கருத்துரை

வெட்டவெளிச்சமாகும் பாகிஸ்தானின் பயங்கரவாதம் குறித்த இரட்டை வேடம்.


(அரசியல் விமரிசகர் ரத்தன் சால்டி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.) பாகிஸ்தான் தனது நாட்டிலிருந்து செயல்படும் பயங்கரவாதக் குழுக்களைக் கையாளும் விதத்தில் காட்டும் இரட்டைநிலை அனைவரும் அறிந்ததே. எனினும், பாரீஸில் நடைபெற்ற பயங்கரவாதத் நிதித்தடுப்பு செயல்குழுவான எஃப்ஏடிஎஃப் இன் முக்கியக் கூட்டத்தில், மசூத் அஸரைப் பற்றிய அப்பட்டமான பொய்யை மீண்டும் கட்டவிழ்த்து, தனது உண்மையான முகத்தை வெளிக்காட்டி விட்டது பாகிஸ்தான். மசூத் அஸர் பாகிஸ்தானில் அதிகாரபூர்வமான பாதுகாப்பில்…

ஆஃப்கானிஸ்தானில் தொடரும் நிச்சயமற்ற தன்மை.


(மூத்த பத்திரிகையாளர் ரஞ்சித்குமார்  அவர்கள்  ஆங்கிலத்தில்  எழுதிய  கட்டுரையின் தமிழாக்கம் – மாலதி தமிழ்ச்செல்வன்.) மார்ச் மாத முற்பகுதியில் ஆப்கானிஸ்தான் முக்கியமான முன்னேற்றங்களைக் கண்ணுற்றது.  யுத்தத்தால்  பாதிக்கப்பட்ட  நாட்டில் அனைத்துத் தரப்பினரும் ஆர்வத்துடன் எதிர்பார்த்த அமைதியை மீட்டெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, ஆப்கானில் உள்நாட்டுப் பேச்சுவார்த்தைகள் நடத்துவதை சுலபமாக்குவதற்காக, பிப்ரவரி 29 ஆம் நாளன்று அமெரிக்கா மற்றும் தாலிபான்கள் இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது.  அமைதியை விரும்பும் ஆப்கான் நாட்டு…

இந்திய வெளியுறவுக் கொள்கை


ஆகாஷவாணியின் செய்தி ஆய்வாளர் கௌஷிக் ராய் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் பி ராமமூர்த்தி   நரேந்திரமோதி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தொழில் துறையை முன்னெடுத்துச் செல்வதை நோக்கமாக கொண்டுவெளியுறவுக் கொள்கையை கட்டமைத்து வருகிறது. குறைந்த வட்டியில் வெளிநாடுகளுக்கு கடன் வழங்குவதை ஒரு அங்கமாக இந்திய அரசு ஏற்படுத்தியுள்ளது. வெளிநாடுகளில் நிறைவேற்றப்படும் வளர்ச்சித் திட்டங்களின் பயனாக இந்திய தொழில் துறை வளர்ச்சி கண்டு வருவதாக வெளியுறவுத் துறாஇ அமைச்சர்…

சிபிஈசி திட்டம் – பாகிஸ்தானின் கடன் சுமை.


(அரசியல் விமரிசகர் எம்.கே.டிக்கு அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஆ.வெங்கடேசன்) சிபிஈசி எனப்படும் சீனா பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத் திட்டம் நிறைவு பெறுமேயானால், அது சீனாவிற்கு  மட்டுமே ஒரு வெற்றி ஒப்பந்தமாக அமையும் என்பதில் எந்த ஐயமுமில்லை.. மிக முக்கியமாக, 6,200 கோடி டாலர் அளவிலான  இந்தத் திட்டத்தின் மூலம், வளைகுடா நாடுகள் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் புகுவது, சீனாவுக்கு எளிதாகும். ஏனெனில், நிலப்பரப்பினால் சூழப்பட்ட சீனாவின் ஸின்ஜியாங்…

நாடாளுமன்றத்தில் கடந்த வாரம்


 பத்திரிக்கையாளர் திரு யோகேஷ் சூத் ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம் சத்யா அசோகன்   பட்ஜெட் கூட்டதொடரின் இரண்டாவது அமர்வு  மார்ச் 2 ஆம் தேதி துவங்கியது; ஏப்ரல் 3ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.  அனைத்து எதிர்கட்சிகளும் நாட்டின் பொருளாதார நிலை மற்றும் விவசாய ப்ரச்னைகள் குறித்து தேசிய ஜன நாயக கூட்டணி அரசை திணற வைக்க முயற்சிக்கலாம் எனும் நிலைமையில்,  ஆளும் கட்சி, உண்மை நிலவரம் மற்றும் புள்ளி…

இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தல் – ஆட்சி அமைப்பதில் தொடரும் தேக்கநிலை.


