கோவிட்-19 நோய்க் கட்டுப்பாடு – சிறந்த அணுகுமுறையுடன் முன்னேறும் இந்தியா.

(தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் மூத்த சிறப்பு பத்திரிக்கையாளர் மனீஷ் ஆனந்த் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம்.)

இரண்டு மாதங்களுக்குப் பிறகு, திங்களன்று, 532 விமானங்கள் இந்திய வானத்தில் பறக்கத் துவங்கின. எந்தவொரு கடினமான சூழலையும் உறுதியுடன் எதிர்கொண்டு வெற்றி பெறப் பாடுபடும் இந்தியாவின் தீர்மானத்தை எதுவும் முறியடிக்க முடியாது என்பதற்கு ஒரு தெளிவான சான்றாக இது விளங்குகிறது. விமான நிலையங்களும், பயணிகளும் கொடிய கோவிட் –19 நோயைக் கட்டுப்படுத்த, இந்தியா நன்கு தயார் நிலையில் உள்ளது என்பதை நிரூபித்தனர்.

வாழ்க்கை விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும் என்ற மக்களின் நம்பிக்கையை வெளிப்படுத்தும் வகையில், முகக் கவசம் அணிந்த ஒரு ஐந்து வயது சிறுவன்புதுதில்லியில் இருந்து பெங்களூருக்குத் தனியாக பறந்தான். இரண்டு மாதங்களுக்கும் மேலான ஊரடங்கு காலத்தில், வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பை முறியடிக்கும் வழிகள் குறித்து, குடிமக்களுக்கும், அமைப்புக்களுக்கும் உணர்த்தப் பட்டுள்ளது. பயணிகள் விமான நிலையங்களில் சமூக தூரவிலகல் விதிமுறைகளுக்கு இணங்குவதும், ‘ஆரோக்யா சேது’ பயன்பாட்டின் நன்மைகளைப் பெறுவதும் விமானங்களின் செயல்பாடுகளை உண்மையிலேயே எளிதாக்கும்.

பல இடங்களை இணைக்கசிறப்பு ரயில்களை இயக்க அரசாங்கம் அனுமதித்ததைத் தொடர்ந்து, விமானப் போக்குவரத்து துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. லட்சக்கணக்கான மக்கள் தங்கள் இடங்களை அடைய ரயில்வே சேவைகளைப் பயன்படுத்தினர். ஜூன் 1 முதல், 200 ரயில்கள் இயக்கப்படும். மக்களின் போக்குவரத்துத் துவக்கம், மறுக்கமுடியாத அளவிற்கு நாடு இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கான அறிகுறியாகும்.

இருப்பினும்கோவிட் –19, இந்தியாவுக்குப் பெரும் சவாலாகத் தொடர்கிறது. இந்நோயினால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 1,51,767 ஐத் தொட்டுள்ளது. 64,426 நோயாளிகள் குணமடைந்துள்ளனர் என்பது ஆறுதலளிக்கிறது. ஆனால் முன்னணி வீரர்கள் உட்பட விலைமதிப்பற்ற 4337 உயிர்களை இழந்ததுவைரஸுக்கு எதிராக இந்தியா மேற்கொண்டு வரும் போரின் கடுமையை நினைவூட்டுவதாக உள்ளது. ஆயினும்கூடஇந்தியா மூன்று சதவிகித இறப்பு விகிதத்தை மட்டுமே பதிவு செய்துள்ளது என்பது உண்மையிலேயே ஆறுதலளிக்கிறது. மேலும்பெரும்பாலான நோயாளிகளுக்குத் தீவிர சிகிச்சைக்கு அவசியம் ஏற்படவில்லை என்பதும் ஆறுதலளிக்கிறது. கோவிட் –19 நோயாளிகளுக்காக தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ரயில்வே சொத்துக்கள், ஏறக்குறைய ஒரு சில நாட்களுக்குள் பயணிகள் ரயில் சேவைகளுக்காக திரும்பப் பெறப்படும் என்பது, சிக்கலான நோயாளிகளின் அளவு மிகக் குறைவு என்பதற்கு மற்றொரு சான்றாகும்.

