வேளாண்மையில் ஆத்மநிர்பர் திட்டம் – புதுமைப் படைப்புக்கு  பிரதமர் அழைப்பு.

 

( அகில இந்திய வானொலியின் செய்தி ஆய்வாளர் பதாம் சிங் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம்.)

இந்தியப் பொருளாதாரத்தின் முக்கிய அம்சமாக வேளாண் துறை விளங்குகிறது. இந்திய விவசாயிகள் இந்தியாவின் உணவைத் தேவையைப் பூர்த்தி செய்துள்ளனர். பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ், 2020 நவம்பர் வரை, 80 கோடி இந்தியர்களுக்கு இலவச ரேஷன் வழங்கப்படுவதற்கு இதுவே காரணம். பிரதமர் திரு நரேந்திர மோதி, இந்தியாவில் விவசாய ஆராய்ச்சி, விரிவாக்கம் மற்றும் கல்வியின் முன்னேற்றத்தை வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் ஆய்வு செய்தார்.

பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேளாண் துறை கையாளும் முன்னுரிமைகள், செயல்திறன் மற்றும் தயார்நிலை ஆகியவை குறித்து, இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.ஏ.ஆர்) இயக்குநர் ஜெனரலும் , வேளாண் ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கத் துறை செயலாளருமான  டாக்டர் திரிலோச்சன் மொஹாபத்ரா அவர்கள் விளக்கமளித்தார். 2014 முதல், ஐ.சி.ஏ.ஆரின் பல்வேறு மையங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியின் அடிப்படையில், புதிய வகை வயல் பயிர்கள் 1434, தோட்டக்கலை பயிர்கள் 462 மற்றும் காலநிலைகளைத் தாங்கும் வகைகள் 1121 உருவாக்கப்பட்டுள்ளன. பல அழுத்தங்களுக்கு சகிப்புத்தன்மையுள்ள வகைகளை உருவாக்க மூலக்கூறு இனப்பெருக்க நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. எச்டி 3226 கோதுமை மற்றும் தக்காளி முறையே ஏழு நோய்கள் மற்றும் நான்கு நோய்களை எதிர்க்கின்றன.

உணவுப் பதனிடல் தொழில்களின் தேவைகளுக்கு ஏற்ப, வணிக ரீதியாக, செயலாக்கம் மிக்க பண்புகளுடன் கூடிய பயிர் வகைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

வேளாண் காலநிலை மண்டலங்களின் குறிப்பிட்ட தேவைகளை மையமாகக் கொண்ட வகைகளை வளர்ப்பதற்கான முயற்சிகளை பிரதமர் பாராட்டினார். விவசாயிகளுக்கு சிறந்த வருவாயை உறுதி செய்வதற்காக முன்னோக்கிய மற்றும் பின்தங்கிய இணைப்புகளை வளர்ப்பதன் அவசியத்தை அவர் அறிவுறுத்தினார்.
கரண் -4 என்ற கரும்பு வகை, சர்க்கரை மீட்பை மேம்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் பாரம்பரியமாக வளர்க்கப்பட்ட வகைகளுக்கு மாற்னாக இது விளங்குகிறது. கரும்பு மற்றும் பிற பயிர்களிடமிருந்து பயோ எத்தனால் அதிகரிப்பதற்கான வழிகள் ஆராயப்பட வேண்டும் என்று திரு மோதி கூறினார்.

