கருத்துரை

ஏறுமுகத்தில் இந்தியா – வியட்னாம் உறவுகள்.


(நாடாளுமன்ற ஆய்வாளர் ராஜாராம் பாண்டா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஸ்ரீப்ரியா சம்பத்குமார்.) இந்திய குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய்யா நாயுடு அவர்கள், வியட்னாமிற்கு நான்கு நாட்களுக்கான அரசியல் பயணத்தை மேற்கொண்டார். வியட்னாமுடனான விரிவான செயலுத்திக் கூட்டாளித்துவத்தை மேம்படுத்துவது இந்தப் பயணத்தின் முக்கிய இலக்காகும். இந்தியா-வியட்னாம் உறவு காலத்தின் சோதனைகளைக் கடந்து வந்த உறவு என்பது அனைவரும் அறிந்த விஷயமாகும். வியட்னாமின் உயர் அரசியல் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தியதோடு,…

அமெரிக்கா – ஈரான் இரு தரப்பு உறவுகள்


  ஈரான் குறித்த செயலுத்தி விவகாரங்கள் ஆய்வாளர் டாக்டர் ஆசிஃப் ஷுஜா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் பி ராம மூர்த்தி ஒருங்கிணைந்த செயல் திட்டக் குழுவின் உறுதிமொழிகளை ஈரான் அரசு படிப்படியாகக் குறைத்துக் கொள்ளும் என ஈரான் அதிபர் ஹசன் ரௌஹானி அறிவித்துள்ளார். ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து வெளியேறிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், மத்திய கிழக்குப் பகுதிகளில் தனது படை பலத்தை அதிகரித்துள்ள நிலையில், ஈரான் அரசு…

ஐபிஎஸ்ஏ குழுவுக்குப் புத்துயிர்.


(உலகக் கல்வி நிறுவனத்தின் தலைவரும், முன்னாள் ராஜீய அதிகாரியுமான அஷோக் சஜ்ஜனார் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஆ.வெங்கடேசன்.) இந்தியா, பிரேசில் மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய குழுவான ஐபிஎஸ்ஏ யின் பிரதிநிதிகள் சந்திப்பு கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்றது. 2018 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐ.நா பாதுகாப்பு சபை அமர்வுக்கிடையே, ஒன்பதாவது ஐபிஎஸ்ஏ முத்தரப்பு அமைச்சர்கள் குழு சந்திப்பு…

தத்தா தர்பார் தற்கொலைத் தாக்குதல்.


(பாகிஸ்தான் விவகாரங்களுக்கான ஆய்வாளர் டாக்டர் ஸாய்னாப் அக்தர் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஸ்ரீப்ரியா சம்பத்குமார்.) பாகிஸ்தானின் லாஹூரில், புகழ்பெற்ற சுஃபி மசூதி தத்தா தர்பாரில் கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டது. ரமலானின் புனித மாதத்தின் இரண்டாவது நாள் நடந்த இந்தத் தாக்குதலில், பத்து பேர்  கொல்லப்பட்டனர். 25-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பாகிஸ்தான் இன்னும் புகலிடம் அளித்துவரும் பயங்கரவாத இயக்கங்கள் இப்போது அந்த நாட்டிலேயே தங்கள் வேலையை செய்யத் துவங்கி…

இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே வர்த்தக விவகாரங்களில் இறுக்கம்.


(தேசிய பொதுநிதி மற்றும் கொள்கை நிறுவனத்தின் இணைப் பேராசிரியர் டாக்டர் லேகா சக்கரவத்தி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் –ஸ்ரீப்ரியா சம்பத்குமார்.) அமெரிக்க வர்த்தகச் செயலர் வில்பர் ராஸ், உலக நாடுகளில், மிக அதிக கட்டண முறைகளைக் கொண்ட நாடு இந்தியா என சமீபத்தில் கூறியுள்ளார். அமெரிக்காவின் மிகப் பெரிய வருடாந்தர வர்த்தக நிகழ்வான ‘அமெரிக்க டிரேட் விண்ட்ஸ் இந்தோ-பசிஃபிக் வர்த்தக மன்றம் மற்றும் பணித்திட்ட முயற்சி’-ன் 11 ஆவது…