முகக் கவசங்கள், தனிநபர் பாதுகாப்புக் கருவிகள், வென்டிலேட்டர்கள் ஆகியவற்றின் உற்பத்தியைத் தவிரசுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்த, இந்தியா ஊரடங்கு காலத்தை நன்கு பயன்படுத்திக் கொண்டுள்ளது. இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் மலிவு விலையில் வென்டிலேட்டர்களை வடிவமைத்து உற்பத்தி செய்வதற்கான பணியில் இறங்கின. இது கோவிட் –19 சிகிச்சையில் முக்கியமானதாகக் கருதப்படுகிறதுஅனைத்து மாநிலங்களிலும் கோவிட்-19 நோய்க்காக அர்ப்பணிக்கப்பட்ட மருத்துவமனைப் படுக்கைகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள் கிடைப்பது ஊரடங்கு காலத்தில் பன்மடங்கு உயர்ந்துள்ளது. அதோடுகோவிட் –19 க்கு எதிராக ஒரு தடுப்பூசியை உருவாக்கும் முயற்சியில் ஆராய்ச்சி நிறுவனங்கள் முன்னேறி வருகின்றன. நாட்டில் உள்ள சீரம் நிறுவனம் ஒரு தடுப்பூசியை உருவாக்கியதாகக் கூறப்படுகிறதுஇது தற்போது புனேவில் பரிசோதிக்கப்பட்டு வருகிறது. இதற்கு இணையான ஆராய்ச்சிகளும் நாட்டினுள் சர்வதேச ஒத்துழைப்புடன் நடைபெற்று வருகின்றன.

இரண்டு மாதங்களுக்கும் மேலாக ஊரடங்கு தொடர்ந்தது உண்மையில் பொருளாதார நடவடிக்கைகளை முடக்கிப் போட்டு, மக்களின் இன்னல்களை அதிகரித்துள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. இந்தியா இதற்கு விதிவிலக்கல்லஉலகெங்கிலும்வைரஸ் பரவுதலின் சங்கிலியை உடைப்பதற்கான முக்கிய நடவடிக்கையாக, ஊரடங்கு கருதப்படுகிறது. பொருளாதாரச் சுருக்கம் என்பது இதன் வெளிப்படையான நேர் விளைவு என்பதை அனைவரும் அறிவர். ஆயினும்கூடஇந்த சவாலை ஒரு வாய்ப்பாக மாற்றுவதற்கான தீர்மானத்தை இந்திய அரசு காட்டியுள்ளது. முதலீடுகளை ஈர்ப்பதற்காக சீர்திருத்தங்களைக் கட்டியெழுப்பஅரசாங்கம் ரூ. 20 லட்சம் கோடி பொருளாதார நிவாரணத் தொகுப்பை, அனைத்துத் துறையினரும் பயன்பெறும் வகையில் அறிவித்தது. பொருளாதார சுருக்கத்தின் பாதிப்பை ஏழைகள் தாங்கினர். நிவாரண நடவடிக்கைகளை வழங்குவதில் ஏழைகளுக்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோதி அவர்கள், உள்ளூர்த் தயாரிப்புகளைப் பற்றிக் குரல் கொடுக்குமாறு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில்ஏராளமான மக்களை வேலைக்கு அமர்த்தும் துறைகளுக்கு உதவிகளை வழங்க அரசாங்கம் முயல்கிறதுஅதே நேரத்தில் நாட்டை தன்னம்பிக்கை கொள்ளச் செய்கிறது.

மாநிலங்கள் இயல்புநிலைக்குப் பெரிய பகுதிகளைத் திறப்பதால்இந்தியா நிச்சயமாக கோவிட் –19, தொற்றுநோயை வென்றெடுக்கும் அதே நேரத்தில், பொருளாதாரத்தையும் பாதுகாக்கும்.