வங்கிகள் மேலும் அதிக பண பரிமாற்றம் செய்வதற்காக ரெப்போ வட்டி விகிதத்துடன், வங்கி கடன் வட்டி விகிதங்களை இணைக்கும் மத்திய ரிசர்வ் வங்கி

மூத்த பொருளாதார  பத்திரிக்கையாளர் ஜி. ஸ்ரீநிவாசன் ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம் சத்யா அசோகன்

 

வங்கிகளுக்கு மத்திய ரிசர்வ் வங்கி வழங்கும் கடன்களுக்கு நிர்ணயிக்கப்படும் வட்டி விகிதத்தை ரெப்போ விகிதம் என்பார்கள்.  எப்போதெல்லாம் ரிசர்வ் வங்கி இந்த வட்டி விகிதத்தை குறைத்தாலும், வங்கிகள் பயனடைந்தனவே தவிர அந்த பயனை வங்கிகளிடமிருந்து கடன் பெற்றவர்களுக்கு தருவதற்கு வங்கிகளுக்கு விருப்பம் இருந்ததில்லை.  இம்முறை ரெப்போ விகிதத்தை நேரடியாக வங்கி பயனாளர்களுக்கும் பயனளிக்கும் வகையில் குறைத்துள்ளதால்,  வங்கிகளிலிருந்து கடன் பெறும், பெற்றிருந்த சில்லறை வியாபாரிகள், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், தனியார் கடன்கள் போன்றவற்றையும் ரெப்போ விகிதத்துடன் ரிசர்வ் வங்கி இணைக்க முடிவெடுத்துள்ளாதல்,  வங்கிகளிடமிரருந்து கடன் பெறுபவர்கள் நிம்மதி பெருமூச்சு விடலாம். இவ்வாறு கடன் பெற்றவர்களின் மாதாந்திர தவணை தொகை குறையக்கூடும்.

ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு கொடுக்கும் கடன்தொகைக்கான வட்டி விகிதத்தை ஓரளவு குறைக்கும்போதும்,  வங்கிகள் அதன் பயனை தங்களிடம் கடன் பெற்றவர்களுக்கு கொடுக்க விரும்புவதில்லை. அவர்களிடம் பெறும் வட்டி விகிதத்தை குறைப்பதுமில்லை என்பதால் வர்த்தகம்,  தொழில் துறை மற்றும் நுகர்வோருக்கு பயனளிக்கவேண்டும் என்பதை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.  எனவே ஃபிப்ரவரி மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் ரிசர்வ் வங்கி தனது வழக்கமான இரு ஒரு முறை எடுக்கும் வட்டி விகிதம் குறித்த கொள்கை முடிவுகளில் இது வரை 75 அடிப்படை புள்ளிகளை ரெப்போ வட்டி விகிதத்தில் ரிசர்வ் வங்கி குறைத்திருந்தாலும் கூட வங்கிகள் தங்களிடம் கடன் பெறுபவர்களின் வட்டி விகிதத்தை வெறும் 29 அடிப்படை புள்ளிகள்தான் குறைத்துள்ளன.

பொருளாதார மந்த நிலை மற்றும் வீட்டு மனை கடன்கள் பெறுபவர்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டிருப்பதை கருத்தில் கொண்டு, குறைக்கப்படும் ரெப்போ வட்டி விகிதத்தின் பலன்களை வங்கிகளில் கடன் பெறுவோர் மற்றும் வைப்பு நிதி வைத்திருப்போர்களுக்கு  எவ்வாறு கிட்டுமாறு செய்வது என்று பல வழிவகைகளை சிறிது காலமாகவே ஆர்.பி.ஐ ஆராய்ந்து கொண்டிருந்தது.   அதற்கான ஒரு முக்கிய முயற்சி  ரெப்போ வட்டி விகித குறைப்புகளை நேரடியாக கடன் மற்றும் வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்துடன் இணைப்பதாகும்.  இந்த ஆண்டு மே மாதம் முதல்,  நாட்டின் மிகப்பெரிய வங்கியான எஸ்.பி.ஐ தனது வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் மற்றும் குறுகிய கால கடன்களுடன் ஆர்.பி.ஐயின் ரெப்போ வட்டை விகிதத்தை இணைப்பதாக அறிவித்திருந்தது.  சிண்டிகேட் வங்கி, யூனியன் வங்கி, இந்தியன் வங்கி, பாங்க் ஆஃப் இந்தியா மற்றும் அலகாபாத் வங்கி ஆகிய ஐந்து வங்கிகள் ரெப்போ வட்டி விகித இணைப்புகள் கொண்டு வருவது குறித்த தங்களது திட்டங்களை அறிவித்துள்ளன.

