சிரியா மீதான துருக்கிப் படையெடுப்புக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எதிர்ப்பு

ஜவலர்லால் நேரு பல்கலைக்கழக மேற்காசியப் படிப்புகள் மையத்தின் பேராசிரியர் P R குமாரசாமி அவர்கள் ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்

தமிழில் மாலதி தமிழ்ச்செல்வன்

துருக்கி மீது தடைகள் விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எடுத்துள்ள முடிவு எப்போதும் போர்மேகம் சூழ்ந்திருக்கும் மேற்காசியாவை அதிரடித்தது. குர்த் இன மக்களுக்கு ஆதரவாக சிரியாவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க படைகளை அங்கிருந்து விலக்கிக்கொள்ள  அவர் முடிவு எடுத்த சில நாட்களுக்கு பிறகு குர்த் இனத்தினர் அதிகம் உள்ள சிரியாவின் ஜனநாயகப் படைகளைச் சேர்க்காமல் வடசிரியா மீது படையெடுத்து buffer zone எனப்படும் ஒரு இடைப்பகுதியை உருவாக்க முனைத்த துருக்கியின் முடிவுக்கு அமெரிக்க அதிபர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். துருக்கியில் உள்ள குர்த் இன தொழிலாளர்கள் கட்சி PKK உடன் உறவுகளை வைத்திருப்பதற்காக சிரியாவின் ஜனநாயகப் படைகளை ஒரு தீவிரவாதக் குழுவாக துருக்கி அதிபர் எர்டோகன் கருதுகிறார். சிரியா வாழ் குர்த் இன மக்களுக்கு எதிரான நடவடிக்கை மூலமாக துருக்கி நாட்டுக்குள் வாழும் குர்த் தேசியவாதிகளின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த அவர் முயற்சி செய்கிறார்.

ஐ எஸ் ஐ எஸ் அமைப்பு ராணுவ ரீதியாக வீழ்ச்சி அடைந்ததற்கு முக்கிய சக்தியாக இருந்த அமெரிக்கப் படைகளை சிரியாவில் இருந்து திரும்பப் பெறும் அமெரிக்க அதிபர் டிரம்பின் முடிவை துரோக நடவடிக்கையாகத்தான் சிரியா, இராக் ஆகிய இரண்டு நாடுகளிலும் உள்ள குர்த் மக்கள் கருதுகிறார்கள். 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஐ எஸ் ஐ எஸ் தீவிரவாத அமைப்பு முழுமையாக ராணுவ ரீதியாக வீழ்ச்சி கண்டதாக அறிவிக்கப்பட்டாலும் அந்தத் தீவிரவாத அமைப்பின் மிச்சத்தின் இருந்து தீவிரவாதிகள் மீண்டு எழக்கூடும் என்ற அச்சம் உள்ளது. கடந்த வாரம் தனது எல்லைப்பகுதியில் இருந்த வெற்றிடத்தைப் பயன்படுத்து சிரியாவின் வடகிழக்கு பகுதியைக் குறிவைத்து துருக்கி ராணுவ படையெடுப்பை தீவிரமாக நடத்தியது.

துருக்கியில் தற்போது உள்ள சிரியா நாட்டைச் சேர்ந்த 36 லட்சம் அகதிகள் குடியிருக்க 30 கிலோமீட்டர் தூரத்தில் ஒரு பாதுகாப்புப் பகுதியை உருவாக்க வேண்டும் என்று துருக்கி அதிபர் எர்டோகன் விரும்புகிறார். அகதிகளின் மறுவாழ்வுப் பணிகளை முன்னெடுப்பது நல்லகாரியமாகத் தெரிந்தாலும் துருக்கியின் செயல்பாடு சர்ச்சைக்குரியதாக உள்ளதால் சர்வதேச அளவில் எதிர்ப்பு மற்றும் கண்டனங்களை ஈர்த்துள்ளது.

துருக்கியின் படையெடுப்பை அடுத்து உடனடியாகச் செயல்பட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப் நேட்டோ அமைப்பில் உறுப்பு நாடாக உள்ள துருக்கிக்கு எதிராக தொடர் தடைகளை அறிவித்தார். துருக்கியின் எஃகு இறக்குமதிகளின் மீது 50 சதவிகித கட்டணம் விதிப்பது, அமெரிக்கா உடன் துருக்கி மேற்கொண்டுள்ல 10 ஆயிரம் கோடி அமெரிக்க நாடலர் மதிப்பிலான வர்த்தக ஒப்பந்தத்தை நிறுத்திவைப்பது, உட்பட தடை நடவடிக்கைகளை அடுத்தடுத்து அறிவித்தார்.

