இந்தியா-லாட்வியா உறவுகளில் புதிய உத்வேகம்.


(ஐ.நா.வுக்கான இந்தியாவின் முன்னாள் நிரந்தரப் பிரதிநிதி அசோக் முகர்ஜி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – மாலதி தமிழ்ச்செல்வன்.) லாட்வியாவின் வெளியுறவு மந்திரி எட்கர்ஸ் ரிங்கெவிக்ஸின் அதிகாரபூர்வ இந்தியப் பயணம், இருதரப்பு உறவுகளின் சமீபத்திய உத்வேகத்தை முன்னெடுத்துச் செல்கிறது. 2016 செப்டம்பர் மாத்தில், இந்தியாவின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சட்டம், நீதித்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அவர்கள், லாட்வியாவுக்கு விஜயம் செய்திருந்தார். லாட்வியா பிரதமர் 2017 நவம்பரில் இந்தியாவுக்கு முதன்முறையாக…

ஓமன் – ஒரு சகாப்தத்தின் முடிவு


(பாதுகாப்புத் துறை ஆய்வு மைய ஆய்வாளர் டாக்டர் லக்ஷ்மி பிரியா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம்  – ராஜ்குமார் பாலா.) ஓமன் நாட்டை ஐம்பது ஆண்டுகாலத்துக்கு ஆட்சி செய்த அந்நாட்டு மன்னர் கபூஸ் பின் சையித் அல் சையித் ஜனவரி 10 ஆம் தேதி மறைந்தது ஒரு சகாப்தத்தின் முடிவாகக் கருதப்படுகிறது. நீண்டகாலம் நோய்வாய்ப்பட்டிருந்த அவரின் மறைவு முக்கியமான இந்த வளைகுடா நாட்டில் ஆட்சி மாற்றத்துக்கு வித்திட்டுள்ளது. உலக அளவில் மதிக்கப்படும்…

இலங்கை வெளியுறவு அமைச்சரின் முதல் இந்தியப் பயணம்.


(இட்ஸா ஆய்வாளர் குல்பின் சுல்தானா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஆ.வெங்கடேசன்.) இலங்கை வெளியுறவு, திறன் வளர்ப்பு மற்றும் தொழிலாளர் நலத் துறை அமைச்சர் தினேஷ் குணவர்தனா அவர்கள், இந்தியாவுக்கு முதல்முறையாக அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். அவருடன், நால்வர் அடங்கிய உயர்மட்டக் குழுவும் பயணித்தது. கடந்த நவம்பர் மாதம் இலங்கையின் புதிய அதிபர் கோட்டாபய ராஜபக்ச அவர்கள் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டதைத் தொடர்ந்து, வெளியுறவு அமைச்சரின் இப்பயணம் அமைந்துள்ளது.…

ராணுவத் தளபதியின் பதவி நீட்டிப்பு – சிக்கலில் உழலும் பாகிஸ்தான்.


(பாகிஸ்தான் விவகாரங்களுக்கான செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் ஸைனப் அக்தர் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஸ்ரீப்ரியா சம்பத்குமார்.) பாகிஸ்தான் ராணுவத் தலைவர் ஜெனரல் குவாமர் பாஜ்வாவின் பதவிக்காலம், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முடிவுக்கு வந்தது. எனினும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், 2019 ஆகஸ்டு மாதம் அளித்த ஒரு அறிவிப்பின் மூலம், பாஜ்வாவின் பதவிக்காலம் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது. இந்த நீட்டிப்பை நியாயப்படுத்த, பாகிஸ்தான் பல காரணங்களையும்…

அமெரிக்கா-ஈரான் இடையேயான பதற்றத்தைத் தணிக்க இந்தியா அழைப்பு.


(அமெரிக்க விஷயங்கள் பற்றிய செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் ஸ்துதி பேனர்ஜி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ராஜ்குமார் பாலா.) பாக்தாத் விமானநிலையத்தில், ஈரானின் ராணுவ உயர் அதிகாரிகளில் ஒருவராகத் திகழ்ந்த காசிம் சுலைமானியைக் கொல்ல அமெரிக்க எடுத்த ஒருதரப்பான முடிவு, அந்தப் பிராந்தியத்தில் நிலையற்ற தன்மைக்கு வித்திட்டுள்ளது. இந்தத் தாக்குதல்கள் ஈரான் மக்களிடையே அமெரிக்காவுக்கு எதிரான பொதுக்கருத்தை ஏற்படுத்தியதோடு, ஈரான் -அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தைக்கான வாய்ப்புக்கள் குறையவும் வழியமைத்துள்ளது. …

அறிவியல் துணையுடனான ஊரக வளர்ச்சியில் கவனம்.


