அமைதி கிட்டாமல் அல்லாடும் யேமன்


முனைவர் லக்ஷ்மி பிரியா ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம் சத்யா அசோகன்  ஆடன் ஆட்சி கவிழ்ப்பு சம்பவத்திற்கு பிறகு, சவுதி முன்னெடுக்கும் அமைதிக்கான பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ள யேமன் தனி பிரிவினவாத இயக்க தலைவர் விருப்பம் தெரிவித்திருப்பதன் மூலம்,  யேமன் நாடானது இந்த வாரம் நம்பிக்கை ஒளி கீற்றொன்றை காண்கிறது.  ஐக்கிய அரபு அமீரகத்தின் ஆதரவு பெற்ற யேமன் தெற்கு பிரிவினைவாத படைகள் கடும் சண்டையிட்டு அதிபர் மாளிகையை கைப்பற்றியதில், 40…

வளைகுடா நாடுகளிடையே மூக்குடைபட்ட பாகிஸ்தான்.


(ஆல் இண்டியா ரேடியோ செய்தி ஆய்வாளர் கௌஷிக் ராய் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.) வளைகுடா நாடுகளிடமிருந்து தான் எதிர்பார்த்த ஆதரவை பாகிஸ்தான் பெற இயலவில்லை. ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் அரசியலமைப்பு 370 ஆவது பிரிவை ரத்து செய்து, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதியை யூனியன் பிரதேசங்களாக அறிவித்த இந்தியாவின் நடவடிக்கைக்கு, பெரும்பாலும் வளைகுடா நாடுகள் எந்த தாக்கத்தையும் வெளிப்படுத்தவில்லை. ஸ்திரமான, முதிர்ச்சி பெற்ற…

புதிய இந்தியாவின் தொலை நோக்கைப் பிரதிபலிக்கும்  பிரதமரின் சுதந்திர தின உரை.


(மூத்த பத்திரிக்கையாளர் சங்கர் குமார் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஆ.வெங்கடேசன்.) பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் இரண்டாவது முறையாகப் பதவி ஏற்ற பின்பு ஆற்றிய முதல் சுதந்திர தின உரையானது, இந்தியாவின் 130 கோடி மக்களுக்கும் மிகவும் வலுவான அரசியல் மற்றும் சமூக செய்திகளை விளக்கும் வகையில் அமைந்திருந்தது. முதல் முறையாக இந்தியாவின் அரசியல் வரலாற்றில், பிரதமர் ஒருவர் தனது சுதந்திர தின உரையில், இந்தியாவின் மக்கள்…

இந்தியக் குடியரசுத் தலைவரின் புதிய இந்தியாவிற்கான வீர முழக்கம்.


(அரசியல் விமர்சகர் பேராசிரியர். ஷிவாஜி சர்கார் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஸ்ரீப்ரியா சம்பத்குமார்.) இந்தியத் திருநாட்டின் மாண்புமிகு குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த அவர்கள், 73-ஆவது சுதந்திர தினத்திற்கு முந்தைய இரவு, நாட்டு மக்களுக்கான தன் உரையை ஆற்றினார். “ஒரு முக்கியமான தருணத்தில், நாம், சுதந்திரம் பெற்று 72 ஆண்டுகளின் நிறைவைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இன்னும் சில வாரங்களில், அக்டோபர் 2 ஆம் தேதி, தேசத்…

இந்திய வெளியுறவு அமைச்சரின் சீனப் பயணம்


 (சீன விவகாரங்களுக்கான செயலுத்தி ஆய்வாளர், டாக்டர் ரூபா நாராயண் தாஸ் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஆ.வெங்கடேசன்.) இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் அவர்கள், தமது பதவியேற்புக்குப் பிறகு, முதல் பயணமாக, முக்கியத்துவம் வாய்ந்த சீனப் பயணம் மேற்கொண்டார். கலாச்சாரம் மற்றும் மக்களுக்கிடையிலான தொடர்புகள் குறித்த உயர்மட்ட பரிமாற்ற வழிமுறைக் கூட்டத்தில் அவர் பங்கேற்றார். வூஹானில் நடைபெற்ற முறைசாரா சந்திப்பைப் போன்றதொரு சந்திப்பை, இந்த வருடத்தின் பிற்பகுதியில்,…

உலக அரங்கில் தனிமைப்படுத்தப்படும் பாகிஸ்தான்.