இரானுக்கு எதிரான தடைகளை தகர்க்கும் விதமாக செயல்பட்டது மற்றும் பணமோசடி குற்றச்சட்டுகள் தொடர்பாக துருக்கி நாட்டின் முதன்மை வங்கியான Halkbankஎன்ற வங்கிக்கு எதிராக கிரிமினல் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று அமெரிக்க நீதித்துறை அறிவித்தது. துருக்கியின் பாதுகாப்பு, எரியாற்றல் மற்றும் உள்துறை அமைச்சகங்களுக்கு எதிராக தடைகளை விதித்த டிரம்ப் நிர்வாகம் அமெரிக்காவின் உள்ள அவற்றின் சொத்துக்களை முடக்கியதோடு, அவற்றுடனான பரிவர்த்தனைகளுக்கும் தடை விதித்தது. துருக்கி நாட்டுத் தலைவர்கள் இந்த அழிவு தரும் ஆபத்தான பாதையில் தொடர்ந்தால் துருக்கியின் பொருளாதாரத்தை விரைவாக சேதப்படுத்தும் நடவடிக்கைகளில் அமெரிக்கா ஈடுபடும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமானப் பயணம் மேற்கொள்ளும் அமெரிக்க துணை அதிபர், துருக்கி உடனடியாக போர்நிறுத்தத்தை தழுவாவிட்டால் நிலைமை மிகவும் மோசமடையக் கூடும் என்று எச்சரித்துள்ளார். இருதரப்புக்களின் ஆதரவோடு துருக்கிக்கு எதிராக இன்னும் பெரிய அளவிலான தடைகளை விதிக்க அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் யோசனை கூறியுள்ளனர்.

சிரியா மீது படையெடுத்ததன் விளைவாக எப்போது ஓரணியில் சேராதவர்களைக் கூட துருக்கி அதிபர் அவருக்கு எதிராக ஓன்றுசேர்த்துவிட்டார். அமெரிக்க அதிபர் டிரம்பின் இரான் குறித்த கொள்கையால் ஆத்திரம் அடைந்துள்ள ஐரோப்பிய யூனியன் அங்காராவுக்கு எதிரான அமெரிக்கத் தடைகளால் ஆறுதல் அடைந்துள்ளது. இதனால் குர்த் இன மக்களுக்கு ஆதரவும் துருக்கியின் படையெடுப்புக்கு எதிர்ப்பையும் ஐரோப்பிய யூனியன் பதிவு செய்துள்ளது.  துருக்கியின் எல்லைகளை திறந்துவிட்டு அகதிகள் பெரும் எண்ணிக்கையில்  ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்குள் நுழைய வழி ஏற்படுத்தப்போவதாக துருக்கி அதிபர் எர்டோகன் எச்சரித்ததால் பிரஸ்ஸல்ஸின் திறன் அகதிகள் நெருக்கடியால்  கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபரின் துருக்கிக்கு எதிரான கடும் நடவடிக்கைகள் துருக்கி ராணுவத்தின் படையெடுப்பை கட்டுப்படுத்த முடியாத சிரியாவுக்கும் அதன் கூட்டாளியான ரஷ்யாவுக்கும்  எதிர்பாராத உதவியாக அமைந்துள்ளது.சிரியாவின் அதிபர் பாஷர் அல் அஸ்ஸாதின் படைகளுக்கு எதிராக சண்டையிட்டு வந்த சிரியாவின் ஜனநாயகப் படைகள் துருக்கியின் நடவடிக்கைக்கு எதிராக தந்திரமான சண்டைநிறுத்தத்தை எட்டியுள்ளது.

துருக்கி அதிபர் எர்டோகன் பிடிவாதமாக உள்ளதோடு தனது இலக்குகளை அடையும் வரை ராணுவ நடவடிக்கைகளை தொடரப்போவதாக உறுதி ஏற்றுள்ளார். அவரது வளர்ந்துவரும் ஆதிக்கமனப்பான்மைக்கு உள்நாட்டிலேயே  எதிர்ப்பு கிளம்பும் ஆபத்து அல்லது தந்திரமான ஆதாயம் இல்லாமல் எர்டோகன் தனது முயற்சியைக் கைவிடப்போவதில்லை. இரான், ஜெருசலேம் அல்லது கோலன் பகுதி ஆகியவை தொடர்பான அவரது கொள்கைகள் சர்ச்சைக்குரியவை மற்றும் அதிக ஆதரவு பெறாதவையாகும். எனினும் துருக்கி விஷயத்தில் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் ஆதரவு கிடைத்துள்ளது. அந்த வட்டாரத்தில் உள்ள அராபிய மற்றும் இதர அரபு அல்லாது நாடுகள் சிலவற்றை அதிபர் எர்டோகன் தமது செயலால் வருத்தமடையவும் ஆத்திரமடையவும் செய்துள்ளார். எனவே வட்டாரத்தில் துருக்கியை தனிமைப்படுத்தவும் உள்நாட்டில் இருதரப்புக்களின் ஆதரவுடன் தடைகளைச் செயல்படுத்தவும் முனைந்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், அங்காராவுக்கு எதிரான தடைகளை வரும் வாரங்களில் விரிவுபடுத்தி தீவிரப்படுத்துவார்.

சிரியாவின் வடகிழக்குப் பகுதியில்  துருக்கி ஒருதரப்பாக மேற்கொண்ட ராணுவ படையெடுப்பு குறித்து இந்தியா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது. அந்த வட்டாரத்தின்நிலைத்தன்மையையும் தீவிரவாதத்துக்கு எதிரான சண்டையையும் துருக்கியின் செயல்பாடுகள் பாதிக்கக்கூடும் என்று இந்தியா தெரிவித்துள்ளது. மனிதாபிமான இன்னல்கள் மற்றும் பொதுமக்கள் சிரமங்களுக்கு துருக்கியின் செயல் வழிகோலக்கூடும் என்று இந்தியா தெரிவித்துள்ளது.