கொரோனா நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தும் தீவிர முயற்சியில் இந்தியா.


(ஆல் இண்டியா ரேடியோ செய்தி ஆய்வாளர் கௌஷிக் ராய் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம்.)  ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக நாட்டு மக்களுடன் தொலைக்காட்சி மூலம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோதி அவர்கள், கோவிட் 19 தொற்றுநோய் குறித்து மக்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்றும், அதே சமயம் பீதியடையாமல் அமைதியாய் இந்தக் கொள்ளைநோயை எதிர்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். முன்னதாகத் தாம் கேட்டுக் கொண்டதற்கிணங்க, நாட்டின் 130…

கோவிட் 19 தொற்றுநோயை எதிர்த்துப் போராட இந்தியா உறுதி.


(ஆல் இண்டியா ரேடியோ செய்தி ஆய்வாளர் கௌஷிக் ராய் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம்.) இந்தியாவின் 130 கோடி மக்கள், கொரோனா வைரஸ் நோயை எதிர்த்துப் போராட தங்களின் உறுதிப்பாட்டை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளனர். பிரதமர் நரேந்திர மோதி அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, கடந்த ஞாயிறன்று, நாடு முழுவதும் மக்கள் தாங்களாகவே தன்னிச்சையாக முன்வந்து, ஜனதா கர்ஃபியூ என்ற ஊரடங்கில் பங்கு பெற்றனர். இந்த ஊரடங்கின் ஓர் அம்சமாக, மாலை 5 மணியளவில்,…

கொரோனா வைரஸ் நோயை எதிர்கொள்ள சார்க் நாடுகள் கையாளும் கூட்டு முயற்சி.


(அரசியல் விமரிசகர் ரத்தன் சால்டி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.) கடந்த மார்ச் 2020, 15 ஆம் தேதியன்று, பிரதமர் திரு நரேந்திர மோதி, காணொளிக்காட்சி மூலம், தெற்காசிய, பிராந்தியக் கூட்டுறவு அமைப்பான சார்க்கின் உறுப்பு நாடுகளுடன் கலந்துரையாடினார். அவரது இந்த  முன்னெடுப்பின் நோக்கம், சார்க் நாடுகளுடன் இணைந்து, அபாயகரமான கோவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று நோயை எதிர்கொள்ள, வலுவான கூட்டுமுயற்சியை உருவாக்குவதேயாகும். இதுவரை…

கொரோனா தொற்றுநோயை வெல்ல சிறந்த ஆயுதம், நாட்டு மக்களின் உறுதியே – பிரதமர் திரு நரேந்திர மோதி.


(ஆல் இண்டியா ரேடியோ இயக்குனர் அமலன்ஜோதி மஜும்தார் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஆ. வெங்கடேசன்.) கொரோனா  வைரஸ்  நோய் பரவாமல் தடுக்க,  மிகவும் முன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று, பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் நேற்று மாலை நாட்டு மக்களுக்குத் தொலைக்காட்சி, மற்றும் வானொலி மூலம் அளித்த உரையின்போது கேட்டுக்கொண்டார்.  கொரோனா  வைரஸ்  நோய் நம்மைப் பாதிக்காது என்று  மெத்தனமாக இருந்துவிட வேண்டாம் என்று அவர்…

அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையிலான சச்சரவில் சிக்கித் தவிக்கும் ஈராக்.


(மேற்காசிய விவகாரங்கள் செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் முகமது முடாசிர் குவாமர் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி) உள்நாட்டுப் பிரிவினைகளாலும், வெளிநாட்டுத் தலையீடுகளாலும் வெகுநாட்களாக ஈராக் பாதிக்கப்பட்டு வந்துள்ளது. 2017 ஆம் ஆண்டில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு தோற்கடிக்கப்பட்டதையடுத்து, மக்களிடையே உருவான நம்பிக்கையும் அதிக நாட்கள் நீடிக்கவில்லை. ஊழலில் ஈடுபட்டு, முதலாளித்துவத்துக்கு அதிக முக்கியத்துவமும் அளித்த ஈராக் அரசின் திறனற்ற செயல்பாடுகளால், மக்களின் எதிர்பார்ப்புக்களைப் பூர்த்தி செய்ய இயலாத…

கொரொனாவுக்கு எதிரான போரில் முன்னணியில் இந்தியா.


