பாகிஸ்தானின் வெறுப்புப் பிதற்றலுக்கு செவிமடுப்போர் யாருமில்லை.


(ஆல் இண்டியா ரேடியோ செய்தி ஆய்வாளர் கௌஷிக் ராய் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.) ஐ.நா.வின் 74 ஆவது பொதுச்சபையில், காஷ்மீர் விஷயத்தை எழுப்ப முயன்ற பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் முயற்சி படுதோல்வியடைந்தது. ஐ.நா. பொதுச்சபையில் அவர், இந்திய மாநிலமான ஜம்மு – காஷ்மீர் மக்களின் நிலை குறித்து வக்காலத்து வாங்கி வெற்றுரை நிகழ்த்தினார். இருப்பினும், அவரது பேச்சுக்கு யாரும் செவி மடுக்கவில்லை. பின்னர், போர்…

அதிபர் தேர்தலுக்குத் தயாராகும் இலங்கை.


(அரசியல் விமரிசகர் எம் கே டிக்கு அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – நித்யா வெங்கடேஷ்.) இலங்கையின் வானிலையைப் போலவே, தற்போது, அதன் அரசியல் சூழலும் மாறுபட்டுக்கொண்டே வருகிறது. நவம்பர் 16 ஆம் தேதி நடைபெறவுள்ள அதிபர் தேர்தலுக்கு அந்நாடு தயாராகிவருகிறது. ஆனால் தேர்தல் பிரச்சாரம் மிகவும் மந்தமாகவே உள்ளது. நாட்டின் உச்ச பட்ச பதவிக்கான தேர்தல் இது என்பதைக் கருத்தில் கொண்டு பார்த்தால், இது வழக்கத்துக்கு மாறாக உள்ளது.…

74 ஆவது ஐ.நா.பொதுச்சபையில் பிரதமர் நரேந்திர மோதி அவர்களின் உரை.


(ஐ.நா.வுக்கான இந்தியாவின் முன்னாள் நிரந்தரப் பிரதிநிதி, அசோக் முகர்ஜி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.) கடந்த வெள்ளியன்று, 74 ஆவது ஐ.நா.பொதுச்சபையில் பிரதமர் நரேந்திர மோதி அவர்கள், வறுமை ஒழிப்பு, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் பருவநிலை மாற்றத்தை எதிர் கொள்வதற்கான நடவடிக்கைகள் ஆகியவற்றை  மையமாகக் கொண்டு உரையாற்றினார். 2015 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 25 ஆம் தேதியன்று, நீடித்த வளர்ச்சிக்கான, 2030 ஆம் ஆண்டுக்கான…

ஃபின்லாந்துக்கு, தீவிரவாதம் குறித்த தனது நிலைப்பாட்டை விளக்கும் இந்தியா.


(ஐரோப்பிய விவகாரங்களுக்கான செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் சங்கமித்ரா சர்மா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – த.க.தமிழ் பாரதன்.) இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் அவர்கள், மூன்றுநாள் பயணமாக ஃபின்லாந்து சென்றார். அமைச்சராகப் பொறுப்பேற்ற பின் நார்டிக் நாடுகளுக்கு அவர் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். 1950 இலிருந்து இருநாடுகளுக்கும் இடையே, பரஸ்பரம் உயர்நிலைப் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவை இருநாடுகளுக்கும் இடையே நிலவும் வழக்கமான, துடிப்புமிக்க உறவுகளை வெளிப்படுத்தும்…

கரீபியன் மற்றும் பஸிஃபிக் தீவுகளுடனான உறவைப் புதுப்பிக்கும் இந்தியா.


(ஆல் இண்டியா ரேடியோ செய்தி ஆய்வாளர் கௌஷிக் ராய் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.) நியூயார்க்கில் நடைபெறும் ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்துக்கு இடையே, பிரதமர் நரேந்திர மோதி அவர்கள், கரீபியன் சமுதாயத்தைக் குறிக்கும் கரீகாம் எனப்படும் நாடுகளின் 14 தலைவர்களைச் சந்தித்தது, கரீபியன் தீவுகளில் உள்ள நாடுகளுடன் இந்தியா கொண்டுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க நட்புறவுகளுக்கு ஊக்கம் அளித்துள்ளது. பிரதமரின் இந்த சந்திப்புக்கு, செயிண்ட் லூசியா நாட்டின் பிரதமரும்…

இந்தியா – அமெரிக்கா இருதரப்புப் பேச்சுவார்த்தை.