( மூத்த அறிவியல் விமரிசகர் பிமன் பாசு அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – நித்யா வெங்கடேஷ்.) விவசாயிகளுக்கும் தொழில்நுட்ப நிபுணர்களுக்கும் இடையிலான இடைவெளியை  நிரப்ப, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தியின் உதவியுடன் ஊரக வளர்ச்சியை மேம்படுத்த வேண்டும். இதன் மூலம் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. பயிர் மகசூலைப் பெருக்குதல், சந்தைப் படுத்துதல், ஊரக வாழ்வாதாரத்திற்கான மாற்று  வழிகளைக் கண்டறிதல் ஆகியவற்றில் ஏற்கெனவே பல புத்தாக்க…

இந்தியாவின் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு ஊக்கமளிக்கும் சிங்கப்பூர்.


(தென்கிழக்கு மற்றும் கிழக்காசிய விவகாரங்களுக்கான செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் ராகுல் மிஸ்ரா அவர்களின் ஆங்கில உரையின்  தமிழாக்கம்- லட்சுமண குமார்) சிங்கப்பூரின் மூத்த அமைச்சரும், சமூகக் கொள்கை  ஒருங்கிணைப்பு அமைச்சருமான தர்மன் ஷண்முகரத்தினம் அவர்கள், இந்தியாவிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டார். தனது பயணத்தின் போது அவர் பிரதமர் நரேந்திர மோதி அவர்களையும், நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களையும் மற்றும் பிற தலைவர்களையும் சந்தித்தார். சிங்கப்பூரின் வெளிநாட்டு…

வளைகுடா பிராந்தியத்தில் அமைதிக்கு அழைப்பு விடுக்கும் இந்தியா.


 (ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மேற்காசிய ஆய்வு மையத்தின் பேராசிரியர் பி.கே. குமாரசாமி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஆ.வெங்கடேசன்.) ஈரான் நாட்டு அல் குட்ஸ் படைத்தளபதி மேஜர் ஜெனரல் காசிம் சுலைமானி அவர்கள், போன வாரம் வெள்ளிக்கிழமை அமெரிக்காவால் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வளைகுடா பகுதிகளில் பதட்டம் நிலவி வருகிறது. வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர் அவர்கள், ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் முஹம்மது ஜாவித் ஸரீஃப் அவர்களைத்…

பாகிஸ்தானுக்கு மேலும் ஒரு புதிய தலைக் குனிவு.


(முன்னாள் இந்தியத் தூதர் அஷோக் சஜ்ஜனார் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – லட்சுமண குமார்) கடந்த வெள்ளிக்கிழமையன்று, பாகிஸ்தானில் உள்ள சீக்கியர்களின் மிகவும் புனிதத் தலமானதும், உலகப்புகழ் பெற்ற குருத்வாராவுமான  நான்கானா சாஹிப்பில் 400க்கும் அதிகமான பேர் நுழைந்து, சீக்கியர்களுக்கு எதிராக முழக்கமிட்டனர். அவர்கள் குருத்வாராவைச் சுற்றி வளைத்து கற்களை வீசினார்கள். அந்த கும்பலுக்குத் தலைமை ஏற்றவர்கள் முகமது ஹசான் என்பவரின் குடும்பத்தினர். முகமது ஹாசன் அந்த குருத்வாராவின்…

பாகிஸ்தானில் உள்நாட்டுக் குழப்பம்.


(இட்ஸா தெற்காசிய மையத்தின் மூத்த ஒருங்கிணைப்பாளர் டாக்டர் அஷோக் பெஹூரியா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.ராமமூர்த்தி.) பாகிஸ்தானின் மூத்த பத்திரிக்கையாளர் சலீம் சஃபி அவர்கள், டெய்லி ஜங் என்ற பத்திரிக்கையில், பாகிஸ்தானில் நிலவும் குழப்பமான சூழ்நிலை குறித்து, புலம்பலுடன் எழுதியுள்ளார். அதில், பாகிஸ்தான் புதிய சமுதாய ஒப்பந்தம் ஒன்றை உடனடியாக உருவாக்கத் தவறினால், பின் எப்போதும் அதனை உருவாக்க இயலாது என்று குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தானிலுள்ள நிறுவனங்கள், ஒன்றுக்கொன்று…