பாகிஸ்தான் மீண்டும் நிராகரிக்கப்பட்டது.

செய்தி நிபுணர் கௌசிக் ராய் அவர்கள் ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம் ஆர். ராஜ்குமார் பாலா

 

காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் மிக நெருக்கடியான நிலைமையைச் சந்தித்துவருகிறது. ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அதிகாரத்தை இந்தியா திரும்பப்பெற முடிவு குறித்து சர்வதேச கவனத்தைப் பெற பாகிஸ்தான் தொடர்ந்து கடுமையாக முயன்றுவருகிறது. இந்த முடிவு ஒரு உள்நாட்டு விஷயம் என்று  புதுதில்லி திட்டவட்டமாக தெளிவுபடுத்திவிட்டது. இந்தியா தனது கருத்தை உலக அரங்கில் முன்வைப்பதிலும் வெற்றிபெற்றுவருகிறது. பல உலக நாடுகளும் இந்தியாவின் முடிவை ஏற்றுள்ளன.
எனினும் பாகிஸ்தான் இன்னும் திருப்தி அடையவில்லை. தனது நெருங்கிய கூட்டாளிகளிடம் இருந்தும் பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த வாரம் பாகிஸ்தான் பிரதம மந்திரியும் அந்நாட்டு ராணுவ தளபதியும் சௌதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவு அமைச்சர்களை வரவேற்றனர். தூதாண்மை உணர்வில் இந்த இரண்டு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும் மிக பாகிஸ்தானி தலைவர்கள் கூறியதைக் அமைதியாகக் கேட்டுக்கொண்டனர். அதன் பிறகு பேசிய பாகிஸ்தானி வெளியுறவு அமைச்சர்  ஷா மஹ்மூத் குரேஷி, சௌதி அரேபியாவும் ஐக்கிய அரபு அமீரகமும் தங்களை ஏமாறமடையச் செய்யாது, எங்கள் நிலைப்பாட்டை இந்த இரு நாடுகளின் அமைச்சர்களும் கேட்டதாகக் கூறினார்..
இதைவிட ஒரு உப்புசப்பில்லாத ஒரு அறிக்கையை பாகிஸ்தானி வெளியுறவு அமைச்சர் வெளியிட்டிருக்க முடியாது.  யாரும் அதிகம் எதிர்பார்த்துவிடவில்லை. அரசியல் நோக்கர்கள் இது ஒரு புகைப்பட வாய்ப்பு என்பதைத் தவிர வேறொன்றுமில்லை என்று கருதினார்கள். இந்தியாவுக்கு எதிராக சௌதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தை தூதாண்மை வகையில் திருப்பிவிட்டதில் தான் வெற்றிபெற்றுவிட்டதாக பாகிஸ்தான் கருதிவருகிறது. ஆனால் இந்த இரண்டு அராபிய நாடுகளின் மன்வோட்டத்தை அறிய முடியாமல் இருப்பதால் பாகிஸ்தானின் சொல்லுக்கு செல்வாக்கு இல்லை என்று அறியமுடிகிறது.  இந்தக் கூட்டம் பாகிஸ்தானி ஊடகங்களில் ஆதங்கப் புயலைக் கிளப்பினாலும், அவற்றின் பார்வையில் பிரச்சனை அலசப்படாமல் இல்லை.

ஆராயாமல் எடுத்த முடிவுக்கு பாகிஸ்தானைத் தான் குறை சொல்லவேண்டும். அராபிய நாடுகளிடமிருந்து பாகிஸ்தானுக்கு அவ்வப்போது ஆதரவு கிடைத்து வந்துள்ளது. கடந்த ஆண்டு 600 கோடி டாலர் தொகை ரியாத் மற்றும் அபுதாபியிடம் இருந்து இஸ்லாமாபாதுக்கு கிடைத்தது. சௌதி அரேபியாவில் வாழும் பாகிஸ்தானிகள் தேவையுள்ளவர்களாக இருப்பதாக சௌதி அரேபிய மக்கள் கூறுகின்றனர். இந்த உண்மையை தவிர்க்கவோ தொலைக்கவோ முடியாது. பெரும்பாலான வளைகுடா நாடுகளில் பணியாற்றும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உள்ள வெளிநாடு வாழ் இந்தியர்கள் அவர்களின் திறன், கல்வி, தொலைநோக்கு, மற்றும் தொழில்நுட்ப அறிவுக்காக போற்றப்படுகின்றனர். இந்தியர்கள் தாங்கள் வாழும் நாடுகளின் பொருளாதார மேம்பாட்டுக்கு மிக முக்கியப் பங்கினை ஆற்றிவருகிறார்கள்.

