இந்தோ பசிஃபிக் பிராந்தியத்தில் சங்கமிக்கும் இந்திய, நியூஸிலாந்து உறவுகள்.


(ஜேஎன்யூ பேராசிரியர் ஷங்கரி சுந்தரராமன் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் –பி. குருமூர்த்தி.) இந்திய, நியூஸிலாந்து உறவுகளைப் பொறுத்தவரை, 2020 ஆம் ஆண்டு நல்ல துவக்கத்துடன் ஆரம்பித்துள்ளது. கடந்த மாதம் மும்பைக்கு நியூஸிலாந்து குடியேற்றத்துறை அமைச்சர் இயன் லீஸ் கேல்லோவே அவர்கள் வந்திருந்தார். தொடர்ந்து, இம்மாதம், நியூஸிலாந்தின் துணைப் பிரதமரும், வெளியுறவு அமைச்சருமான வின்ஸ்டன் பீட்டர்ஸ் அவர்களும், வர்த்தக அமைச்சர் டேவிட் பார்க்கர் அவர்களும் இந்தியாவுக்குப் பயணம் மேர்கொண்டனர். வர்த்தக…

நான்காவது மேற்காசிய மாநாடு.


(மேற்காசிய செயலுத்தி ஆய்வாளர் முனைவர் முகமது முடாசிர் க்வாமர் ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம் – சத்யா அசோகன்) இந்தியாவின் முக்கிய சிந்தனையாக்க அமைப்பாக விளங்கும் மனோகர் பாரிக்கர் பாதுகாப்பு ஆய்வுகள் மற்றும் பகுப்பாய்வுகளுக்கான நிறுவனமானது “ மேற்காசியாவில் பத்தாண்டு கால அரசியல் மற்றும் பொருளாதார மாற்றங்கள் –  சவால்கள், பாடங்கள் மற்றும்  எதிர்காலப் போக்குகள்” எனும் கருவை மையமாகக் கொண்டு புது தில்லியில் நான்காவது மேற்காசிய மாநாட்டை நடத்தியது.  இந்த…

விரிவான, உலகளாவிய செயலுத்திக் கூட்டாளித்துவத்தை நோக்கி நகரும் இந்திய, அமெரிக்க உறவுகள்.


(ஆல் இண்டியா ரேடியோ செய்தி ஆய்வாளர் பதாம் சிங் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.) விரிவான, உலகளாவிய செயலுத்திக் கூட்டாளித்துவத்தை நோக்கி இந்திய, அமெரிக்க உறவுகளை இட்டுச் செல்ல, பிரதமர் நரேந்திர மோதியும், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அவர்களும் உறுதி பூண்டுள்ளனர். இருதலைவர்களும் சிறப்புமிக்க இறையாண்மையையும், துடிப்பான ஜனநாயகக் கோட்பாடுகளையும் அனுசரிக்கும் நாடுகளின் பிரிதிநிதிகளாக விளங்குவது குறிப்பிடத்தக்கது. இருநாடுகளும் மக்களின் சுதந்திரம், சமத்துவம், மனித உரிமைகள்…

அமெரிக்க அதிபரின் வருகையால் அதிகரித்திருக்கும் இரு தரப்பு செயலுத்திக் கூட்டாளித்துவம்.


(அமெரிக்காவுக்கான முன்னாள் தூதர் நவ்தேஜ் சர்னா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் –  கே. லட்சுமண குமார்) அமெரிக்க அதிபரின் 36 மணி நேர இந்தியப் பயணம் கோலாகலம் நிறைந்ததாகவும், அர்த்தம் கொண்டதாகவும் இருந்தது. இந்தியாவுக்கு விஜயம் செய்யும் ஏழாவது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆவார். கடந்த இருபது ஆண்டுகளில் நான்கு அமெரிக்க அதிபர்கள்  இந்தியாவிற்குப்  பயணம் செய்திருப்பது, அமெரிக்க – இந்திய உறவுகள் ஏறுமுகத்தில் இருப்பதை சுட்டிக்காட்டுகிறது.…

அதிபர் டிரம்ப் அவர்களின் முதல் இந்தியப் பயணம்.


(ஜேஎன்யூ பேராசிரியர் சிந்தாமணி மஹாபாத்ரா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – மாலதி தமிழ்ச்செல்வன்.) .தனது முதல் இந்தியப் பயணத்திற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர்கள் இந்திய மண்ணில் காலடி வைத்தபோது,  பிரதமர் திரு நரேந்திர மோதி அகமதாபாத் விமான நிலையத்தில் அவரை வரவேற்றார். இரு தலைவர்களுக்கும் இடையிலான தனிப்பட்ட நட்பு அனைவரும் அறிந்ததே. ஆங்கில அரசின் பிடியிலிருந்து இந்தியாவை விடுவிப்பதில்  அண்ணல் காந்தியடிகளின் பங்கைக் கருத்தில் கொண்டு, அவரது சொந்த நிலமான குஜராத்தில் சபர்மதி ஆசிரமத்திற்கு டிரம்ப் அவர்கள் சென்று தேசத்தந்தைக்கு அஞ்சலி செலுத்தினார்.…

எஃப்ஏடிஎஃப் – கறுப்புப் பட்டியலில் ஈரான், பழுப்புப் பட்டியலில் தொடர்ந்து பாகிஸ்தான்.


