மீண்டும் வெளிப்பட்டுள்ள சீனா-பாகிஸ்தான் இடையேயான கூட்டு

காஷ்மீர் பிரச்சனை குறித்து விவாதிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு குழுவில் சீன அரசு கேள்விகள் எழுப்பியது.  பாகிஸ்தான் அரசு ஆதரவு அளித்த போதும், பாதுகாப்பு குழுவின் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு அளிக்கவில்லை. அரசியல் சட்டப்பிரிவின் 370 பிரிவு நீக்கப்பட்ட பின்னர் மூன்றாவது முறையாக சீன அரசு இந்த பிரச்சனையை ஐக்கிய நாடுகள் சபையில் எடுக்க முயற்ச்சி செய்த குறிப்பிட தக்கது ஆகும்.  இது இருதரப்பு பிரச்சனை என்றால் இது குறித்து ஐக்கிய நாடுகள் சபையில் முறையிடுவதை சீன அரசு தவிர்க்க வேண்டும்.

பாகிஸ்தான் அரசு உள்நாட்டு பிரச்சனைகளை தவிர்க்கவே இது போன்ற போலியான பிரச்சனைகளை கையிலெடுத்துள்ளது என்று கூறினார் ஐக்கிய நாடுகள் சபையின் இந்திய பிரதிநிதி சையது அக்பருதீன். அரசியல் கூட்டப்பிரிவின் 370 பிரிவு ஆகஸ்ட் 5-ம் தேதி நீக்கப்பட்டதோடு அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா ஆகிய நாடுகள் ஆதரவு அளித்துள்ள நிலையில், தூதரக உறவுகளை பாதித்து வரும் பாகிஸ்தான் அரசின் போக்கு வன்மையாக கண்டிக்கத் தக்கது என கூறினார் இந்தியப் பிரதிநிதி  சையது அக்பருதீன் கூறினார்.

பாகிஸ்தான் அரசின் கூட்டாளியான சீன  அரசு காஷ்மீர் பிரச்சனையை  எடுக்க, ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு குழுவில் முயன்ற போதிலும் மற்ற நிரந்தர உறுப்பினர்கள் அம்முயற்ச்சியை ஆதரிக்கவில்லை.  எனவே பாகிஸ்தான் அரசும், சீன அரசும் உரிய படிப்பினையை ஏற்றுக் கொள்ள வேண்டியது அவசியமாகும் என்று கூறினார் சையது அக்பருதீன் அவர்கள்.  காஷ்மீர் பிரச்சனையை பாதுகாப்பு குழுவில் 3 முறை வென்ற போதிலும், ஒவ்வொரு வருடமும் புதிய உறுப்பினர்கள் பாதுகாப்பு குழுவில் சேர்வதால் தன்னுடைய வாய்ப்பினை சோதித்துப் பார்க்க சீன அரசு முயற்சி செய்து வருகிறது.  ஆனாலும் சீன அரசும், பாகிஸ்தான் அரசும் தமது முயற்சிகளில் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகின்றன.

காஷ்மீர் பிரச்சனை இரு நாடுகளுக்கிடையேயான பிரச்சனை என்பதால் இவற்றை ஐக்கிய நாடுகள் சபையில் எழுப்ப இயலாது என உலக நாடுகள் கருத்து தெரிவித்துள்ளன.  தீவிரவாதத்திற்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் பாகிஸ்தான் அரசு தனது நோக்கை திருத்திக் கொண்டு மற்ற நாடுகளை போல இயல்பான முறையில் தூதரக உறவுகளை புதுப்பித்துக் கொள்ள முயற்சிகள் எடுக்க வேண்டும். பாகிஸ்தான் அரசின் பல்வேறு மட்டத்திலான தோல்விகளை மறைக்கும் வகையில் இந்திய அரசின் உள்நாட்டு பிரச்சனைகளை கையிலெடுத்து வரும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், ஐக்கிய நாடுகள் சபையில் தொடர்ந்து பொருளாதார பிரச்சனைகளையும் உள்நாட்டு குழப்பங்களையும் சந்தித்து வரும் பாகிஸ்தான் அரசு, இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாட்டை கையிலெடுப்பதன் மூலம் அந்நாட்டின் பிரச்சனைகளை தீர்க்க இயலாது என்பதை முன்னாள் கிரிக்கெட் வீர்ர் இம்ரான்கான் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். 6.5 கோடி மக்கள் பாகிஸ்தான் அரசின் பொருளாதாரத்தினால் பாதிக்கப்பட்டு வறுமையில் உழன்று வருகின்றனர்.

மனித வளர்ச்சி குறியீட்டின் அடிப்படையில் மோசமான நிலையில் உள்ள பாகிஸ்தான் அரசு அந்நாட்டு பெண்களின் நிலையை உயர்த்தவும், வறுமை கோட்டிற்கு கீழே வாழும் மக்களின் நிலையை உயர்த்தவும் ஆவன செய்ய வேண்டும் என்பதே உலக நாடுகளின் ஆசையாக உள்ளது என்றுடன் தேர்தல் வாக்குறுதியான மக்கள் நல அரசை நிறுவுவதற்கான முயற்சிகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்று கூறினால் அது மிகையாகாது.