இந்தியாவின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு அதிகரிப்பு.


(பேராசிரியர் டாக்டர் லேகா சக்கரவர்த்தி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஆ.வெங்கடேசன்.) இந்தியாவின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு மாபெரும் வளர்ச்சி கண்டு, கடந்த டிசம்பர் மாதம் 20 ஆம் தேதியன்று, 45,500 கோடி டாலர் என்ற உச்சகட்ட அளவை எட்டியுள்ளது. கடந்த மார்ச் 2019 இல் இதுவே 41,200 கோடி டலர் என்ற அளவில் இருந்தது. இந்த இடைவெளியில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு, அந்நிய நாணய சொத்து என்ற பிரிவில்,…

ஆஃப்கானிஸ்தான் அதிபர் தேர்தல்.


(அரசியல் விமரிசகர் எம்.கே. டிக்கு அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – மாலதி தமிழ்ச்செல்வன்.) ஆஃப்கானிஸ்தான் அதிபருக்கான தேர்தலின் முதல்கட்ட முடிவுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, போரினால் சீர்குலைந்த அந்நாட்டின் ஜனநாயக அமைப்புக்கள் பலம் பெறுவதற்கான முக்கிய மைல்கல் எட்டப்பட்டுள்ளது எனலாம். தற்போதைய அதிபர் அஷ்ராஃப் கனி அவர்கள், 50.46 சதவிகிதம் வாக்குகள் பெற்று, வென்றுள்ளதாக, அந்நாட்டின் சுதந்திரமான தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அவருக்கு எதிராகப் போட்டியிட்ட முன்னாள் வெளியுறவு அமைச்சர்…

எவரெஸ்ட் சிகரத்துக்குப் பயணம் – விதிகளைக் கடுமையாக்கும் நேபாளம்.


(அரசியல் விமர்சகர் ரத்தன் சால்டி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் ராஜ்குமார் பாலா) 8848 மீட்டர் உயரத்துடன், உலகின் மிக உயர்ந்த சிகரமாக விளங்கும் எவரெஸ்ட் சிகரத்துக்கு ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படும் மலையேற்ற சாகசப் பயணங்களின் மூலம், நேபாளத்துக்கு நல்ல வருவாய் கிடைத்துவருகிறது. எவரெஸ்ட் சிகரத்தை வெற்றி கொள்ளும் முயற்சியில், கடந்த மே மாதம், 11 பேர் உயிரிழந்தது, நடப்பாண்டின் இரண்டாவது அதிகமான உயிரழப்பாகும். அது குறித்து நேபாளம் வருத்தம் அடைந்துள்ளது. 2015 ஆம் ஆண்டு,…

நீர்  மேலாண்மையில் இந்தியாவின் முழுமையான அணுகுமுறை


(பத்திரிக்கையாளர் ஷங்கர் குமார் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – லட்சுமண குமார்) முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயி அவர்களின் பிறந்த தினத்தை ஒட்டி, ‘அடல் பூஜல் யோஜனா’ திட்டத்தை அறிவித்து, நாட்டுக்கு அர்ப்பணித்திருப்பதன் மூலம், நீர் தொடர்பான நெருக்கடியிலிருந்து லட்சக் கணக்கான மக்களை மீட்க  உறுதிபூண்டிருப்பதை இந்தியா உணர்த்தியுள்ளது. பிரதமர் மோதி அவர்கள், இரண்டாவது முறையாகப் பதவியேற்ற பின், ஜல்சக்தி என்ற தனிப்பட்ட அமைச்சகத்தை ஏற்படுத்தினார் என்பது,…

செயலுத்தி உறவுகளை பலப்படுத்தும் இந்தியா மற்றும் ஓமன்.


(மேற்கு ஆசிய விவகாரங்களுக்கான செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் முகமது முடாஸிர் குவாமர் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – மாலதி தமிழ்ச்செல்வன்.) ஓமன் நாட்டுடன், அதன் பெரிய மற்றும் வசதியான அண்டை நாடுகளை ஒப்பிடும்போது, குறைந்த அளவே அந்நாடு சர்வதேச கவனத்தை ஈர்க்கிறது. ஆனால் ஓமன், பாரசீக வளைகுடாவின் முகப்பில் முக்கியமான இடத்தில் உள்ள இந்தியாவின் நட்பு நாடுகளில் ஒன்றாகும். நீண்ட காலமாக உள்நாட்டுக் குழப்பங்கள் மற்றும் பொருளாதார வளர்ச்சிப்…

22 ஆவது இந்திய-சீன பிரதிநிதித்துவப் பேச்சு வார்த்தையில் முன்னேற்றம்.