மத்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து வங்கிகள் பெறும் நிதியானது மிக மிக சிறிய அளவேயாகும்.  ஒரு சதவிகித நிதியைத்தான் வங்கிகள் ரிசர்வ் வங்கியிடமிருந்து பெறுகின்றன.  பெருமளவிலான நிதியானது பொது மக்களின் வைப்பு தொகையிலிருந்தே பெறப்படும் நிலையில் வங்கிகள் தங்களது வட்டி விகிதங்களை குறைப்பது, அதிகரிப்பது குறித்து தங்களது இயலாமையை வெளியிட்டுள்ளன.  எனவே சேமிப்பு கணக்குகளின் வட்டி விகிதங்களை ரெப்போ வட்டிவிகிதத்துடன் இணைப்பதன் மூலம்,  ஒவ்வொரு ரெப்போ வட்டி விகித குறைப்பு அறிவிப்பினால் குறைக்கப்படும் கடன் வட்டி விகிதங்களினால் ஏற்படும் இழப்பை ஓரளவு சமாளிக்க முடியும்.

புதிய வீட்டு கடன் மற்றும் வாகன கடன்களை ரெப்போ வட்டி விகித கொள்கை அறிவிப்புடன் இணைப்பதற்கு மூன்று வரையறைகளை ஆர்.பி.ஐ முன்மொழிந்துள்ளது. அவை எஃப்.பி.ஐ.எல் வெளியிடும் இந்திய அரசின் மூன்று மாத மற்றும் ஆறு மாத கரூவூல மசோதாவில் அறிவிக்கப்படும் பண வரவுகள் அல்லது எஃப்.பி.ஐ.எல் வெளியிடும் வேறு ஏதாவது சந்தை வட்டி விகித  வரையறையாகும். அத்தகைய வெளி வரையறைகளின் அடிப்படையிலும் வீட்டு, வாகன மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழிலுக்கான கடன்கள் தவிர மற்ற கடனாளர்களுக்கு வங்கிகள் இணைப்பு வழங்க ஆர்.பி.ஐ அனுமதி அளித்திருக்கிறது.  ஆனால் வங்கிகள் ஒரு குறிப்பிட்ட வகையான கடனுக்கு ஒரே மாதிரியான வெளி வரையறையை பின்பற்ற வேண்டும் என கூறியுள்ளது.

வங்கிகள் தங்களிடமுள்ள வைப்பு நிதிகளுக்கும், தாங்கள் அளிக்கும் கடன்களுக்குமான வட்டி விகிதங்களை திருத்தும் வழிமுறைகள் மர்மமானவையாகவே இருந்து வந்திருக்கின்றன.  வட்டி விகித குறைப்புகள் போதிய அளவில் பரிமாற்றப்படாமல் இருந்து வருவது கொஞ்ச காலமாகவே ரிசர்வ் வங்கியை கவலையில் ஆழ்த்தி வந்தது. இந்த அடிப்படையில்தான ரெப்போ வட்டி விகிதம் போன்ற வெளி வரையறையின் மூலம் சில்லறை  கடனாளர்கள் மற்றும் வைப்பு நிதியாளர்களுக்கு அளிக்கப்படும் வட்டி விகிதங்களில் வெளிப்படை தன்மையை கொண்டு வர ஆர்.பி.ஐ முயல்கிறது.

புதிய கடன் அளிக்கும் விதிமுறைகளுக்கு மாறுவது வேகமான பண பரிமாற்றத்திற்கு வழி வகுக்கும் என்றாலும்,  வங்கிகளுக்கு வரும் காலங்களில் மேலும் நிலையற்ற தன்மையை வருமானத்தில் கொண்டு வரும்.  ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்படும் போது தங்களது சேமிப்பு மற்றும் வைப்பு நிதிகளின் வட்டி விகிதங்காளை குறைக்கவும், அதிகமாகும் போது  வங்கிகள் அளித்திருக்கும் கடன்களுக்கான வட்டி விகிதங்களை அதிகப்படுத்தவும் வங்கிகள் தயாராகவே உள்ளன என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.  தற்போது ஆர்.பி.ஐ எடுத்திருக்கும் முடிவால் தங்களது பயனாளர்கள் பெற்றிருக்கும் மனை மற்றும் வாகன கடங்களுக்கான வட்டி விகிதம் குறைக்கப்படுவதால்,  தங்களது வாடிக்கையாளர்களின் சேமிப்பு கணக்குகள் மற்றும் வைப்பு நிதிகளுக்கு கொடுக்கப்படும் வட்டி விகிதத்தை குறைக்கும் நிலைக்கு வர்த்தக வங்கிகள் தள்ளப்படலாம் என்று கொள்கை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.