கோவிட்-19: இந்தோ-பஸிஃபிக் பிராந்தியத்தில் கூட்டுறவுக்கு வலு சேர்ப்பு.

(ஜேஎன்யூ பேராசிரியர் ஷங்கரி சுந்தரராமன் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம்.)

கோவிட்-19 நோயின் யதார்த்தங்களை உலகம் எதிர்கொண்டுள்ள நிலையில்ஒரு புதிய இயல்புக்கு இணக்கமாக வேண்டிய அவசியம் உள்ளது. கூட்டு நடவடிக்கை மற்றும் கூட்டு அணுகுமுறைகள் மூலம்உத்தியோகபூர்வ செயல்பாட்டின் பழைய விதிமுறைகளின் தொடர்ச்சியான செயல்பாட்டுக்கு அனைத்து நாடுகளும் முயற்சி செய்கின்றனபிராந்திய அளவில் நாடுகள் ஆலோசனை செயல்முறைகளை அதிகரித்துள்ளன. மார்ச் மாதத்தில் தெற்காசியாவில் தொற்றுநோய் பரவுவதைத் தடுப்பது குறித்து விவாதிக்க, சார்க் உறுப்புநாடுகளுடன் பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் மேற்கொண்ட தலைமையும் முன்னெடுப்பு நடவடிக்கைகளும் தனை வெளிப்படுத்தின. ஐரோப்பா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் மேற்கொள்ளப்பட்ட பிற பிராந்திய முயற்சிகளும் இதற்கு எடுத்துக்காட்டுகள். கொரோனாவுக்கு எதிராக செயலில் இறங்க, ஜி 20 மட்டத்தில் இந்தியா விடுத்த அழைப்பிலும் ஒத்துழைப்பு தெளிவாகத் தெரிகிறது.

இந்நிலையில், கோவிட்-19 நோயை எதிர்கொள்ள, இந்தோ-பசிபிக் பிராந்தியமும் ஒத்துழைப்பை நோக்கி நகர்வது ஆச்சரியமல்ல. இந்தோ-பசிபிக் என்ற இந்த வார்த்தையின் பாரம்பரிய அர்த்தம் ஒரு பிராந்தியத்தைக் குறிக்கவில்லை என்றாலும்கோவிட் 19 தொடர்பாக ஒத்துழைப்புக்கான இந்தோ-பசிபிக் அடையாளம் ஏன் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த உத்தி என்று புரிந்து கொள்ள வேண்டும். கொரோனா தொற்றுநோய், இதுவரை சரித்திரம் காணாத, புதிய பாதுகாப்புச் சவாலை எழுப்பியுள்ளது. இது எல்லைகளை மதிக்கவில்லை. உண்மையிலேயே நாடுகடந்த தன்மை கொண்டது. இந்தோ-பசிபிக் ஒரு அடையாளத்தை குறிக்கிறதுஇது மூலோபாயபுவிசார் அரசியல் மற்றும் இயல்பான தன்மை கொண்டது. இந்தோ-பஸிஃபிக் பிராந்தியம், கோவிட்-19 உருவாக்கியுள்ள சுகாதாரப் பிரச்சினைகள் தவிர, அதனால் ஏற்பட்ட புவிசார் அரசியல் நிர்பந்தங்களையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

இந்த சூழலில்இந்திய வெளியுறவு செயலாளர் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தைச் சேர்ந்த தனது சகாக்களுடன் கலந்தாலோசித்தது முக்கியத்துவம் பெறுகிறது. வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்க்லா அவர்கள், ஆஸ்திரேலியாஜப்பான்நியூசிலாந்துதென் கொரியாஅமெரிக்கா மற்றும் வியட்நாம் நாடுகளின் சகாக்களுடன்  தொலைபேசி உரையாடல்கள் மேற்கொண்டார். இதன் மூலம், ஆலோசனைகள், தகவல் பகிர்வு மற்றும் பிராந்திய நாடுகளால் பின்பற்றப்பட்ட சிறந்த நடைமுறைகள் ஆகியவை பகிரப்பட்டது முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்தோ-பஸிஃபிக் பிராந்தியத்தின் பரவலான நாடுகளுடன் விவாதங்கள் நடந்தன. இதில், இந்தியா தெற்காசியாவையும், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து பஸிஃபிக் பிராந்தியத்தையும், ஜப்பான் மற்றும் தென்கொரியா கிழக்காசியாவையும், வியட்நாம் ஆசியான் நாடுகளையும் பிரதிநிதித்துவம் செய்கின்றன. இத்துடன் அமெரிக்காவும் இணைந்துள்ளது.

