250 ஆவது அமர்வை எட்டும் இந்திய நாடாளுமன்ற மேலவை.


(மூத்த பத்திரிகையாளர் சங்கர் குமார் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஆ. வெங்கடேசன்.) ராஜ்யசபை என்று அழைக்கப்படும் இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை, 250 ஆவது அமர்வை எட்டியுள்ளது. இத் தருணத்தில், இந்திய அரசியல் ஜனநாயகத்தை முன்னெடுத்துச் செல்வதில் பெரும்பங்காற்றியுள்ள மேலவையின் மகத்துவத்தைப் பெருமையுடன் நினைவுகூர வேண்டும். 1952 ஆம் வருடம் துவங்கப்பட்ட நாள் முதல், தேசநலனைக் காப்பதில் இது முன்னின்று செயல்பட்டு வந்துள்ளது.  1952 ஆம் வருடத்தில்…

மேம்பட்ட வளர்ச்சியை நோக்கிப் பயணிக்கும் இந்தியா-பூட்டான் உறவுகள்.


(ஐடிஎஸ்ஏ ஆய்வாளர் டாக்டர் நிஹார் நாயக் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஸ்ரீப்ரியா சம்பத்குமார்.) பூட்டான் நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் லியோன்போ தண்டி டோர்ஜி அவர்கள், ஒரு வார அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்தார். அவரது இந்தப் பயணம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய ஊக்கத்தை அளித்துள்ளது. இப்பயணத்தில், டாக்டர் டோர்ஜி, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்ஷங்கர் அவர்களைச் சந்தித்து, இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார்.…

இலங்கையில் கோத்தபய ராஜபக்ச ஏழாவது அதிபராகத் தேர்வு.


(ஐடிஎஸ்ஏ ஆய்வாளர் டாக்டர் குல்பின் சுல்தானா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.) கடந்த சனியன்று, இலங்கையில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இலங்கை பொதுஜன பெராமுனா கட்சியைச் சார்ந்த கோத்தபய ராஜபக்ச அவர்கள், ஏழாவது அதிபராக, 52.25 சதவிகிதம் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். இலங்கையின் அனுராதாபுரா நகரில், அதிபர் பதவி ஏற்கப் போவதாக, கோத்தபய ராஜபக்ச அவர்கள் அறிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோதி உள்பட, உலகத் தலைவர்கள்…

நாடாளுமன்றம் குளிர்காலக் கூட்டத் தொடரில் எதிர்கொள்ளவிருக்கும் விவகாரங்கள்.


(பத்திரிக்கையாளர் யோகேஷ் சூட் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி. ராமமூர்த்தி) இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர், வரும் நவம்பர் மாதம் 18 ஆம் தேதியிலிருந்து, டிசம்பர் 13 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இத்தொடரில் பல்வேறு சட்ட முன்வரைவுகள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன. தவிர, இரண்டு முக்கிய அவசர சட்டங்கள் சட்டங்களாக்கப்பட வேண்டிய பட்டியலில் இடம் பெற்றுள்ளன. தேசிய நலன் குறித்த கொள்கை ஊக்குவிப்பு, செயல்திறன்,…

பிரிக்ஸ் நாடுகளுடன் உறவுகளை வலுப்படுத்தும் இந்தியா.


(செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் ரூபா நாரயண் தாஸ் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.) நான்கு நாடுகள் அடங்கிய பிரிக்ஸ் நாடுகள் கூட்டமைப்பு நிறுவப்பட்ட நாள் முதற்கொண்டே, செயலுத்தி ரீதியாக, இந்தியாவின் பல்நிலை சார்ந்த வெளியுறவுக் கொள்கைகளில் முக்கிய இடத்தை இவ்வமைப்பு பெற்று வந்துள்ளது. உலக அரங்கில், புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக, பிரிக்ஸ் நாடுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இதன் பின்னணியில், பிரேஸில் தலைநகர் பிரேசிலியாவில்…

பிரேசிலியாவில் பதினொன்றாவது பிரிக்ஸ் உச்சி மாநாடு.