(சீன விவகாரங்கள் குறித்த செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் எம் எஸ் பிரதீபா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – நித்யா வெங்கடேஷ்.) இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அவர்களுடன் எல்லை விவகாரகள் குறித்துப் பேச,  இந்தியா வந்திருந்த சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ  அவர்கள், குடியரசுத் துணைத் தலைவர் எம் வெங்கையா நாயுடு அவர்களையும் சந்தித்தார். இந்த முறை நடந்த சிறப்புப் பிரதிநிதித்துவப் பேச்சு…

விரிவுப் பாதையில் இந்தியப் பொருளாதாரம் – பிரதமர் திரு நரேந்திர மோதி.


(தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் மூத்த சிறப்பு நிருபர் மனீஷ் ஆனந்த் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – லட்சுமண குமார்.) இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் செல்கிறது என்று பிரதமர் நரேந்திர மோதி உறுதிபடக் கூறியுள்ளார்.  மொத்த  உள்நாட்டு உற்பத்தி குறைந்து வரும் சூழலில், அடுத்த ஐந்தாண்டுகளில் இந்தியாவை  ஐந்து லட்சம் கோடி டாலர்  மதிப்பிலான பொருளாதாரமாக மாற்றுவதில் அரசு உறுதியுடன் இருப்பதாகப் பிரதமர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். அரசின்…

சவூதி அரேபியா—கதார் நாட்டின் இருதரப்பு உறவுகள்


டாக்டர் லட்சுமி பிரியா ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம். தமிழில் பி இராம மூர்த்தி வளைகுடா நாடுகளின் ஒத்துழைப்பில் 40-வது மகாநாடு நடைபெறவுள்ள நிலையில், சவூதி அரேபியா, எகிப்து, ஐக்கிய அரபு குடியரசு மற்றும் பஹ்ரெய்ன் நாடுகள் அனைத்தும் கதார் நாட்டுடன் தூதரக உறவுகள் இல்லாத நிலை இருந்து வந்தது. ஆனால் தற்போது சவூதி அரேபிய அரசர் சல்மான் பின் அப்துல், கதார் நாட்டு அதிபர் ஷேக் தமீம் தானிக்கு ரியாத்தில்…

இந்தியா-அமெரிக்கா இடையேயான இரண்டாவது சுற்று, இரண்டுக்கு இரண்டு சந்திப்பு.


(ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகப் பேராசிரியர் சிந்தாமணி மஹாபாத்ரா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ராஜ்குமார் பாலா) வாஷிங்டனில் இந்திய, அமெரிக்க பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் மற்றும்  மூத்த அதிகாரிகளிடையேயான இரண்டாவது இரண்டுக்கு இரண்டு கூட்டம் இந்த வாரம் வெற்றிகரமாக நடந்துமுடிந்தது. பிரதேசப் பாதுகாப்புச் சூழல், தீவிரவாதத்தை சமாளிப்பது, ஆஃப்கானிஸ்தானை நிலைப்படுத்துவது, இந்திய-பசிபிக் பகுதியில் நிலையான மற்றும் அமைதியான சூழலுக்கு வித்திட உழைப்பது எனப் பல முக்கிய…

பாகிஸ்தான் தேசியப் பேரவையின் தீர்மானத்தை  மறுக்கும் இந்தியா.


(ஆகாசவாணியின் செய்தி ஆய்வாளர் கௌஷிக் ராய் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – நித்யா வெங்கடேஷ்.) தன் உள் நாட்டு அமைப்புகளே ஒன்றுக்கொன்று முரண்பட்டு நிற்கும்  விசித்திரமான ஒரு நாடு பாகிஸ்தான். இந்தியாவின் உள் நாட்டு விவகாரம் எதுவானாலும் அதில் தலையிட்டுக் கருத்துச் சொல்லும் கெட்ட பழக்கமும் அதனிடம் உண்டு. இந்தியாவின் நாடாளுமன்றத்தில் குடியுரிமைத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டு இப்போது குடியுரிமைத் திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. உடனே பாகிஸ்தான் தேசிய…