‘குபோஷ் முக்த் பாரத்’ என்ற, ஊட்டச்சத்துக் குறைபாடு இல்லாத இந்தியா திட்டத்தை மேம்படுத்தும் முயற்சியாக, மேம்பட்ட இரும்பு, துத்தநாகம் மற்றும் புரத உள்ளடக்கம் கொண்ட 70 உயிரி பலப்படுத்தப்பட்ட வகைகள் உருவாக்கப்பட்டுள்ளன. ‘போஷன் தாலி’ மற்றும் ‘நியூட்ரி தோட்டங்கள்’ , விவசாய அறிவியல் கேந்திரங்கள் மூலம் விளம்பரப்படுத்தப்படுகின்றன. மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் 76 விவசாய அறிவியல் கேந்திரங்கள் மற்றும் 450 மாதிரிப் பண்ணைகளை ஈடுபடுத்தி, பைலட் திட்டங்கள் நடத்தப்பட்டன. அங்கன்வாடி தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புறங்களைச் சேர்ந்த பெண்களுக்கு சீரான உணவை உறுதி செய்வதற்காக நியூட்ரியா தோட்டங்களை வளர்ப்பதில் பயிற்சி அளிக்கப்படுகிறது. போஷன் தாலியில் அரிசி, உள்ளூர் பருப்பு, பருவகாலப் பழம், கீரை, பச்சை காய்கறி, கிழங்குகள், பிற காய்கறிகள், பால் மற்றும் சர்க்கரை, வெல்லம் மற்றும் எண்ணெய்கள் போன்ற பிற கூறுகள் உள்ளன. 2022 க்குள் 100 நியூட்ரி ஸ்மார்ட் கிராமங்கள் உருவாக்கப்பட உள்ளன.
தொகுப்பு அடிப்படையிலான அணுகுமுறையில், கரிம மற்றும் இயற்கை விவசாய முறைகளைப் பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை பிரதமர் எடுத்துரைத்தார். ஐ.சி.ஏ.ஆர் இந்தியாவின் புவி-குறிப்பிடப்பட்ட ஆர்கானிக் கார்பன் வரைபடத்தை உருவாக்கியுள்ளது, 88 உயிர் கட்டுப்பாட்டு முகவர்கள் மற்றும் கரிம வேளாண்மையை மேம்படுத்தக்கூடிய 22 உயிர் பூச்சிக்கொல்லிகளை அடையாளம் கண்டுள்ளது.
வேளாண்மை மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் தொழில்நுட்பத்தின் கண்டுபிடிப்பு மற்றும் பயன்பாட்டை உறுதிப்படுத்த, தொடக்க மற்றும் வேளாண் நிறுவனங்களை ஊக்குவிக்க வேண்டும் என்று பிரதமர் அறிவுறுத்தினார். விவசாயிகளின் தேவை குறித்த தகவல்களை உடனுக்குடன் வழங்க தகவல் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கான அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
அடையாளம் காணப்பட்ட சிக்கல்களைத் தீர்ப்பதற்கும், பெரும்பாலான விவசாயப் பணிகளில் மகளிர் ஈடுபட்டுள்ளதை மனதில் கொண்டு, விவசாயப் பணிகளில் கடுமையைக் குறைக்கக் கூடிய கருவிகள் மற்றும் உபகரணங்களுக்கான வடிவமைப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் ஆண்டுக்கு இரண்டு முறை ‘ஹாகாதான்ஸ்’ ஏற்பாடு செய்யப்படலாம் என்று அவர் அறிவுறுத்தினார்.
நீர் பயன்பாட்டுத் திறனை அதிகரிக்கும் பொருட்டு, விழிப்புணர்வு மற்றும் விரிவாக்க நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் என்று மோடி விரும்பினார்.
இந்திய சமூகங்களின் பாரம்பரிய அறிவு, தொழில்நுட்பம் ஆகியவற்றுடன் இளைஞர்கள் மற்றும் விவசாயப் பட்டதாரிகளின் திறனை இணைத்து, கிராமப்புறங்களை மாற்றுவதில் இந்திய விவசாயத்தின் முழுத் திறனையும் பயன்படுத்த வேண்டும் என்று பிரதமர் அறிவுறுத்தினார்.
பிரதமர் திரு நரேந்திர மோதி, ‘ஆத்மநிர்பர் பாரத்’ கண்டுபிடிப்பு சவால் திட்டத்தைத் தொடங்கினார். இதன் மூலம், ஏற்கனவே மக்களால் பயன்படுத்தப்பட்டு வருவதும்,உலகத் தரம் வாய்ந்தவையாக மாறும் வாய்ப்பு பெற்றவையுமான இந்திய செயலிகளை அடையாளம் காண பிரதமர் கேட்டுக் கொண்டார். தொழில்நுட்ப சமூகத்தில் உள்ள அனைவரையும் இதில் பங்கேற்க பிரதமர் அழைப்பு விடுத்தார்.

இந்தியாவில் துடிப்பான தொழில்நுட்பம் மற்றும் புதுத் தொழில் துவக்கச் சூழல் நிலவுவது குறித்தும், இளைஞர்கள் எவ்வாறு பல துறைகளில் தொழில்நுட்பத் தீர்வுகளை வழங்குவதில் சிறந்து விளங்கினர் என்பது குறித்தும் பிரதமர் எடுத்துரைத்தார். ஸ்டார்ட்-அப் மற்றும் தொழில்நுட்ப சமூகத்தினரிடையே உள்நாட்டில் உருவாகும் செயலிகளை புதுமைப்படுத்துவதற்கும், மேம்படுத்துவதற்கும், ஊக்குவிப்பதற்கும் நிறைய உற்சாகம் உள்ளது என்று அவர் கூறினார். மேலும், ஆத்மநிர்பர் பாரத்தை உருவாக்குவதற்கு தேசம் செயல்பட்டு வருகையில், உள் நாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு, உலக அளவில் போட்டியிடக்கூடிய செயலிகளை உருவாக்குவதற்கான வழிநடத்துதலுக்கு ஒரு நல்ல வாய்ப்பு இது என்று பிரதமர் குறிப்பிட்டார்.