(ஆல் இண்டியா ரேடியோ செய்தி ஆய்வாளர் கௌஷிக் ராய் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஸ்ரீபிரியா சம்பத்குமார்.) காஷ்மீர் விவகாரத்தை சர்வதேசமயமாக்குவதற்கு பாகிஸ்தான் எடுத்த முயற்சிகள் தோல்வியைக் கண்டுள்ளன. இந்தப் பிரச்சனைக் குறித்து, மற்ற நாடுகளின் ஆதரவை சேகரிக்க பாகிஸ்தான் எடுத்த திடீர் முடிவிற்கு, அதன் மிக நெருங்கிய நட்பு நாடுகளான சீனாவும் சௌதி அரேபியாவும் கூட பெரிய அளவில் உதவவில்லை. இந்த விஷயத்தில், அவ்விரு நாடுகளும் தாங்கள்…

“ இந்திய பொருளாதாரத்தை 5 லட்சம் கோடி டாலர் அளவிற்கு உயர்த்துவதில் உட்கட்டமைப்பின் பங்கு “


மூத்த பொருளாதார பத்திரிக்கையாளர் ஜி. சீனிவாசன் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் ஆ. வெங்கடேசன். அடுத்த ஐந்து வருடங்களில் இந்திய பொருளாதாரத்தை 5 லட்சம் கோடி டாலர் அளவிற்கு உயர்த்துவது மற்றும் அதைத் தொடர்ந்து அடுத்த எட்டு வருடங்களில் 10 லட்சம் கோடி டாலர் அளவிற்கு உயர்த்துவதற்காக இந்தியா தன்னைத்தானே தயார்படுத்திக் கொண்டுள்ளது. இந்த இலட்சிய இலக்கை அடைவதற்கு உட்கட்டமைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது என்றால் அது மிகையல்ல. தற்போது…

அமெரிக்க – தாலிபன் பேச்சு வார்த்தை


  தெற்காசியா குறித்த செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் ஸ்ம்ருதி பட்நாயக் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் பி ராமமூர்த்தி குறிப்பிட்ட காலத்திற்குள் அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து திரும்பப் பெறப்படும் என்ற அமைதி ஒப்பந்தத்துடன் அமெரிக்க- தாலிபான் எட்டாவது சுற்று பேச்சுவார்த்தை தோஹா நகரில் முடிவுக்கு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அல் கய்தா, இஸ்லாமியத் தீவிரவாதக் குழுக்களுக்கு தாலிபான் அமைப்பினர் ஆதரவு அளிக்க மாட்டார்கள் என்றும் ஆப்கானிஸ்தான் அரசுடன்…

இந்தியப் பாதுகாப்புப்படை நவீனமயமாக்கல்.


(பாதுகாப்பு விவகாரங்கள் ஆய்வாளர் உத்தம் குமார் பிஸ்வாஸ் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.) இந்தியாவின் எல்லைப் பகுதிகளில் கடந்த பத்தாண்டுகளாக, அயல்நாட்டு ஆதரவுடன் நடந்தேறும் பயங்கரவாதச் செயல்கள் தொடர்ந்து வரும் நிலையில், இந்தியப் பாதுகாப்புப்படையின் செயல்திறனை விரிவாக்க வேண்டியது அவசரத் தேவையாகும். நாட்டு மக்களின் சமூக, பொருளாதார மேம்பாட்டில் கவனம் செலுத்த வேண்டியிருப்பதால், இது அவ்வளவு எளிதான விஷயமல்ல என்பது கண்கூடு. எனினும், நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி, …

ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கிற்கான வளர்ச்சிப்பாதையை தொடக்கி வைத்தார் பிரதமர் மோதி


ஆல் இந்தியா ரேடியோவின் செய்தி ஆய்வாளர் பதம் சிங் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம். தமிழில் ஸ்ரீபிரியா சம்பத்குமார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் வியாழனன்று நாட்டு மக்களுக்கு அளித்த உரையில், அரசியலமைப்பின் 370-வது சட்டப்பிரிவை நீக்கியதற்கான காரணங்களை விவரித்தார். இந்தப் பிரிவின் கீழ், முன்பு ஜம்மு-காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டு இருந்தது. இந்த வாரம் நாடாளுமன்றத்தில் இரு அவைகளும் இந்தப் பிரிவை நீக்குவதற்கான மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்தனர்.…