(ஜேஎன்யூ பேராசிரியர் குமாரசாமி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.) நெஸ்ஸெட் எனப்படும் இஸ்ரேல் நாடாளுமன்றத்தின் 23 ஆவது சபைக்கான தேர்தல் இம்மாதம் 2 ஆம் தேதி நடைபெற்றது. ஓராண்டிற்குள் மூன்றாவது முறையாக நடைபெறும் இத்தேர்தலிலாவது, அரசு அமைப்பதற்கான உறுதியான முடிவு எட்டப்படும் என்ற இஸ்ரேல் மக்களின் எதிர்பார்ப்பு பொய்த்துப் போனது. 120 உறுப்பினர்களைக் கொண்ட நெஸ்ஸெட்டில், குறைந்த பட்சம் 61 இடங்களைப் பெற வேண்டிய நிலையில், அந்த…

துருக்கியின் ஐரோப்பிய எல்லை திறப்பு – சிரிய அகதிகள் நெருக்கடி அதிகரிப்பு.


(ரஷ்யா, சிஐஎஸ் மற்றும் துருக்கி நாட்டு விவகாரங்கள் செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் இந்திராணி தலுக்தார் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஆ.வெங்கடேசன்.) 2015 ஆம் வருடம் ஏற்பட்ட புலம்பெயர்ந்தல் பிரச்சினைகளின் போது ஏற்பட்ட பல உயிரிழப்புக்கள் மற்றும் அப்போது ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் போன்ற நினைவுகள், தற்பொழுது துருக்கி நாட்டின் செயல்களால் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு மீண்டும் ஏற்பட்டுள்ளது. போன வாரம் துருக்கி, ஐரோப்பாவை…

அமெரிக்கா – ஆப்கானிஸ்தான் அமைதி ஒப்பந்தம் தருவது நம்பிக்கையையா அல்லது அச்சத்தையா?


(ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் விவகாரங்கள் குறித்த மூலோபாய ஆய்வாளர் டாக்டர் ஸ்மிதா அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய உரையின் தமிழாக்கம் – நித்யா வெங்கடேஷ்.) ஆப்கானிஸ்தானில் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் கொண்டு வருவதற்காக அமெரிக்காவும் தாலிபானும் சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இரண்டே நாட்களில், ஆப்கானிஸ்தான் தேசிய பாதுகாப்புப் படைகளுக்கு (ANDSF) எதிரான தனது ராணுவ நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதாக தாலிபான் அறிவித்துள்ளது. ஒன்பது சுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, கத்தார் நாட்டின் தோஹாவில், அமெரிக்க…

இந்திய, பங்களாதேஷ் இருதரப்பு உறவுகளுக்கு வலு சேர்ப்பு.


(தெற்காசிய விவகாரங்கள் செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் ஸ்மிரிதி எஸ் பட்நாயக் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஆ. வெங்கடேசன்.) இந்திய வெளியுறவுச் செயலர் ஹர்ஷ் வர்தன்  ஷ்ரிங்லா அவர்கள், டாக்காவிற்குப் பயணம் மேற்கொண்டார். இதன் மூலம், பங்களாதேஷ் நாட்டுடனான இந்தியாவின்  நீடித்த நெருக்கமான உறவுகள் வெளிப்படுகின்றன. இந்த இரு தரப்பு உறவுகள், குறிப்பாக, தற்பொழுது அவாமி கட்சியைச் சார்ந்த பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா அவர்களின் தலைமையில், மேலும்…

மியன்மாருடனான உறவுகளை வலுவாக்கும் இந்தியா.


(கிழக்கு, தென்கிழக்கு ஆசிய விவகாரங்கள் செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் தித்லி பாசு அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.) மியன்மார் குடியரசு நாட்டின் அதிபர் யூ வின் மிண்ட் அவர்கள், இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். இந்தியாவின் கிழக்கு நோக்கிய செயல்பாடு மற்றும் அண்டைநாடுகளுக்கு முதலிடம் ஆகிய அயல்நாட்டுக் கொள்கைகளுக்கு முக்கிய அச்சாரமாக மியன்மார் விளங்குகிறது. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் விரிவான பொருளாதார மற்றும் செயலுத்தி ரீதியிலான பிணைப்புக்களை…