ஆகாஷ்வானி உலக சேவை – Page 25 – பிளாக்

கருத்துரை

இந்தியாவில் ஜனநாயகத் திருவிழா துவக்கம்.


(அரசியல் விமர்சகர் சுனில் கடாடே அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஆ.வெங்கடேசன்.) உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயகப் பயிற்சி , இந்தியாவில் நடைபெற்று வருகிறது. 100 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்டுள்ள நாட்டில், நேற்று பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு துவங்கி உள்ளது. 18 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 91 லோக்சபா தொகுதிகளில் வியாழக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது.ஆங்காங்கே மிகச்சிறிய வன்முறைகள் ஏற்பட்டாலும், மொத்தத்தில் மிக அமைதியான…

இலங்கையுடனான பாதுகாப்புக் கூட்டுறவை மேம்படுத்தியது இந்தியா.


(இலங்கைக்கான செயலுத்தி ஆய்வாளர்  டாக்டர் எம். சமந்தா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஸ்ரீபிரியா சம்பத்குமார்.) இந்திய பாதுகாப்புச் செயலர் திரு. சஞ்சய் மித்ரா, இரண்டு நாட்களுக்கான அரசுமுறைப் பயணமாக இலங்கை சென்றார். இந்தப் பயணத்தின் போது அவர், இலங்கை அதிபர் திரு. மைத்ரிபாலா சிரிசேனா, இலங்கை பாதுகாப்புச் செயலர் திரு. ஹேமஸ்ரீ ஃபெர்னாண்டோ மற்றும் ராணுவப் படைத் தலைவர் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னே ஆகியோரை சந்தித்தார். இப்பயணத்தில்,…

மாலத்தீவுகளில் மூன்றாவது பல்கட்சி நாடாளுமன்றத் தேர்தல்.


(ஆய்வாளர் குல்பின் சுல்தானா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் –பி,குருமூர்த்தி) மாலத்தீவுகளில் அதிபர் தேர்தல் நடைபெற்ற ஆறு மாதங்களுக்குப் பிறகு, கடந்த சனியன்று, பல கட்சிகள் பங்கேற்ற மூன்றாவது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 87 இடங்களில், 67 இடங்களைக் கைப்பற்றி, மாலத்தீவுகளின் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மை பெற்றது. மாலே, அட்டு மற்றும் ஃபுவாமூலா ஆகிய நகரங்களில் அக்கட்சி பெரும்பான்மை பெற்றது. 2008 ஆம் ஆண்டு முதல் ஜனநாயக முறையில்…

உலகெங்கும் கடும் பட்டினியால் பத்து கோடி பேர் அவதி


    மூத்த பத்திரிக்கையாளர் கே.வி.வெங்கடசுப்ரமணியன் ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம் சத்யா அசோகன்   உணவு பாதுகாப்பின்மை என்பது இன்னமும் உலகளாவிய சவாலாகத்தான் இருந்து வருகிறது.  அதிகரித்து வரும் ஜனத்தொகை,  ஏறிக்கொண்டிருக்கும் வருமானம்,  மாறிக்கொண்டிருக்கும் உணவுப் பழக்கங்கள், குறைந்து கொண்டிருக்கும் நீர் ஆதாரங்கள், உணவில்லாமல் கழியும் அதிக நாட்கள்,  குறையும் நீர்ப்பாசனம், அதிகரித்துக் கொண்டிருக்கும் மண் அரிப்பு,  பருவநிலை மாற்றம் மற்றும் உருகிகொண்டிருக்கும் பனிப்பாறைகளின் நீர் இருப்பு என இவை…

வளர்ச்சியை ஊக்கப்படுத்தும் ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கை


(மூத்த பொருளாதார பத்திரிக்கையாளர் ஜி.ஸ்ரீநிவாசன் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஸ்ரீபிரியா சம்பத்குமார்.) இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வெளியிடப்படும் இந்திய ரிசர்வ் வங்கியின், நடப்பு நிதியாண்டுக்கான முதல் பணவியல் கொள்கை, வட்டி விகிதம் குறைக்கப்படும் என, பெருமளவில் இருந்த எதிர்பார்ப்பை நிரைவேற்றியுள்ளது. இதனால் இந்திய பொருளாதாரத்தின் பல துறைகளிலும் புத்துணர்ச்சி பிறந்துள்ளது. சில்லறை வியாபாரங்களில் பணவீக்கம் குறைவாக இருந்ததும், அனைத்து உற்பத்தித் துறைகளுக்கும் மலிவு விலையில் போதுமான…

ஆக்கபூர்வமான நல்லுறவுகளுக்கு இந்தியாவும், ரஷ்யாவும் மீண்டும் உறுதி.