தாலிபானுடன் பேச்சுவார்த்தை – அமெரிக்கா மறுபரிசீலனை செய்வது அவசியம்


(அரசியல் விமர்சகர் கௌல் ஜலாலி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஸ்ரீப்ரியா சம்பத்குமார்.) பயங்கரவாதத்தை வேரோடு ஒழிக்க வேண்டும் என்ற உறுதியிலிருந்து அமெரிக்கா திசை மாறிவிட்டது. கடந்த ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து அமெரிக்கா, தாலிபானுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தப் பேச்சுவார்த்தைகளின் ஆறாவது சுற்று, சென்ற வாரம், கத்தாரின் தலைநகர் தோஹாவில் தொடங்கி இன்னும் நடந்துகொண்டிருக்கின்றது. இந்தப் பேச்சுவார்த்தைகளுக்கு இது வரை எந்தப் பயனும் கிடைக்கவில்லை. பேச்சுவார்த்தைகளில், ஆஃப்கானிஸ்தானிலிருந்து…

கச்சா எண்ணெய் விலை உயர்வை சமாளிக்க தயார்நிலையில் இந்தியா.


(மூத்த பொருளாதார பத்திரிக்கையாளர் ஜி.ஸ்ரீனிவாசன் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஸ்ரீப்ரியா சம்பத்குமார்.) ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய, தான் விதித்த தடையிலிருந்து, அமெரிக்கா, இந்தியா உட்பட ஏழு நாடுகளுக்கு விலக்கு அளித்திருந்தது.  அந்த விதிவிலக்குக்கு அளிக்கப்பட்ட காலக்கெடு முடிந்துவிட்ட நிலையில், இந்தியாவிலோ, எண்ணெய்ச் சந்தையிலோ தாக்கங்கள் மிதமாகவே இருக்கின்றன. எனினும், தடைகளால் பாதிக்கப்பட்ட ஈரானில் ஏற்பட்ட உற்பத்தி நஷ்டங்களாலும், உலக எண்ணெய் சந்தையில், வெனிசுவேலா தனது…

பதட்டங்களுக்கிடையே ஆஃப்கான் – பாகிஸ்தான் பேச்சுவார்த்தை.


(ஆல் இண்டியா ரேடியோ செய்தி ஆய்வாளர் பதாம் சிங் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஆ.வெங்கடேசன்.) ஆப்கானிஸ்தானும், பாகிஸ்தானும், தங்கள் புவிநிலை சார்ந்த அனுகூலங்களைப் பயன்படுத்திக் கொள்வது என்று முடிவு செய்தன. இதற்கான முயற்சிகள் மூலம், பிராந்தியத் தொடர்புகள் விரிவாக்கம், சமூக, பொருளாதார முன்னேற்றம், வறுமை ஒழிப்பு மற்றும் மக்களின் நலன்கள் ஆகியவற்றில் வளர்ச்சி ஏற்பட உறுதி பூண்டன. ஆப்கான் அதிபர் அஷ்ரப் கனி அவர்கள், அரிய நிகழ்வாக,…

ஆசிய ஒத்துழைப்பு பேச்சுவார்த்தை – அமைதி மற்றும் வளத்தை நோக்கி கூட்டாளித்துவ ஊக்குவிப்பு


மேற்காசியாவிற்கான செயலுத்தி ஆய்வாளர் முனைவர் மொஹம்மத் முடாஸ்ஸிர் க்வாமர் ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம் சத்யா அசோகன் 16வது ஆசிய ஒத்துழைப்பு பேச்சுவார்த்தை அமைச்சர்கள் கூட்டம் இந்த வாரம் தோஹாவில்  நடந்தது.  ஆசிய கண்ட நாடுகளிடையே ஒத்துழைப்பு முயற்சியானது 2002 ஆம் ஆண்டு ஆசிய நாடுகளுக்கிடையே இணை சார்பு தன்மையை ஊக்குவிப்பதற்காக 18 நாடுகள் இணைந்து எடுத்த முயற்சியின் விளைவால் உருவான அமைப்பு இதுவாகும்.   ஒவ்வொரு ஆசிய நாட்டையும்  நட்பு நாடாக…

சீனாவின் வளையம் மற்றும் சாலை மன்றக் கூட்டத்துக்கு ஆசிய நாடுகளின் பதிலுணர்வு.


(அரசியல் விமர்சகர் ரத்தன் சால்டி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.ராமமூர்த்தி) அண்மையில் சீனாவில் நடந்த இரண்டாவது வளையம் மற்றும் சாலை மன்றக் கூட்டத்தின் முடிவில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அதில், பரஸ்பர நலனுக்காக இணைப்புக்கள் மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்தி, ஒட்டுமொத்த பொருளாதார, சமூக வளர்ச்சிக்கு வித்திட வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டது. சீன அதிபர் ஸீ ஜின்பிங் அவர்கள் தலைமை வகித்த மன்றத்தின் வட்டமேஜை மாநாட்டில் 37 நாடுகளின் தலைவர்கள்,…