கோவிட்-19 மற்றும் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதில் எஸ்சிஓ வெளியுறவு அமைச்சர்கள் கவனம்.

(நாடாளுமன்ற ஆய்வாளர் பேராசிரியர் ராஜாராம் பாண்டா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம்.)

2017 ஆம் ஆண்டு, ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் (எஸ்சிஓ) முழு அளவிலான உறுப்பினராக இந்தியா இணைந்ததிலிருந்து, இந்த 8 உறுப்பினர்கள் கொண்ட அமைப்பில் இந்தியாவின் கை ஓங்கியுள்ளது. எஸ்சிஓ அமைப்பானது, அரசியல் மற்றும் பாதுகாப்பு சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்தும். இந்தியா நேர்மறையான பங்களிப்புக்களை இந்த அமைப்புக்கு நல்கியுள்ளது. கொரோனா கொள்ளை நோய் போன்ற நெருக்கடி மிக்க சூழலில், இதுபோன்ற பிராந்திய மற்றும் சர்வதேச அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து சவால்களுக்குத் தீர்வுகாண முற்படுவது மிகவும் பயனுள்ளதாக விளங்கும்.

இந்தியா 2005 முதல் எஸ்சிஓவில் ஒரு பார்வையாளராக இருந்தது.  யூரேசிய பிராந்தியத்தில் பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பில் முக்கியமாக கவனம் செலுத்தும் குழுவின் அமைச்சர்கள் அளவிலான கூட்டங்களில் பங்கேற்றது. 2001 இல் ஷாங்காயில் நடந்த ஒரு உச்சி மாநாட்டில், ரஷ்யாசீனாகிர்கிஸ் குடியரசுகஜகஸ்தான்தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளின் அதிபர்ளால் எஸ்சிஓ நிறுவப்பட்டது.

இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் அவர்கள், கடந்த வாரம் நடந்த எஸ்சிஓ உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் அசாதாரண கூட்டத்தில் பங்கேற்றார்அதில் அவர் சிறந்த நடைமுறைகளைப் பகிர்வது உட்பட, கொடிய கோவிட் –19 ஐ எதிர்த்துப் போராடுவதற்கான ஒத்துழைப்பை வலியுறுத்தினார். இதற்கு ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தலைமை தாங்கினார்சீனாவின் வாங் யி மற்றும் பாகிஸ்தானின் ஷா மெஹ்மூத் குரேஷி உள்ளிட்ட அனைத்து எஸ்சிஓ நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும் இதில் கலந்து கொண்டனர்.

கோவிட் –19 ஐக் கட்டுப்படுத்துவதில், குறிப்பாக, மருத்துவம்மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துப் பொருட்கள் குறித்த சிறந்த நடைமுறைகள் பற்றிய தகவல்களைப் பகிர்வதன் முக்கியத்துவத்தை வெளியுறவு அமைச்சர்கள் கோடிட்டுக் காட்டினர். தடுப்பூசி உருவாக்குதலுக்கும், நோய் சிகிச்சை முறைகளுக்குமான ஒத்துழைப்பு குறித்த, தலைவர்கள் நிலையிலான உச்சி மாநாட்டில் ஏற்றுக்கொள்ளத் தக்க செயல் திட்டத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்துவது என்ற ஒரு கூட்டுப் பிரகடனத்திற்கு அவர்கள்  ஒப்புக்கொண்டனர்.

எஸ்சிஓ உறுப்பு நாடுகளுடன் தகவல்நிபுணத்துவம் மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்ள இந்தியா தயாராக உள்ளதாக டாக்டர் ஜெய்ஷங்கர் தெரிவித்தார். தொற்றுநோயைத் தொடர்ந்து இந்தியா மேற்கொண்ட முயற்சிகள் மற்றும் பல்வேறு தீர்க்கமான நடவடிக்கைகளை டாக்டர் ஜெய்சங்கர் எடுத்துரைத்தார். பொருளாதார வளர்ச்சிக்கான 20 லட்சம் கோடி ரூபாய் ஊக்கத் தொகுப்பை, மே 12 அன்று பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் அறிவித்ததும் இதில் அடங்கும். எஸ்சிஓ உறுப்பினர்களிடையே பரஸ்பர நன்மை பயக்கும் வர்த்தக-பொருளாதார ஒத்துழைப்புக்கு சாதகமான சூழலை உருவாக்குவதற்கு இந்தியா உறுதிபூண்டுள்ளது என்றும்  இந்திய வெளியுறவு அமைச்சர்   சுட்டிக்காட்டினார்.