(ஜேஎன்யு அமெரிக்கன் கல்விப் புலத்தின் தலைவர் மற்றும் சார் துணைவேந்தர் சிந்தாமணி மஹாபாத்ரா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – த.க.தமிழ்பாரதன்) இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி அவர்களின் சாதுரியமான, ஈர்ப்புத்தன்மைமிக்க ராஜீயத் திறமைகளை ஒப்பிடக்கூடிய அளவிற்கு, வேறொரு தலைவர் தற்காலத்தில் இல்லை. அவர் எங்கு சென்றாலும் தலைவர்களையும், சட்ட வல்லுநர்களையும், மக்களையும் கவர்ந்து அவர்களை இந்தியாவுக்கு நெருக்கமானவர்களாக மாற்றி விடுகிறார். பிரதமரின் இந்தத் திறன் ஹியூஸ்டன் நிகழ்வின் மூலம் உலகிற்கு வெளிப்படையாகத் தெரிந்துள்ளது. அமெரிக்க…

பருவநிலை மாறுபாடு தான் உண்மையான சவால் –  ஐநா மன்றத்தில் பிரதமர் நரேந்திர மோதி மீண்டும் வலியுறுத்தல்.


(இண்டியன் சயின்ஸ் பத்திரிக்கையின் நிர்வாக ஆசிரியர் என். பத்ரன் நாயர் அவர்கள் ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம் ஆர். ராஜ்குமார் பாலா.) சுவீடனைச் சேர்ந்த 16 வயதான சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேடா தன்பெர்கின் உருக்கமான கோரிக்கை நியூயார்க்கில் ஐநா மன்றக்கூட்டத்தில் கூடியிருந்த உலகத் தலைவர்களின் மனதை உலுக்கியது. ”வருங்காலச் சந்ததியினர் அனைவரும் உங்களை எதிர்நோக்கியுள்ளோம். நீங்கள் கடமை தவறினால், நான் உறுதியாக கூறுகிறேன். உங்களை நாங்கள் மன்னிக்கவே மாட்டோம்” என்று அந்த…

நலமா மோதி – முன்னெப்போதும் இல்லாத ஒரு நிகழ்வு.


(அமெரிக்காவுக்கான இந்தியாவின் முன்னாள் தூதர் நவ்தேஜ் சர்னா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – தமிழ் பரதன்.) பாரதப் பிரதமர் நரேந்திர மோதி அவர்களின் அமெரிக்கப் பயணத்தில், டெக்ஸாஸ் மாகாணம் ஹியூஸ்டன் நகரில் நடைபெற்ற நலமா மோதி நிகழ்ச்சி பெரும் வெற்றி பெற்றுள்ளது. ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய அமெரிக்கர்கள் பங்கேற்ற அந்நிகழ்வில் மோதி அவர்களுடன், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மேடையை அலங்கரித்தார். இந்திய அமெரிக்க சமூகத்தினரிடையே இதற்கு முன்…

மங்கோலிய அதிபரின் இந்தியப் பயணத்தால் வலுப்பெறும் உறவுகள்.


(காமன்வெல்த் சுதந்திர நாடுகளின் செயலுத்தி ஆய்வாளர் டாக்டர்  அத்தார் சஃபரின்  ஆங்கில உரையின் தமிழாக்கம் – லட்சுமண குமார்.) இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களின் அழைப்பை ஏற்று, மங்கோலியா அதிபர் கல்ட்மாஜின் பட்டுல்கா இந்தியா வந்துள்ளார். கடந்த பத்தாண்டுகளில் மங்கோலிய அதிபர் ஒருவர் இந்தியாவிற்கு வருகை தந்திருப்பது இதுவே முதல் முறையாகும். மங்கோலிய அதிபருடன் அரசு அதிகாரிகள் மற்றும் தொழில் தலைவர்கள் அடங்கிய உயர் நிலை பிரதிநிதிக்…

களத்தைப் புரட்டிப் போடும் திறனை நோக்கிப் பயணிக்கும் இந்திய விமானப்படை.


(பாதுகாப்பு ஆய்வாளர் உத்தம்குமார் பிஸ்வாஸ் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – மாலதி தமிழ்ச்செல்வன்.) இந்திய விமானப்படை (ஐஏஎஃப்), அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில், விண்ணில் ஆதிக்கம் செலுத்தவல்ல, அதிகத் திறன் கொண்ட, முதலாவது ரஃபேல் போர் விமானத்தை பிரெஞ்சு டசால்ட் ஏவியேஷனில் இருந்து பெற உள்ளது பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரான்சிற்குச் சென்று, முதல் ரஃபேல் ஜெட் விமானத்தை பெற்றுக் கொள்வார். ரஃபேல் விமானங்களை இயக்குவதற்காக மூன்று வெவ்வேறு குழுக்களாக 24 விமானிகளுக்கு அடுத்த ஆண்டு…