பாகிஸ்தானில் குழப்பம்

கெளல் ஜலாலி ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்.  தமிழில் பி இராம மூர்த்தி.

ஜம்மு காஷ்மீர் பிரச்சனையில் பாகிஸ்தான் நாட்டிற்கு இன்னமும் குழப்பம் தீர்ந்தபாடில்லை.  ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அதிகாரமளிக்கும் 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டதிலிருந்து உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்க முயற்சி செய்து வருகிறது. போர் துவங்குவோம் என்று பேசிவந்த பாகிஸ்தான் அரசு மத்திய கிழக்கு நாடுகளிலும், மேற்கு ஆசிய நாடுகளிலும் சரியான ஆதரவு கிடைக்காத நிலையில் தடுமாறி வருகின்றது பாகிஸ்தான் அரசு.  இவ்வாறாக எந்த இஸ்லாமிய நாட்டின் ஆதரவும் கிடைக்காத நிலையில், அனைத்து நாடுகளும் காஷ்மீர் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என தெரிவிக்கவே பாகிஸ்தான் அரசு குழப்பத்தில் உள்ளது.

துருக்கி மற்றும் மலேசியா நாடுகள் மட்டுமே பாகிஸ்தான் குரலுக்கு செவி சாய்த்த போதிலும் பாகிஸ்தான் ஆதரவு குரலான ஜாகீர் நாயக்கிற்கு எதிராக தடைகளை விதித்த மலேசிய அரசு, கூட்டு காஷ்மீர் பிரச்சனையில் பாகிஸ்தானிற்கு ஆதரவாக குரல் கொடுக்காதது பாகிஸ்தானை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது,

சீனா மற்றும் பாகிஸ்தானின் முதலை கண்ணீருக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு குழுவிலும் ஆதரவு கிடைக்காத நிலையில் தேவையில்லாமல் தனது பாகிஸ்தான், நாட்டு மக்களையும் குழப்பத்தில் ஆழ்த்தி வருகின்றது.

காஷ்மீர் பிரச்சனைக்காக வருகின்ற அக்டோபர் மாதத்தில் இந்தியாவுடன் போர் ஏற்படும் என அந்நாட்டின்  தொடர் வண்டி அமைச்சர் ஷேக் ரஷிது கூறியுள்ளார்.  பிரதமர் இம்ரான்கான், இராணுவ தளபதி பஜ்வா இவர்களின் ஆதரவுடன் காஷ்மீர் பிரச்சனை தீர்க்கப்படும் என அமைச்சர் ஷேக் ரசீது குழப்பியுள்ளார். எனவே பாகிஸ்தான் நாட்டின் மொத்த அமைச்சரவையும் குழப்பத்தில் உள்ளது தெளிவாகிறது.  ஜம்மு காஷ்மீர் 1947-ம் ஆண்டு இந்தியாவுடன் இணைக்கப்பட்டதில் இருந்தே இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக  இருந்து வரும் நிலையில் பாகிஸ்தானில் நிலவும் குழப்பங்களால் அந்நாட்டு  மக்கள் மேலும் குழம்பியுள்ளனர்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 13,000 சதுர கிலோமீட்டர்களை தன் வசம் வைத்துள்ள பாகிஸ்தான் அரசு ஒரு பகுதியை சீனாவிற்கு தாரை வார்த்துள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை பற்றி மட்டுமே இந்தியா பேச்சு வார்த்தை நடத்தும்.  ஆனால் தீவிரவாதம் தடுக்கப்பட்டால் மட்டுமே பேச்சுவார்த்தை துவங்க இயலும் என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெளிவாக கூறியுள்ளார்.  பாகிஸ்தான் அரசு பொறுப்பற்ற முறையில் போரை தூண்டும் வகையிலும் பேசி வருவதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது இந்திய வெளியுறவுத்துறை.

தீவிரவாதத்தை வேரறுக்க வேண்டிய முயற்சிகளை உடனடியாக பாகிஸ்தான் அரசு மேற்கொள்ள வேண்டும் என இந்தியா கோரியுள்ளது.  பொருளாதாரத்தில் சீரழிந்து வரும் பாகிஸ்தான் அரசு அந்நாட்டின் பிரதமர் அலுவலகத்திற்கான 41 இலட்சம் மின்சார கட்டணத்தை கூட கட்ட இயலாத நிலையில், மின் இணைப்பு துண்டிக்கபடவுள்ளது.

சர்வதேச செலாவணி(IMR)  பாகிஸ்தான் அரசின் மீது பல்வேறு தடைகளை விதித்துள்ளது.  தீவிரவாதத்திற்கு எதிரான 40 காரணிகளில் 32 காரணிகளில் பாகிஸ்தான் அரசு தோற்று போய்விட்டதாக கூறியுள்ள ஆசிய பசிபிக் குழு பாகிஸ்தான் அரசை தடை செய்யும் முடிவில் உள்ளது.

பாகிஸ்தான் அரசு தனது நாட்டின் மக்களின் மீதும், பொருளாதாரத்தின் மீதும் கவனம் செலுத்துமா என்று உலக நாடுகள் வியந்த வண்ணம் உள்ளன.