இந்த பரந்த வலையமைப்பு, தொற்றுநோய்க்கான ஒத்துழைப்பின் அடிப்படையில் இரட்டை நன்மைகளைக் கொண்டுள்ளது. தென் கொரியாநியூசிலாந்து மற்றும் வியட்நாம் போன்ற நாடுகள் ஆரம்ப நாட்களில் நம்பகமான வெற்றியைப் பெற்றுள்ளன. இந்த நாடுகள் பின்பற்றிய நடைமுறைகள்மூன்று குறிப்பிட்ட பகுதிகளைச் சார்ந்திருந்தன.அவை, சோதனைதனிமைப்படுத்தல் மற்றும் தொடர்புத் தடமறிதல், நடமாட்டத்தில் கட்டுப்பாடுகள் ஆகியவையேயாகும். தென் கொரியா ஆரம்பத்தில் அதன் முயற்சிகளில் வெற்றி பெற்றாலும், போதிய கால அவகாசத்துக்கு முன்பாகவே, தளர்வுகளை அறிவித்ததால், அந்நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்தது. கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் முன்னிலையில் உள்ள நியூசிலாந்து, விரைவிலேயே  ஊரடங்கை அமல்படுத்த மேற்கொண்ட கொள்கை முன்னெடுப்புக்கள் அளித்த வெற்றிக்கு உதாரணமாகத் திகழ்கிறது. இதேபோல்வியட்நாமும் தொற்றுநோயைக் கையாண்ட வெளிப்படையான முறை பாராட்டுதலுக்கு உரித்தானது.

ஆலோசனை வழிமுறைகள், மருத்துவ மற்றும் சுகாதார உபகரணங்களின் தடையின்றி வழங்கல் மற்றும் மருந்துகள் மற்றும் உணவுப் பொருட்களின் பிரச்சினையையும் தீர்க்க முயல்கின்றன. மிக முக்கியமாகவிமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதன் காரணமாக இந்த நாடுகளில் சிக்கித் தவிக்கும் குடிமக்களுக்கான தூதரக சேவைகளுக்கு இந்த கூட்டங்கள் முயன்றுள்ளன. உலகப் பொருளாதாரம் வரும் மாதங்களில் கடுமையான மந்தநிலையை எதிர்கொள்ளவிருக்கும் நிலையில், தொற்றுநோயைச் சமாளிக்க பலதரப்பு நிதிகளுக்கான வழிகளைத் தேடுவதில் ஆலோசனை செயல்முறைகள் உதவ வேண்டும்.

இந்தோ-பசிபிக் பகுதியில் புவிசார் அரசியல் யதார்த்தங்களையும் இந்த தொற்றுநோய் கட்டவிழ்த்து விட்டுள்ளது. சீனா, சமீபத்தில் பிராந்திய நாடுகளுக்கு உதவுவதற்கான முயற்சிகளை `சீன சுகாதார பட்டு சாலை’ மூலம் அதிகரித்துள்ளதுஇது அதன் பெல்ட் மற்றும் சாலை முன்முயற்சியை (பிஆர்ஐ) மேலெடுத்துச் செலவதற்கான மிகவும் நுணுக்கமான அணுகுமுறையேயன்றி வேறல்ல. கொரோனா தொற்று நோய் உலகம் முழுவதும் பரவியதற்கு, சீனா பொறுப்பேற்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில், சிறிய நாடுகளுக்கு உதவுவதற்கான மாற்று வழிகள் முக்கியமானதாக இருக்கும். இந்தியப் பெருங்கடலில் உள்ள மாலத்தீவுகள்மொரீஷியஸ்சீஷெல்ஸ் மற்றும் கொமொரோஸ் போன்ற தீவு நாடுகளுக்கு தனது கடற்படை இராஜதந்திரத்தின் வெளிப்பாடாக, இந்தியா, ஐ.என்.எஸ். கேசரி போர்க்கப்பல் மூலம் நிவாரணப் பொருட்களை வழங்கியது. இது, இப் பரந்த பிராந்தியத்தில் உள்ள சவால்களை எதிர்கொள்ள மேற்கொள்ளப்படும் முக்கியமான முயற்சிகளில் ஒன்றாகும்.