தென் சீனக் கடல் – புதிய சர்ச்சை.
(கிழக்காசிய மற்றும் இந்தியப் பெருங்கடல் விவகாரங்கள் செயலுத்தி ஆய்வாளர் பேராசிரியர் பாலாதாஸ் கோஷல் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.) சர்வதேச சட்டவிதிகளை மீறி, வியட்நாமின் சிறப்புப் பொருளாதார மண்டலத்தை சீனா ஊடுருவியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வியட்நாம் கடற்கரையிலிருந்து வெறும் 60 நாட்டிகல் மைல் என்ற மிக அருகிய தூரத்தில் சீன ரோந்துக் கப்பல் நுழைந்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சீனாவுடன் சுமுக உறவு இல்லாத வியட்நாமின் பொருளாதாரத்தை அச்சுறுத்தும்…