கொமோரோஸ் மற்றும் சியாரோ லியோன் உடன் உறவுகளை வலுப்படுத்தும் இந்தியா

ஆல் இண்டியா ரேடியோவின் செய்தி ஆலோசகர் பதம் சிங் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் லட்சுமணகுமார்

ஆப்பிரிக்கா கண்டத்துடனான உறவுகளை மேலும் வலுப்படுத்த குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு அவர்கள் கொமோரோஸ் மற்றும் சியாரோ லியோன் நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். கடல் சார் அண்டை நாடாக உள்ள இந்தியா  தனது வளர்ச்சி அனுபவங்களை கொமோரோஸ் மக்களுடன் பகிர்ந்து கொள்ள தயாராக உள்ளது. கொமோரோஸின் முக்கிய கூட்டாளியாகவும் இருக்க இந்தியா விரும்புகிறது.

கொமோரோஸ் அதிபர்  AZALI ASSOUMANI உடன்   வெங்கையா நாயுடு அவர்கள் பேச்சு வார்த்தை நடத்தினர். பல ஆச்சரியப்படத்தக்க சந்தர்ப்பங்கள் குறித்து இரு நாட்டுத்தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

சுகாதாரம், புதுப்பிக்கவல்ல எரிசக்தி, தகவல் தொழில் நுட்பம் மற்றும் கடல்சார்  பாதுகாப்பு ஆகிய துறைகளில் இருதரப்பு பொருளாதார நடவடிக்கைகளை விரிவுபடுத்த அவர்கள்  ஒப்புக்கொண்டனர்.

பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. சுகாதாரம் மற்றும் கலாச்சரம் குறித்து முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. குறுகிய காலத்திற்கு இரு நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும்  இருநாட்டை சேர்ந்த பாஸ்போர்ட் வைத்துள்ள தூதரக அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் விசா பெறுவதிலிருந்து விலக்களிக்க இந்தியாவும், கொமொரோசும் ஒப்புக்கொண்டன.

மோரோணி என்ற இடத்தில் 18 மெகா வாட் திறன் மின் உற்பத்தி நிலையம் அமைக்க இந்தியா 4 கோடியே 16 லட்சம் டாலர்  கடன் வழங்கவும், தொழில் பயிற்சி மையம் அமைக்க மானிய உதவி வழங்கவும் ஒப்பு கொண்டிருப்பதன் மூலம் இரு நாடுகளுக்கிடேயயான உறவுகள் மேம்படுத்தப்பட்டுள்ளது. 10 லட்சம் டாலர் மதிப்பில் மருந்துகள், 1000 மெட்ரிக் டன் அரிசி, 20 லட்சம் டாலர் மதிப்பில் இடைமறிக்கும் படகுகள் மற்றும் 10 லட்சம் டாலர் மதிப்பில் போக்குவரத்து உபகரணங்கள் ஆகியன அன்பளிப்பாக இந்தியா வழங்கும். 200 லட்சம் டாலர் மதிப்பில் அதி விரைவு இடைமறிப்பு படகுகள் வாங்க இந்தியா கடன் வழங்கும் என்று அறிவித்துள்ளது. தொலைக்காட்சி வழி கல்வி மற்றும் மருத்துவம் வழங்கும் திட்டங்கலானா இ-வித்யா மற்றும் இ-ஆரோக்கிய பாரதி திட்டங்களுக்கும் இரு நாடுககளும் ஒப்புக்கொண்டன.

உலக சமூகம் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சனைகளை எதிர்கொள்ள இந்தியாவும், கொமொரோசும் பொதுவான அணுகுமுறையை கொண்டுள்ளன மற்றும் பல தளங்களில் தொடர்ந்து பரஸ்பர ஆதரவு தெரிவித்து வருகின்றன. தீவிரவாதத்துக்கு எதிரான போராட்டத்திற்கும், பாதுகாப்பு சபை சீர்திருத்தத்திற்கும் மற்றும் ஐ ந பாதுகாப்பு சபையில் இந்திய நிரந்தர உறுப்பினராவதுக்கும்  கொமொரோஸ் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருவதற்கு இந்திய நன்றி தெரிவித்தது.

இந்தியாவின் சக்திக்கேற்ப  கொமொரோஸின் வளர்ச்சிக்கு அனைத்து விதமான ஆதரவும் தெரிவிக்கும் தனது நிலைப்பட்டை இந்தியா மீண்டும் வலியுறுத்தியது.