(சமூக அறிவியல் நிறுவன இயக்குநர், டாக்டர் ஆஷ்  நாராயன்  ராய்  அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – மாலதி தமிழ்ச்செல்வன்.) பிரேசிலியாவில்  11 ஆவது  பிரிக்ஸ்  உச்சி  மாநாடு  வெற்றிகரமாக  முடிவடைந்துள்ளது. இது, இக்குழுவின் துடிப்புமிக்க  செயல்பாட்டிற்கும், வளர்ந்து வரும் அதன் முக்கியத்துவத்துக்கும் அடையாளமாக விளங்குகிறது. பிரிக்ஸ் நாடுகள் கடந்த தசாப்தத்தில், உலகளாவிய வளர்ச்சிக்கு முக்கிய உந்துசக்தியாக விளங்கின  என்று, இந்த உச்சிமாநாட்டின் கூட்டறிக்கையில்  குறிப்பிடப்பட்டுள்ளது.  பிரிக்ஸ் நாடுகளின் உருவாக்கம், வளர்ந்து  வரும்  புதிய  உலகளாவிய  பொருளாதார  ஒழுங்கு முறையின் மாற்றங்களைப்  பிரதிபலிக்கிறது.  மேற்கத்திய நாடுகளின் உலகளாவிய ஆதிக்கத்தைத் தட்டிக் கேட்பதோடு மட்டுமல்லாமல்,  பிரிக்ஸ் அமைப்பு,…

இந்திய, அமெரிக்க முப்படை கூட்டுப் பயிற்சி ஒத்திகை – 2019


(அமெரிக்க விவகாரங்கள் செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் ஸ்துதி பேனர்ஜி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.) பொருளாதார வளர்ச்சி பெற்று, உலக அளவில் அதிக பங்களிப்பினை அளிப்பதற்கான இந்தியாவின் நோக்கத்துக்கு, அண்மைக்காலமாக அமெரிக்கா உறுதுணையாக விளங்கி வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு, பிரதமர் மோதி அவர்களின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில், அமெரிக்காவுடனான கூட்டாளித்துவத்துக்கு அதிக வலுசேர்க்க முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இருநாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளுக்கு ராணுவ ஒத்துழைப்பு முக்கியத்…

புதிய நீச்சத்தைத் தொடும் பாகிஸ்தான்.


(அரசியல் விமரிசகர் ரத்தன் சால்டி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஆ.வெங்கடேசன்.) முன்னெப்பொழுதும் இல்லாத வகையில், பாகிஸ்தானின் அதிபர் முதல் வெளியுறவுத்துறை அமைச்சர் வரை, முற்றிலும் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் ஒன்றில் தங்களது கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். இந்த மாதம் ஒன்பதாம்தேதி, இந்திய உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு, உத்திரப் பிரதேசத்திலுள்ள அயோத்தியாவில், நூறு ஆண்டுகளாக இழுபறியில் இருந்த, ராமர் கோவில் கட்டுவது சம்பந்தமான வழக்கில், ஒருமனதான…

செர்பியாவுடனான உறவுகளுக்குப் புது வடிவம் அளிக்கும் இந்தியா.


(ஐ.டி.எஸ்.ஏ ஆய்வாளர்  ராஜோர்ஷி ராய் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஸ்ரீபிரியா சம்பத்குமார்.) இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர். எஸ். ஜெய்ஷங்கர் அவர்கள், செர்பியாவுக்கு வெற்றிகரமான பயணத்தை மேற்கொண்டார். பெல்கிரேடில் அவர், செர்பிய வெளியுறவுத் துறை அமைச்சர் இவிகா டேசிச், செர்பிய அதிபர் அலெக்சாண்டர் வுசிச் மற்றும் தேசிய சபையின் சபாநாயகர் ஆகியோரை சந்தித்தார். 21 ஆம் நூற்றாண்டின் தேவைகளுக்கு ஏற்ப, இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்புக்…

கர்தார்பூர் வழித்தடத்தின் முக்கியத்துவம்.


(அமெரிக்காவிற்கான முன்னாள் தூதரும், “த புக் ஆப் நானக்” என்ற புத்தகத்தின் ஆசிரியருமான நவ்தேஜ் சர்னா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஆ. வெங்கடேசன்.) இந்தியாவில் பிரிவினை நிகழ்ந்த பிறகு, சீக்கிய யாத்திரீகர்கள் செல்ல முடியாமல் இருக்கும் பல புனிதத் தலங்களுக்கு, தங்கு தடையில்லாமல் சென்றுவர, சீக்கியர்கள் தினந்தோறும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். அது போன்ற புனிதத் தலங்களலேயே, கர்தார்பூர் சாஹிப் குருத்வாரா மிகவும் புனிதமான ஒன்றாக விளங்குகிறது.…