இந்தியா-சீனா இருதரப்பு உறவுகள்

பேராசிரியர் ஸ்ரீ காந்த் கொண்டபள்ளி அவர்கள் ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்.  தமிழில்  பி இராமமூர்த்தி.

இந்திய பிரதமர் நரேந்திர மோதி மாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜி சின்பிங் அவர்களை முறை சாரா மாநாட்டில் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து விரிவாக விவாதித்தார். உலக நாடுகளின் பிரச்சனைகள் குறித்தும் பிராந்திய விவகாரங்கள் குறித்தும் இரு தலைவர்களும் விரிவாக விவாதித்தனர்.

கடந்த வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமையன்று ஆசிய கண்டத்தின் இரு பெரும் நாடுகளின் தலைவர்கள் முறைசாரா மாநாட்டில் கூட்டாக சந்தித்து வர்த்தகம், பாதுகாப்பு, தீவிரவாத ஒழிப்பு, வளர்ந்து வரும் நாகரீக  வளர்ச்சி ஆகியவை குறித்து முதல் நாளன்று விரிவாக விவாதித்தனர். இரண்டாம் நாளன்று எல்லைப் பாதுகாப்பு முதலீடு, இரு நாட்டு மக்களுக்கிடையேயான இருதரப்பு உறவுகள் குறித்தும் விவாதங்கள் நீடித்தன. பல்லவர் காலத்திலிருந்தே மாமல்லபுரத்திற்க்கும் சீனாவிற்கும் தொடர்பு இரு பெரும் உலக நாகரிகங்கள் மத்தியில் நிலவி வந்தது குறித்து பிரதமர் மோதி விரிவாக எடுத்துரைத்தார்.  ஆசிய நகரிகங்களின் மகாநாடு சீனாவில் கூட்டப்பட்டபோது இந்திய அரசு பங்கேற்கவில்லை.

இரு நாடுகளுக்கிடையேயான பிரச்சனைகள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் மனம் விட்டு பேசினார்கள். காஷ்மீர் பிரச்சனை குறித்த பேச்சுகள் இடம் பெறவில்லை என வெளியுறவு செயலாளர் விஜய் கோகலே விளக்கினார்.  உலக வர்த்தகத்தில் நிலை இல்லாத  நிலைமை, நலிந்து வரும் உலக பொருளாதாரம், முதலீடுகளை ஈர்த்தல், ஆகிய துறைகளில் பிரதமர் மோதியும் அதிபர் ஜி சின்பிங்-ம் இணைந்து செயல்பட்டு இருதரப்பு உறவை மேலுல்ம் பலப்படுத்துவோம் என்றும் உலக பிரச்சனைகளில் இரு தகவல்களும் இணைந்து செயல்படுவது என்றும் முடிவெடுத்தனர்.

இந்த முறைசாரா மாநாட்டின்போது 17-க்கும் மேற்பட்ட இருதரப்பு பிரச்சனைகள் குறித்து விரிவாக இருதலைவர்களும் அலசி ஆராய்ந்தனர். முந்தைய வுகான் மநாட்டின்போது 5-க்கும் மேற்பட்ட பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.   தொலைத்தொடர்பு, எல்லைப் பாதுகாப்பு, நல்லெண்ண நடவடிக்கைகள், வர்த்தக குறைபாடுகள், ஆப்கானிஸ்தான் நாட்டின் வளர்ச்சி ஆகியவை குறித்தும் இரு பெரும் தலைவர்களும் விவாதித்தது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த முறை சாரா மாநாட்டில் ஆப்கானிஸ்தான் தவிர மற்ற அனைத்து பிரச்சனைகளும் விவாதிக்கப்பட்டது.  வர்த்தகம் மற்றும் முதலீடு குறித்த உயர்நிலை குழு, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சீன துணை அதிபர் ஹூ சுன்ஹுவா ஆகியோர் பங்கேற்கும் வகையில் அழைக்கப்படவுள்ளது.

6,500 கோடி அமெரிக்க டாலர்கள் அளவிற்கு இந்திய அரசின் வர்த்தக குறைபாடு சரி செய்யப்படவும், சீனாவின் முதலீடுகளை இந்தியாவிற்குள் ஈர்க்கவும் தேவையான முடிவுகளை உயர்நிலை குழு ஆராயும் எனலாம். இந்தியா, சீன மக்கள் தொடர்பு, சுற்றுலா ஊடக வளர்ச்சி, அருங்காட்சியகங்கள், சீன மொழி வளர்த்தல் ஆகிய 10 முக்கிய துறைகள் குறித்து கடந்த டிசம்பர் மாதம் வெளியுறவு துறை அமைச்சர் மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது குறித்தும் வெளியுறவு துறை செயலாளர் ஜெய்சங்கர் இருதரப்பு உறவுகளை மேம்படுத்த  முயற்ச்சிகளை மேற்கொள்வார்.

கடல்வழி வாணிபத்தை மேம்படுத்த தமிழ்நாடு அரசும், சீனாவின் பியுஜீயன் மாநிலமும் இணைந்து செயல்படும் வகையில் புதிய கடல்சார் நிறுவனம் ஒன்றும் அமைக்கப்படும். வுகான் முறைசாரா மாநாடு மாமல்லபுரம் முறைசாரா மாநாட்டை தொடர்ந்து மூன்றாவது முறைசாரா மாநாடு சீனாவில் நடைபெறுவதால் நரேந்திர மோதி கலந்து கொள்ள வேண்டுமென்ற சீன அதிபரின் அழைப்பை ஏற்றுகொண்ட இந்திய பிரதமர் முறைசாரா மாநாடுகளின் வாயிலாக தலைவர்கள் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்ளவும், பிரச்சனைகள், தீர்வுகளை நோக்கி நகருவதையும் மறுக்க இயலாது என்று கூறினால் அது மிகையாகாது.