தனது பயணத்தின் இரண்டாவது கட்டமாக வெங்கையா நாயுடு அவர்கள் சியாரோ லியோன் சென்றார். உயர் நிலை பதவி வகிக்கும் இந்தியர் ஒருவர் அங்கு செல்வது இதுவே முதல் முறையாகும். பொதுவான விழுமியங்களும், ஒத்த கொள்கை கொண்ட இரு நாடுகளுக்கும் இடையே சுமூகமான உறவுகள் நிலவி வருகிறது. பரஸ்பர நம்பிக்கை, மதிப்பு மற்றும் புரிதலால்  இந்த உறவு மேலும் வளர்ந்துள்ளது.

ஐந்து முறை அமைதியான முறையில் தேர்தல் நடத்தி, அதிகார மாற்றத்தை  சுமூகமாக ஏற்படடுத்தி  ஜநாயகத்தை நிலைநாட்டியுள்ள சியாரோ லியோனுக்கு இந்தியா வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டது. கடந்த ஆண்டு அந்நாட்டு அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் பயோவுக்கு வெங்கையா நாயுடு அவர்கள் வாழ்த்துக்களை  தெரிவித்துக்கொண்டார். சியாரோ லியோனுடன் இந்தியா  நெருங்கி செயல்பட்டு வருகிறது. அங்கு அமைதியும், ஸ்திரத்தன்மையையும்  நிலை நாட்ட புது தில்லி முக்கிய பங்காற்றியுள்ளது. சியாரோ லியோனுகான ஐ நா அமைதி திட்டத்திற்கு படைகள் அளித்த முதல் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

இருதரப்பு உறவுகள் குறித்த முக்கியமான அம்சங்கள், இருநாடுகளுக்கும் பொதுவான உலக மற்றும் பிராந்திய பிரச்சனைகள் குறித்து வெங்கையா நாயுடு அவர்கள்  அதிபர் ஜூலியுஸ் மாட பயோ உடன் விவாதித்தார். இரு நாடுகளுக்கும் இடையே நீடித்த நெருங்கிய உறவை நிலைநாட்டை இரு நாட்டுத் தலைவர்களும் தங்களது உறுதிப்பாட்டை தெரிவித்துக்கொண்டனர். விவசாயம், உணவு பதனிடுதல், தகவல் தொழில்நுட்பம், கட்டமைப்பு வளர்ச்சி மற்றும் திறன் வளர்ச்சி உட்பட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்க இரு நாடுகளும் சம்மதித்தன. சியாரோ லியோனில் இந்திய நிறுவனங்கள் காலூன்ற இந்தியா ஊக்கமளிக்கும்.

சியாரோ லியோனின் வளர்ச்சி பயணத்திற்கு இந்தியா நம்பத்தகுந்த கூட்டாளியாக இருக்கும் என்பதை மீண்டும் வலியுறுத்தியது. பல்வேறு துறைகளில் வளர்ச்சிக்கென இந்தியா 217.5 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு கடன் வழங்கியுள்ளது. நெல் உற்பத்தியில் தன்னிறைவு பெரும் வகையில் டோமபம் நீர் பாசன திட்டத்திற்கு இந்தியா 300 லட்சம் டாலர் கடன் வழங்கும் திட்டம் உட்பட பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் உடன்படிக்கைகள் கையெழுத்தாகின. 150 லட்சம் டாலர் மதிப்பிலான குடிநீர் திட்டத்திற்கும் இந்திய கடன் வழங்கும்.

இந்தியாவின் ஆப்பிரிக்கா முழுமைக்குமான தொலைக்காட்சி வழி கல்வி மற்றும் மருத்துவம் வழங்கும் திட்டங்களான இ-வித்யா மற்றும் இ-ஆரோக்கிய பாரதி திட்டங்களில் சியாரா லியோனும் பங்கேற்க வகை செய்யும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சியாரா லியோன் கையெழுத்திட்டது. இந்தியா விரைவில் சியாரா லியோனில் CENTRE OF EXCELLENCE IN IT ஒன்றை ஏற்படுத்தும். வரும் மாதங்களில் ஒரு   நல்லெண்ண நடவடிக்கையாக இந்தியா சியாரா லியோனுக்கு 1000 மெட்ரிக் டன் அரிசி வழங்கும்.