முன்னேற்றப் பாதைக்கு வழிகோலும் இந்தியப் பொருளாதார உச்சி மாநாடு.


(மூத்த பத்திரிக்கையாளர் ஜி ஸ்ரீநிவாசன் அவர்கள் ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம் – ஆர் ராஜ்குமார் பாலா.) புதுப்பிக்கவல்ல, அனைவரையும் உள்ளடக்கிய, நீடித்து நிலைத்த பொருளாதாரத்தை உருவாக்கும் கண்ணோட்டத்தால் ஊக்கம் பெற்ற இந்தியாவின் கொள்கைகள், பத்து லட்சம் கோடி டாலர் பொருளாதாரம் என்ற பெரும் இலக்கை உலக அளவில் வலுவுடன் எட்டுவதை உறுதி செய்யும். புதுதில்லியில், இந்திய தொழில் குழுமத்துடன் (சி ஐ ஐ) கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்ட உலகப் பொருளாதார…

பங்களாதேஷுடனான உறவை வலுப்படுத்தும் இந்தியா.


(தி ஹிந்து சிறப்புப் பத்திரிக்கையாளர் கல்லோல் பட்டசார்ஜி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.) பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹஸீனா அவர்கள் மேற்கொண்ட இந்தியப் பயணம், இருதரப்பு, அரசியல் மற்றும் ராஜீய ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்கியது. இந்தியாவில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றத்தில் பங்கேற்று, தமது நாட்டில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புக்கள் பற்றி எடுத்துரைக்க, பங்களாதேஷ் பிரதமர் இப்பயணத்தைத் திட்டமிட்டிருந்தார். எனினும், இந்தியாவுக்கும், பங்களாதேஷுக்கும் இடையே அரசுமுறை…

கடுமையான  சூழலை எதிர்கொள்ளும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்.


(டாக்டர் ஜைனப் அக்தர் ஆங்கிலத்தில் எழுதியதின் தமிழாக்கம் – மாலதி தமிழ்ச்செல்வன்.) அமெரிக்காவில் பத்திரிக்கையாளர்களிடையே  பேசுகையில், காஷ்மீர் விஷயத்தில் உலக சமுதாயம் மேற்கொண்ட நிலைப்பாடு குறித்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அவர்கள் தனது அதிருப்தியை வெளியிட்டார்.  அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அவர்கள் பங்கேற்ற, மோதி நலமா? நிகழ்ச்சிக்கு உலக ஊடகங்கள் அதிக ஆர்வம் காட்டியது இதற்கு ஒரு காரணம். மற்றொன்று, துருக்கி மற்றும் மலேசியா போன்ற இரு…

வலுவடைந்து வரும் இந்திய, அமெரிக்க உறவுகள்.


(அமெரிக்க விவகாரங்களுக்கான செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் ஸ்துதி பேனர்ஜி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.) இந்திய வெளியுறவு அமைச்சர் டாக்டர் ஜெய்ஷங்கர் அவர்கள் அண்மையில் மேற்கொண்ட தமது அமெரிக்கப் பயணத்தின்போது, இந்தியாவும் அமெரிக்காவும் தங்கள் வர்த்தக சர்ச்சைகளுக்குத் தீர்வு காண முடியும் என்று தெரிவித்தார். இருநாடுகளும் வர்த்தக விஷயங்களில் பலதரப்பட்ட உண்மை நிலைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்று குறிப்பிட்ட அமைச்சர், அவற்றுள் ஒன்று, இந்த சர்ச்சைகள் பலகாலமாக…

சவுதி அரேபியாவுடனான உறவை வலுப்படுத்தும் இந்தியா.


(மேற்காசியா குறித்த செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் முகமது  முடாசிர் குவாமர் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – நித்யா வெங்கடேஷ் .) இந்தியாவுக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையே பாரம்பரியம் மிக்க நட்புறவு நிலவி வருகிறது. செயலுத்திக் கூட்டாளிகளான இவ்விரண்டு நாடுகளும் பல களங்களில் இணைந்து பணியாற்றி வருகின்றன. இந்தப் பின்னணியில் இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அவர்கள் இரண்டு நாள்  பயணமாக சவுதி அரேபியா சென்றிருந்தார். அந்நாட்டின் பட்டத்து…

தூய சுற்றுச்சூழலுக்கு உறுதி பூண்டுள்ள இந்தியா


(மூத்த பத்திரிக்கையாளர் ஷங்கர் குமார் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.) தூய்மையைப் பேணிவந்த காந்தியடிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அவரது 150 ஆவது பிறந்த நாளான அக்டோபர் மாதம் 2 ஆம் தேதியன்று, தூய்மை குறித்த பல முன்னெடுப்புக்களை இந்தியா துவக்கியது. சுற்றுச் சூழல் மாசுபடுவதைத் தவிர்க்கவும், சுகாதாரத்தைப் பாதுகாக்கவும், ஒற்றைப் பயன்பாடு பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலுமாகத் தவிர்க்க அரசு உறுதி பூண்டுள்ளது. இது குறித்து, ஒட்டுமொத்தத்…

அகிம்சை –  உலகளாவிய அமைதிக்கு காந்தியடிகளின் ஆயுதம்.


(காந்திய ஆய்வாளர் டொமினிக் தாமஸ் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் ஆ.வெங்கடேசன்.) அகிம்சைக்கும், அமைதிக்கும் உலகம் அடையாளமாகக் கருதுவது மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்களையே. இந்தியா அவரை தேசப்பிதா என்று அழைக்கிறது. உலகம் அவரை மகாத்மாவாக அறிகிறது. காந்தியடிகளின் பிறந்த தினமான அக்டோபர் இரண்டாம் தேதியை சர்வதேச அகிம்சை தினமாக  ஐ. நா. அனுசரிக்கிறது. சத்தியம் மற்றும் அகிம்சையை முன்னிறுத்தி, இந்தியாவின் விடுதலைப் போராட்டத்துக்கு அவர் தலைமையேற்றார். அகிம்சை என்பது…

ஆஃப்கானிஸ்தானில் அதிபர் தேர்தல்: அமைதி மலருமா?


(தெற்காசியாவிற்கான செயலுத்தி ஆய்வாளர் டாக்டர். ஸ்ம்ருதி எஸ். பட்னாயக் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஸ்ரீபிரியா சம்பத்குமார்.) ஆஃப்கானிஸ்தானில், தாலிபானின் வீழ்ச்சிக்குப் பிறகு, இரு முறை ஒத்திவைக்கப்பட்ட அதிபர்  தேர்தல்கள், செப்டம்பர் 28 ஆம் தேதியன்று நடைபெற்றன. வன்முறைக்கான அச்சுறுத்தல்கள் அதிக அளவில் இருந்த நிலையில், பலத்த பாதுகாப்புக்கு இடையே இந்தத் தேர்தல் நடைபெற்றது. அதிபர் தேர்தலில் 15 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். பதிவு செய்யப்பட்ட 96 லட்சம் வாக்காளர்களுக்காக,…