கொரியாவை நீக்கியுள்ளது, ஏற்றுமதி செய்யப்படும் 1500 மிகமுக்கிய பொருட்கள் மீது தீவிர சோதனையையும் ஏற்படுத்தியுள்ளது.  இந்த வர்த்தக கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டால், இது சர்வதேச விநியோக சங்கிலி தொடரில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும்.

வெட்டு விளிம்பு திரைகள் மற்றும் சிப்ஸ் போன்றவற்றை தயாரிக்க, உபயோகப்படுத்தப்படும் ரசாயனங்களை இறக்குமதி செய்ய தென்கொரியாவின் முன்னணி நிறுவனங்கள் ஜப்பானை மிகவும் நம்பியுள்ளது.  தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகளினால், ஜப்பான் ஏற்றுமதியாளர்கள்,  தென்கொரியாவுக்கு பொருட்களை அனுப்புவதற்கு தேவையான அனுமதியை பெற வேண்டும், அதற்கு 90 நாட்கள் வரை காத்திருக்க வேண்டும்.தென்கொரிய நிறுவனங்கள் தயாரிப்பை நீடிப்பதற்கு ரசாயன பொருட்கள் கையிருப்பை மிகவும் நம்பியுள்ளது. தற்போதைய வர்த்தக பதட்டங்கள் தீர்க்கப்படவில்லை என்றால், ஸ்மார்ட் கைப்பேசி, கணினி மற்றும் இதர மின்னணு பொருட்கள் தயாரிப்பில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும். அதேசமயம் தென்கொரியாவும் தனது முக்கிய வர்த்தக கூட்டாளி நாடுகள் பட்டியலில் இருந்து ஜப்பானை நீக்கியுள்ளது. சியோல், சர்வதேச ஆதரவை பெறுவதற்கான நம்பிக்கையுடன்,  இந்த பிரச்சனையை உலக வர்த்தக நிறுவனத்தின் ( WTO)  பொதுச் சபைக்கு எடுத்துச் சென்றுள்ளது.

இந்தவர்த்தக பதட்டங்கள் தீர்க்கப்பட்டால், ஜப்பான் நாட்டின் ஏற்றுமதி கட்டுப்பாடானது, செயல் உத்தி பொருட்களின் வினியோகத்தில் தடங்கல் ஏற்படுத்தும், இடைநிலை பொருட்களில் தாக்கம் ஏற்படும் மற்றும் இதனால் தொழில்துறைகள், விளைவுகளை சந்திக்க நேரிடும்.தென்கொரியாவின், பொருளாதார வளர்ச்சியானது போன வருடம் 2.6 – 2.7 சதவிகிதமாக இருந்தது, அது இந்த வருடம் 2.4-2.5 சதவிகிதமாக குறைந்துள்ளது. ஜப்பான் நாட்டின் ஏற்றுமதி கட்டுப்பாடுகளை எதிர்கொள்வதற்காக, தென்கொரிய அரசாங்கம், 160 கோடி டாலர் அளவிலான தொகையை உள்ளூர் சந்தையில் செலுத்த திட்டமிட்டுள்ளது. விநியோக சங்கிலி நீடிக்க, தென் கொரியா தனது விநியோகஸ்தர்களை சீனாவின் பக்கம் திருப்பியுள்ளது.

இருதரப்பு உறவுகளில் உள்ள வரலாற்று பிரச்சனைகளை டோக்கியோ எதிர்கொள்ள முடியாத காரணத்தினால், ஜப்பான் தங்களது பொருளாதாரத்தை வலுவிழக்க செய்கிறது என்று தென்கொரியா வாதாடுகிறது. இந்த வர்த்தக கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அரசியல் தூண்டுதல் ஆகும். 2018 ஆம் வருடம் தென்கொரியாவின் உச்சநீதிமன்றம்,காலனித்துவ ஆட்சிக்காலத்தில் அமர்த்தப்பட்ட கட்டாய தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்கக்கோரி, ஜப்பான் நாட்டின் மிட்சுபிஷி கனரக தொழிற்சாலைக்கு, உத்தரவிட்டது, அதைத் தொடர்ந்து அதன் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ஜப்பான் நாட்டு நிறுவனங்களான நிப்பான் ஸ்டீல் கார்ப்பரேஷன் மற்றும் Nachi Fujikoshi நிறுவனத்திற்கும் இதேபோன்ற உத்தரவு தென்கொரியாவில் பிறப்பிக்கப்பட்டது.அதேசமயம், 1965ஆம் வருட ஒப்பந்தத்தின் படி, கொடுக்கப்பட வேண்டிய அனைத்து தொகைகளும் தீர்க்கப்பட்டு விட்டது, அதைத்தொடர்ந்து இரு நாடுகளுக்கிடையே உள்ள உறவுகள் இயல்பு நிலைக்கு வந்துவிட்டது , என்ற நிலைப்பாட்டை ஜப்பான் அரசாங்கம் தக்கவைத்துக் கொண்டுள்ளது.

தற்பொழுது நடைபெற்று வரும் வர்த்தக உராய்வுகள் , பொருளாதார பிரச்சனைகளையும் தாண்டி, இரு நாடுகளுக்கிடையே பாதுகாப்பு சம்மந்தமான பிரச்சனைகளும் ஏற்பட்டுள்ளது.  ஜப்பான் நாட்டுடன்,  ராணுவ தகவல் ஒப்பந்ததின் பொது பாதுகாப்பை தென் கொரியா நிறுத்தியுள்ளது. டோக்கியோ உடன் உளவுத்துறை பரிமாற்றம் செய்வதை, சியோல் சிரமமாக கருதுகின்றது. வடகொரியாவின் அணு ஆற்றல் அச்சுறுத்தலை எதிர் கொள்ளும் நோக்குடன்,  அமெரிக்காவின் நெருங்கிய நாடுகளான இவை இரண்டிற்கும் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்குடன் இந்த ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்திற்கு முன்பாக ஜப்பானும் ,தென்கொரியாவும், உளவுத்துறை தகவல் பரிமாற்றத்தை அமெரிக்க மூலமாக பெற்றது.

அமெரிக்கா- சீனா வர்த்தக போர், ஏற்றுமதி பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் இந்த நேரத்தில், ஜப்பான் – தென்கொரியா வர்த்தக பதட்டங்கள், அரசியல் விருப்பத்துடன் இருபக்க உறவுகளில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்பட வேண்டும்.

இந்தியாவின் கிழக்கு நோக்கு கொள்கையில் ஜப்பான் மற்றும் தென் கொரியா இரண்டு நாடுகளும் முக்கிய செயல் உத்தி கூட்டாளி நாடுகளாக உள்ளன. தடையில்லா வர்த்தகம் மற்றும் திறந்த சந்தைக்கு வர்த்தக பட்டங்களை தணிப்பது மிக முக்கியமாகும்.