2016 ஆம் ஆண்டில் சௌதி அரேபிய அரசர் சல்மான் அவர்கள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி அவர்களுக்கு அரசர் அப்துல் அஜீஸ் சாஷ் என்ற அந்நாட்டின் மிக உயரிய விருதை வழங்கிச் சிறப்பித்தார். சௌதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மா 2021 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் 10 ஆயிரம் கோடி டாலர் அளவுக்கு முதலீடுகளை செய்ய உறுதி ஏற்றுள்ளார். இந்த ஆண்டு தொடக்கத்தில் பாகிஸ்தானில் 2 ஆயிரம் கோடி டாலர் அளவுக்கு முதலீடுகளை செய்ய அவர் உறுதியளித்தார். மக்கள் நலனைச் சார்ந்து உறவுகளை மேம்படுத்த அராபிய நாடுகள் ஆர்வம் கொண்டுள்ளனஇ இதற்கு  மதம் ஒரு பொருட்டல்ல என்பது தெளிவாகத் தெரிகிறது.
2017-18 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் மற்றும் சௌதி அரேபியா இடையேயான வர்த்தக உறவுகள் 750 கோடி டாலர் மதிப்புக்கு மட்டுமே இருந்ததுஇ ஆனால் இந்தியா-சௌதி அரேபியா இடையேயான வர்த்தகம் அதே ஆண்டில் 2750 கோடி டாலர்களை எட்டியிருந்தது.
ஐக்கிய அரபு அமீரகமும் பாகிஸ்தான் தொடர்பாக அவ்வளவாக கவலைப்படவில்லை. இந்தியாவுக்கான ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதர்,  அஹமது அல் பன்னா அவர்கள் இந்தியாவின் செயலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இது ஒரு உள்நாட்டு நிர்வாக விஷயம் என்பதோடு மேலும் நிலைத்தன்மை மற்றும் அமைதியை ஏற்படுத்தும் முயற்சி என்று கூறியுள்ளார். இந்த அறிக்கை வெளியாகி சில வாரங்களுக்குப் பிறகு, ஆர்டர் ஆஃப் ஜயீத் என்ற ஐக்கிய அரபு அமீரகத்தின் மிக உயரிய விருதை பிரதமர் நரேந்திர மோதிக்கு ஐக்கிய அரபு அமீரகம் வழங்கிப் பெருமை சேர்த்தது.  இந்த நடவடிக்கையால் பெரும் அளவில் கவலை அடைந்த பாகிஸ்தான், அதன் நாடாளுமன்ற மேலவையான செனட்டின் தலைவர் சாதிக் சஞ்ராணியின் ஐக்கிய அரபு அமீரகத்துக்கான பயணத்தை ரத்து செய்தது.
இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்த எண்ணெய் வளம் மிகுந்த அரபு நாடுகளின் செயல்பாடுகளை பாகிஸ்தானி ஊடகவியலாளர்கள் விமர்சனம் செய்த நிலையில், சீனாவில் உய்குர் முஸ்லிம்களை ஆற்றுப்படுத்தும் முகாம்களுக்கு வலுக்கட்டாயமாக அனுப்பியது குறித்து ஏன் பாகிஸ்தானி தலைவர்களோ அந்நாட்டு ராணுவமோ வாய் திறக்கவில்லை என்று பாகிஸ்தான் மக்கள் வீதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்தி கேள்வி எழுப்பி வருகின்றனர்.  சீனா-பாகிஸ்தான் இடையேயான பொருளாதார கட்டமைப்பு என்பது பாகிஸ்தானின் உயிர்நாடி என்பதை அவர்கள் நன்கு அறிந்துள்ளனர். யேமனில் ஏற்பட்ட படுகொலைகள் மற்றும் சேதம் பற்றியும் பாகிஸ்தான் ஒன்றும் பேசாமல் மௌனம் காக்கிறது. கடந்த பல பத்தாண்டுகளாக பாகிஸ்தானி மக்கள் மற்றும் அந்நாட்டு ராணுவத்துக்காக நிதி உதவி நாடி கையேந்தும் பாகிஸ்தானின் பேராசை இதர நாடுகளின் நலன்களுக்கு கட்டாய ஆதரவு தெரிவித்து செயல்படும் நிலைக்கு அதனை தள்ளியுள்ளது.
ஊக்கம் தரும் தூதாண்மை மூலமாகவும் பாகிஸ்தானுக்கு பலன் கிடைக்க வாய்ப்பில்லை என்று நிபுணர்கள் கருதுகின்றனர். முஸ்லிம் நாடுகளிடம் ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதும் அதன் கையாலாகாத்தனத்தை காட்டுவதாக அமையும். ஒரே ராகத்தை மாற்றமின்றி ஒலிப்பதையே பாகிஸ்தான் செய்துவருவதாக இசுலாமிய நாடுகள் புரிந்துகொண்டுவிட்டன. கடந்த 72 ஆண்டுகால இருப்பில் பாகிஸ்தான் இந்த மாயையில் இருந்து விடுபட எதையும் புதிதாகச் செய்துவிடவில்லை, பாகிஸ்தானின் அண்டை நாடுகள் வளம் அடைந்துவிட்ட நிலையிலும் வெளிநாடுகளின் தயவில் இருக்கும் அந்நாடு தொடர்ந்து, தீவிரவாதத்தை ஏற்றுமதி செய்துவருகிறது. இந்தச் செயல்பாடு உலக அளவில் பெரும் பாதிப்பை அதற்கு ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் தனது தவறுகளை அறிந்து உரிய மாற்று நடவடிக்கைகளில் ஈடுபட இதுவே தக்க தருணம்.