 (தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் சிறப்பு மூத்த நிருபர் மனிஷ் ஆனந்த் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – நித்யா வெங்கடேஷ்.) கொரொனா தொற்றுப் பரவலை ஒரு சர்வதேசக் கொள்ளை நோய் என்று உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. உலகம் முழுவதிலும் 7500-க்கும் அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அனேகமாக எல்லா நாடுகளும் ஸ்தம்பித்துள்ள நிலையில், நெருக்கடி நிர்வாகத்தில் இந்தியாவுக்குள்ள தலைமைப் பண்பு மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது. சீனாவில் உருவான…

கொரோனா வைரஸ் தொற்றுநோய் கோவிட்-19  விடுக்கும் சவாலை எதிர்கொள்ளும் சார்க் பிராந்தியம்.


(தெற்காசியா பற்றிய மூலோபாய ஆய்வாளர் முனைவர் ஸ்மிருதி எஸ் பட்டநாயக் எழுதிய ஆங்கில உரையின் தமிழாக்கம் : த.க.தமிழ்பாரதன்) உலக சுகாதார நிறுவனத்தால் உலகளாவிய தொற்றுநோயாக அறிவிக்கப்பட்ட கோவிட்-19 ஐ எதிர்த்துப் போராடுவதற்கான வழிமுறைகளைக் கூட்டாக உருவாக்க சார்க் தலைவர்களின் காணொளி மாநாட்டை பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் நடத்தினார். இது ஒரு தனித்துவமான முன்னெடுப்பாகும். இது தெற்காசிய பிராந்தியத்தின் உடனடி கவனத்தை ஈர்த்துள்ளது. இப்பிராந்தியத்தின் அனைத்து நாடுகளும் அதிக மக்கள் தொகை கொண்டவை…

கொரோனா தொற்றுநோய்ப் பரவலைத் தடுக்க, சார்க் நாடுகளின் ஒருங்கிணைந்த செயல்பாடு – பிரதமர் மோதி அவர்களின் முன்னெடுப்பு.


(ஆல் இண்டியா ரேடியோ இயக்குனர் அமலன்ஜோதி மஜும்தார் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.) கோவிட் 19 என்ற கொரோனா தொற்றுநோய்ப் பரவலைத் தடுக்க, சார்க் நாடுகளின் ஒருங்கிணைந்த செயல்பாட்டை வலியுறுத்தி, பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் விடுத்த அழைப்பிற்கு, பாகிஸ்தான் உள்பட, அனைத்து சார்க் உறுப்பு நாடுகளின் தலைவர்களும் உடனடியாக ஒப்புக் கொண்டுள்ளனர். தங்களிடம் உள்ள அனைத்து வளங்களையும் பயன்படுத்தி, ஆபத்தான கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்கொள்ள…

கச்சா எண்ணெய் விலையில் கடும் போட்டி.


(பேராசிரியர் டாக்டர் லேகா சக்கரவர்த்தி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.) சவூதி அரேபியா, பிரெண்ட் நிறுவன கச்சா எண்ணெய் விலையை அதிரடியாக 30 சதவிகிதத்துக்கும் மேலாகக் குறைத்து, அதில் கடும் போட்டியைத் துவக்கி வைத்துள்ளது. 1991 ஆம் ஆண்டின் வளைகுடா நெருக்கடிக்குப் பின்னர், இந்த அளவிற்குக் கச்சா எண்ணெய் விலை குறைந்தது இதுவே முதல்முறையாகும். கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைப்பது குறித்து முடிவெடுப்பதில், சவூதி அரேபியாவுக்கும், ரஷ்யாவுக்கும்…

கொரிய தீபகற்பத்தில் மீண்டும் தலைதூக்கும் இறுக்கம்.


(முன்னாள் இந்திய தூதரக அதிகாரி அஷோக் சஜ்ஜனார் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – மாலதி தமிழ்ச்செல்வன்.) கடந்த இருவாரங்களில் இரண்டாவது முறையாக, அடையாளம் தெரியாத, குறைந்தபட்சம் மூன்று ஏவுகணைகளை வடகொரியா ஏவியுள்ளது. முன்னதாக, தாம் மேற்கொண்ட நேரடிப் பயிற்சி கண்டனத்துக்கு உள்ளானதை எதிர்த்து, வடகொரியா, அதிரடி நடவடிக்கைகளை எடுக்கப் போவதாக அச்சுறுத்தியதைத் தொடர்ந்து இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. வடகொரியாவின் கிழக்குக் கடற்கரையிலிருந்து, கொரிய தீபகற்பத்திற்கும் ஜப்பானுக்கும் இடையிலான கடலில்…