“போலந்து மற்றும் ஹங்கேரி நாடுகளுடன் உறவுகள் மீட்டு அமைப்பு”

ஐரோப்பிய விவகாரங்களின் செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் சங்கமித்ரா ஷர்மா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் ஆ.வெங்கடேசன்.
மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளுடன் கூட்டாளி துவத்தை விரிவுபடுத்தும் நோக்குடன், போலந்து மற்றும் ஹங்கேரி நாடுகளுக்கு, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர் அவர்கள் பயணம் மேற்கொண்டு இருப்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.
ஹங்கேரி நாட்டுடன் உறவுகள் நிலையாகவும் மற்றும் பன்முகத் தன்மையுடன் உள்ளது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஹங்கேரி நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் Peter Szijjarto அவர்களை சந்தித்தார். திரைப்பட தயாரிப்பு, மின்னணுத் துறை, நீர் மேலாண்மை, சூரிய ஆற்றல் மற்றும் மருந்து பொருட்கள் போன்ற துறைகளில் ஒருங்கிணைப்பை மேம்படுத்த, ஹங்கேரி நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் வலியுறுத்தினார். ஹங்கேரி நாட்டில் இந்திய முதலீடுகளின் நேர்மறையான போக்கு, மற்றும் அங்கு தொழில் புரிவதற்கு சாதகமான சூழ்நிலை போன்றவை, இந்திய தரப்பில் இருந்து பாராட்டப்பட்டது. கல்வி, சுற்றுலா, மற்றும் அறிவியல் போன்ற துறைகளில் இருபக்க தொடர்புகளை மேம்படுத்த இருதரப்பும் ஒப்புக் கொண்டுள்ளது. சர்வதேச சூரிய ஆற்றல் கூட்டணி ( ISA) இல், ஹங்கேரி நாடு இணைவது என்று முடிவு செய்திருப்பது, சூரிய ஆற்றல் மேம்பாடு, சரியான திசையில் செல்வதற்கு மேலும் வழிவகுக்கின்றது. பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவது, மற்றும் நாடாளுமன்ற உறவுகள் மற்றும் ஒத்துழைப்புக்களை அதிகரிப்பது, போன்றவற்றின் அவசியத்தை பற்றி இரு நாடுகளுகளு க்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.

போலாந்து நாட்டிற்கு டாக்டர் ஜெய்சங்கர் அவர்கள் பயணம் மேற்கொண்டு இருப்பது, கடந்த 32 வருடங்களில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஒருவர் அந்நாட்டிற்கு பயணம் மேற்கொண்டு இருப்பது இதுதான் முதல் முறையாகும். ஐ நா மற்றும் ஜி-20 போன்றவற்றில் இந்தியாவின் பங்கு மிகவும் குறிப்பிடத்தக்கது, மற்றும் தெற்கு ஆசியாவில் இந்தியா, போலந்து நாட்டின் மிக முக்கிய கூட்டாளி என்றும் போலந்து நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் பேராசிரியர் Jacek Czaputowicz அவர்கள் வலியுறுத்தினார். மத்திய ஐரோப்பிய பிராந்தியம் மற்றும் Visegrad குழுவில், தீவிரமாக ஈடுபடுவதற்கான இந்தியாவின் விருப்பம், சரியாக தெரிவிக்கப்பட்டது. சர்வதேச ஸ்திரத்தன்மையை பராமரிக்க, பயனுள்ள பலதரப்பட்ட அமைப்பு மற்றும் விதிகள் சார்ந்த உலக ஒழுங்கு போன்றவை மிக முக்கியம் என்று இரு அமைச்சர்களும் மீண்டும் வலியுறுத்தினர்.