ஏப்ரல் 2020 இன் பிற்பகுதியில் நடைபெற்ற பிரிக்ஸ் வெளியுறவு அமைச்சர்களின் காணொளிக் கலந்துரையாடல்களுக்குப் பிறகு, எஸ்சிஓ வெளியுறவு அமைச்சர்களின் இந்த சந்திப்பு நடந்துள்ளது.  கோவிட் –19 நெருக்கடி மற்றும் அதன் தாக்கம் குறித்து, பிரிக்ஸ் கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்பட்டது. மே ஆம் தேதி நடந்த  பிரிக்ஸ் சுகாதார அதிகாரிகளின் காணொளிக் கூட்டத்தில், இது முனைப்புடன் முன்னெடுத்துச் செல்லப்பட்டது. எஸ்சிஓ வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு அத்தகைய முயற்சியின் விரிவாக்கமாகும். கோவிட் –19 குறித்த காணொளி சந்திப்பில் இந்திய, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்றது  இதுவே முதல் முறையாகும்.

ஒரு அமைப்பாகஎஸ்சிஓ, யூரேசிய கண்டத்தின் ஐந்தில் மூன்று பகுதியையும், உலக மக்கள்தொகையில் கிட்டத்தட்ட பாதியையும் உள்ளடக்கியது. மூன்று பெரிய பொருளாதார  நாடுகள் அடங்கிய இக் குழுகொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்தியது. இந்த சந்திப்பு, அமெரிக்கத் தலைமையிலான, இந்தியாவை உள்ளடக்கிய ஏழு தேசங்களின் கூட்டம்  நடைபெற்ற இரண்டு நாட்களுக்குள் நிகழ்ந்துள்ளது.  அதில் கோவிட் –19 மற்றும் பொருளாதார மீட்சி குறித்து விவாதிக்கப்பட்டது.

கோவிட் –19 ஐ எதிர்த்துப் போராடுவது, ஒத்துழைப்பிற்கான பொதுவான மேடையை அடையாளம் காண்பது ஆகியவை தவிரடாக்டர் ஜெய்சங்கர்இன்று உலகம் எதிர்கொள்ளும் பாதுகாப்புச் சவால்களை அடிக்கோடிட்டுக் காட்டினார். அவை பௌதீக அல்லது அரசியல் எல்லைகளால் இணைக்கப்படவில்லை. எஸ்சிஓ பிராந்தியத்தில் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு பயங்கரவாதம் தொடர்ந்து பெரும் அச்சுறுத்தலாக உள்ளதால், டாக்டர் ஜெய்ஷங்கர் அவர்கள், உறுப்புநாடுகளின் கூட்டு நடவடிக்கைக்கு வலுவாகக் குரல் கொடுத்தார். பொருளாதார மறுமலர்ச்சிக்கு எஸ்சிஓ செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார். கூட்டத்தைக் கூட்டிய ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், பயங்கரவாத எதிர்ப்பு ஆணையை வலுப்படுத்தவும்குழுவின் பாதுகாப்பு பொறிமுறையை வலுப்படுத்தவும் அழைப்பு விடுத்தார். ரஷ்ய அதிபரின் கீழ்எஸ்சிஓ தனது அடுத்த உச்சி மாநாட்டை செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் ஜூலை இறுதியில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த மாநாடு, ஆப்கானிஸ்தானில் உருவாகி வரும் நிலைமை குறித்து விரிவாக விவாதித்ததுசமாதான முன்னெடுப்புகள் ஆப்கானிய மக்களின் அபிலாஷைகளையும் அண்டை நாடுகளின் பங்குகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. சீனாவின் ஆதிக்கம் நிறைந்த இக்குழுவில்உண்மையில்முழு உறுப்பினராக இந்தியா நுழைந்துள்ளது, பிராந்திய புவிசார் அரசியலில் கூட்டணியின் வளர்ச்சியை அதிகரித்துள்ளதுஅதோடுஆசியா முழுவதற்குமான சாயலையும் கொடுத்துள்ளது.