(ரஷ்யாவுக்கான செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் இந்திராணி தலுக்தார் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி) இந்திய வெளியுறவுச் செயலர் விஜய் கோகலே அவர்கள், ரஷ்யாவுக்கு இருநாள் பயணம் மேற்கொண்டார். அங்கு அவர், ரஷ்ய வெளியுறவுத் துணை அமைச்சர் இகோர் மார்குலோவ், துணை அமைச்சர் செர்ஜி ரையப்கோவ், துணைப் பிரதமரும், ரஷியாவின் தூர கிழக்குப் பகுதி அதிபரின் பிரதிநிதியுமான யூரி ட்ரூட்னேவ் ஆகியோரைச் சந்தித்து பயனுள்ள பேச்சு நடத்தினார். ரஷிய…

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களின், பொலீவியா மற்றும் சிலி நாட்டுப் பயணம்.


(சமூக அறிவியல்துறை இயக்குனர் டாக்டர் ஏஷ்நாரயண் ராய் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஆ. வெங்கடேசன்.) இந்தியாவிற்கும் லத்தீன் அமெரிக்காவிற்கும் அதிக ஒற்றுமை உள்ளன. உலகின் பார்வை தற்போது இந்தியாவின் மீது விழுவதற்கு, இந்தியா உலக அளவில் முக்கிய சக்தியாக வளர்ந்து வருவதே காரணமாகும். இந்தியாவும், லத்தீன் அமெரிக்காவும் ஒரு முதிர்ந்த கூட்டாளித்துவத்தை நோக்கி மெதுவாக நகர்ந்து வருகின்றன. பல்லாண்டுகளாக, புறக்கணிப்பு மற்றும் குறுகிய ஈடுபாட்டில் இருந்த லத்தீன்…

எமிசாட் செலுத்தலில் வெற்றி – சாதனைகள் பல படைக்கும் இந்தியா.


(மூத்த அறிவியல் விமர்சகர் பீமன் பாசு அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் –  ஸ்ரீபிரியா சம்பத்குமார்.) இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, திங்களன்று, எமிசாட் செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இதன் மூலம், பல விதங்களில், இந்திய விண்வெளி மையம் மைல்கல் சாதனை படைத்துள்ளது. இந்த வெற்றிகரமான செலுத்தலின் மூலம், இஸ்ரோ, பல முதன்முறை சாதனைகளைப் படைத்துள்ளது. இதில், பல சுற்று வட்டப் பாதைகளில் செயற்கைக்கோள்கள் நிலை நிறுத்தப்பட்டதோடு,…

முதல் கட்ட மக்களவை தேர்தலுக்கு வாக்களிக்க தயாராகும் இந்தியா


தி  நியூ இந்தியன் எக்ஸ்ப்ரஸ் பத்திரிக்கையின் மூத்த சிறப்பு நிருபர் மனிஷ் ஆனந்த் ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம் சத்யா அசோகன்   உலகின் மிகப் பெரிய ஜன நாயகம் ஏப்ரல் 11-ஆம் தேதி துவங்கவிருக்கும் தேர்தல்களை சந்திக்க தயாராகி கொண்டிருக்கிறது.  ஏப்ரல்-மே இரு மாதங்களிலும் இரு வாரங்களுக்குள் ஏழு கட்டங்களாக நடக்கவிருக்கும் தேர்தல்களில் இந்தியாவின் 90 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள்  வாக்களிக்க உள்ளனர்.  முதல் கட்டத்தில், 20 மாநிலங்கள் மற்றும் யூனியன்…

நிதி செயல்பாட்டுக் குழு பாகிஸ்தான் பயணம்.


(செய்தி ஆய்வாளர் கௌஷிக் ராய் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி) பாரீஸைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நிதி செயல்பாட்டுக் குழுவின் ஓர் அங்கமான, பண மோசடி கண்காணிப்புக்கான ஆசிய பஸிஃபிக் குழு, அண்மையில் பாகிஸ்தானுக்குப் பயணம் மேற்கொண்டது. நிதிக் குற்றங்களைத் தடுக்க, சர்வதேசத் தர இலக்குகளை எட்டுவதில் பாகிஸ்தான் எந்த அளவுக்கு முன்னேற்றம் கண்டுள்ளது என்று ஆய்வு செய்து, அதனடிப்படையில், ஏற்கனவே நிதி செயல்பாட்டுக் குழு பாகிஸ்தானை,…