(சிங்கப்பூர் கிழக்காசிய நிறுவனத்தின் மூத்த ஆய்வாளர் டாக்டர் அசிஃப் ஷூஜா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.) பயங்கரவாதத்துக்கு நிதி செல்வதைத் தடுப்பதன் மூலம், உலக சமுதாயத்தை சர்வதேச பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் பொருட்டு, அரசுகளுக்கிடையே ஏற்படுத்தப்பட்ட கண்காணிப்புக் குழுவே, பயங்கரவாத நிதித் தடுப்பு நடவடிக்கைக் குழுவாகும். கடந்த ஞாயிறன்று நடைபெற்ற இக்குழுவின் கூட்டத்தில், ஈரான் நாட்டைக் கறுப்புப் பட்டியலிலும், பாகிஸ்தானைப் பழுப்புப் பட்டியலிலும் தொடர்ந்து வைத்திருக்க முடிவு செய்யப்பட்டது.…

ஆஃப்கன் அதிபர் தேர்தலில் அஷ்ரஃப் கானி வெற்றி.


(தெற்காசியா குறித்த செயலுத்தி நிபுணர் டாக்டர் ஸ்ம்ருதி எஸ் பட்நாயக் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ராஜ்குமார் பாலா.) ஆஃப்கானிஸ்தானில், கடந்த 2019 ஆம் ஆண்டு, செப்டம்பர் 28 ஆம் தேதியன்று, கடுமையான போட்டியுடன் நடைபெற்ற அதிபருக்கான தேர்தலின் முடிவுகள், பிப்ரவரி 18 ஆம் தேதி, கிட்டத்தட்ட ஐந்துமாத காலதாமதத்துக்குப் பிறகு வெளியானது. தற்போதைய அதிபர் அஷ்ரஃப் கானி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அவரது முக்கியப் போட்டியாளரான…

காஷ்மீர் விவகாரத்தில் துருக்கியின் தலையீட்டிற்கு இந்தியா கண்டனம்.


(துருக்கி மற்றும் சிஐஎஸ் நாட்டு விவகாரங்கள் செயலுத்தி ஆய்வாளர் இந்திராணி தலுக்தார் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.) துருக்கி அதிபர் ரிசெப் டய்யிப் எர்டோகன் அவர்கள், அண்மையில் மேற்கொண்ட பாகிஸ்தான் பயணத்தின்போது, காஷ்மீர் நிலை குறித்த தனது கவலைகளை வெளியிட்டார். அண்மையில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட பின்னரும் காஷ்மீரில் இக்கட்டான சூழல் நிலவுவதாக அவர் குறிப்பிட்டார். காஷ்மீர் விவகாரத்தில் ஐ.நா.தீர்மானங்களின் அடிப்படையில், இந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை மூலம்,…

முக்கியத்துவம் பெறும் இந்திய, ஐரோப்பிய யூனியன் செயலுத்திக் கூட்டாளித்துவம்.


(ஆல் இண்டியா ரேடியோ செய்தி ஆய்வாளர் பதாம் சிங் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – கே. லட்சுமண குமார்) ஐரோப்பிய யூனியனின் வெளியுறவு விவகாரங்களுக்கான சபையுடன் பேச்சுவார்த்தை நடத்தும் பொருட்டு, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் அவர்கள் ப்ரஸ்ஸல்ஸுக்குப் பயணம் மேற்கொண்டார். ஐரோப்பிய யூனியனின் உயர்நிலை பிரதிநிதியும் வெளியுறவு விவகாரங்கள் மற்றும் பாதுகாப்புக் கொள்கையின் துணைத் தலைவருமான  ஜோசப் போர்ரெல் ஃபாண்டெல்லெஸ் அவர்களின் அழைப்பை…

பாதுகாப்பு தொடர்பான 2020 ஆம் ஆண்டின் மியூனிக் மாநாடு – முக்கிய அம்சங்கள்.


(ஐரோப்பிய விவகாரங்களுக்கான செயலுத்தி நிபுணர் டாக்டர் சங்கமித்ரா சர்மா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ராஜ்குமார் பாலா) 2020 ஆம் ஆண்டின் மியூனிக் பாதுகாப்பு மாநாடு, ஜெர்மனியின் மியூனிக் ந்கரில் கடந்த வாரம் நடைபெற்றது. ’மேற்கத்தியம் இல்லாத நிலை’ என்ற கருப்பொருளில் இந்த மாநாடு கவனம் செலுத்தியது. மேற்கத்திய நாடுகளின் மதிப்புகள் மற்றும் செயலுத்தி முறைகளுடன் ஏற்படும் மாறுபாடுகள் மற்றும் அசாதாரன நிலைமை காரணமாக இந்த கருப்பொருள் ஏற்பட்டது.…