இரு தரப்பு அரசியல் ஒத்துழைப்பு, தவிர , பொருளாதாரம், கல்வி மற்றும் கலாச்சாரம் போன்ற துறைகளில் உள்ள பலதரப்பட்ட பிரச்சனைகள் பற்றி இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராடுவதில் போலந்து நாட்டின் தெளிவான நிலைப்பாட்டை பேராசிரியர் Czaputowicz அவர்கள் வெளிப்படுத்தினார். இந்தோ பசுபிக் மற்றும் மேற்காசியாவில் ,அமைதி மற்றும் பாதுகாப்பை நிலைநாட்டுவது, கடல் வழி மற்றும் வான்வழி பாதுகாப்பு, இணைய பாதுகாப்பு, மனிதாபிமான பிரச்சினைகள், அகதிகள் மற்றும் மனித உரிமைகள், போன்ற பலதரப்பட்ட பிரச்சனைகளும் இந்த பேச்சுவார்த்தையில் இடம் பெற்றது.
பாலிஷ் தேசிய கேரியர் LOT , நேரடி விமான சேவையை Warsaw வில் இருந்து புதுடெல்லி க்கு துவக்க உள்ளது என்ற அறிவிப்பும் இந்த இரு அமைச்சர்களின் சந்திப்பின் போது ஏற்பட்டு இருப்பது, குறிப்பிடத்தக்க சாதனையாகும். இந்த முயற்சியின் மூலம், சுற்றுலா மற்றும் வணிகம் போன்றவை விரிவுபடுவது மட்டுமல்லாமல், இரு நாட்டு மக்களுக்கு இடையே நெருக்கத்தையும் ஏற்படுத்தும்.

வர்த்தகத்தை பொருத்தவரை, மத்திய ஐரோப்பிய பிராந்தியத்தில் போலந்து நாடு, இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளி மற்றும் ஏற்றுமதி இலக்கு நாடாகும் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும், இந்தியா மற்றும் மத்திய ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே உள்ள ஒத்துழைப்பின் சாத்தியக்கூறுகள், வெகுநாட்களாக முற்றிலும் எடுக்கப்படாமல் உள்ளது. மிக முக்கியமாக திகழும் இந்த பிராந்தியத்தில், மக்களுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்துவது, மட்டுமல்லாமல் பொருளாதார மற்றும் கலாச்சார ஈடுபாடுகளை மேம்படுத்துவது, இந்தியாவை பொறுத்தவரை செயலுத்தி முக்கியத்துவம் ஆகும். சீனாவின் 16+1 என்ற முன்முயற்சி, இந்த பிராந்தியத்தில் புவி அரசியல் தாக்கங்களை ஏற்படுத்தும்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு ஆகியோரின் உயர் அளவிலான பயணம் கிழக்கு, தெற்கு மற்றும் மத்திய ஐரோப்பிய நாடுகளில் சமீபகாலத்தில் ஏற்பட்டிருப்பது , இந்த பிராந்தியத்தின் உறவுகளை புதுப்பிக்கும் நோக்குடன் ஏற்பட்டுள்ளது, என்று நோக்கவேண்டும். இந்தியப் பெருங்கடல் மற்றும் Baltic கடல், இரண்டையும் இணைக்கும் , பல- மாதிரி சர்வதேச வடக்கு தெற்கு போக்குவரத்து வழித்தடம், INSTC , திட்டத்தைப் பொறுத்தவரை ஹங்கேரி நாட்டுடனான உறவுகள் மிக முக்கியப் பங்கு வகிக்கும். ஆசியாவில் தங்களது செயல்களை விரிவுபடுத்தும் நோக்குடன் போலந்து நாடானது நேரடி தொடர்பை ஏற்படுத்த இலக்கு நிர்ணயித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் போலந்து நாடானது ஏழாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக திகழ்கிறது, அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி GDP யானது 52400 கோடி யூரோ வாக உள்ளது. இந்திய முதலீட்டாளர்களை பொருத்தவரை தற்பொழுது, நெகிழ்வு திறன்கொண்ட போலந்து பொருளாதாரத்துடன் உறவுகளை, மீட்டமைப்பு செய்வது, மிகச்சிறந்த கூற்றாக விளங்குகிறது. ஐ நா பாதுகாப்பு சபையின் ஆகஸ்ட் மாத தலைமைதாங்கும் நாடாக போறன் விளங்கும் இந்த வேளையில், டாக்டர் ஜெய்சங்கர் அவர்களின் பயணம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக அமைந்துள்ளது, குறிப்பாக காஷ்மீர் மீது பாகிஸ்தான் எடுக்கும் நடவடிக்கைகளை தடுக்கும் விதமாகவும் அமைந்துள்ளது.