கருத்துரை

நாடாளுமன்றத்தில்  சென்ற வாரம் நடந்தவை


பத்திரிக்கையாளர்    வி.மோஹன் ராவ் ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம் சத்யா அசோகன் பொருளாதார ரீதியாக நலிந்த முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில்  நிறைவேற்றப்பட்டதுடன் 16வது மக்களவையின் இறுதி கூட்டத்தொடருக்கு முந்தைய கூட்டத்தொடரில் நிறைவடைந்தது.  அரசு நிறுவன உயர்கல்வி மற்றும் அரசு வேலை வாய்பில் பொருளாதார ரீதியாக நலிந்த பொதுப்பிரிவினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வழி செய்வதற்காக அரசியல் சாசன சட்டத்தை திருத்துவதற்கான மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. அரசியல் சாசன 124வது சட்ட…

தெரஸா மே அவர்களின் அரசுக்கு பிரக்ஸிட் விடுக்கும் சவால்.


(ஐரோப்பிய விவகாரங்களுக்கான செயலுத்தி ஆய்வாளர் தினோஜ் குமார் உபாத்யாய் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி) பிரிட்டன் பிரதமர் தெரஸா மே அவர்களுக்கு, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அமைப்பிலிருந்து பிரிட்டன் விலகுவதற்கான ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் எனப்படும் நாடாளுமன்ற மேலவை  ஒப்புதல் பெறுவதில் பெரும் சிக்கல் எழுந்துள்ளது போல் தோன்றுகிறது. ஒருவேளை இதற்கான ஒப்புதல் கிடைக்காத பட்சத்தில், அரசுக்கு வரியை உயர்த்தும் அதிகாரத்தைக் குறைக்கும் நிதி திருத்த மசோதா,…

நான்காவது ராய்சினா பேச்சுவார்த்தைகள்.


(நவோதயா டைம்ஸ் பத்திரிக்கையின் ராஜீய விவகாரங்கள் ஆசிரியர் ரஞ்சித் குமார் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஸ்ரீப்ரியா சம்பத்குமார்). நான்காவது ராய்சினா பேச்சுவார்த்தைகள் புது தில்லியில் நடந்து முடிந்தன. முன்னணி சர்வதேச கொள்கை அமைப்பாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் செயலுத்தி நிபுணர்கள் இதில் கலந்து கொண்டனர். இந்தப் பேச்சுவார்த்தைகளின் துவக்க நிகழ்வில், பிரதமர் நரேந்திர மோதி அவர்களும் நார்வே பிரதமர் திருமதி எர்னா சோல்பர்க் அவர்களும் ஆர்வத்துடன் கலந்துகொண்டது, அடுத்த…

இந்தியா, நார்வே உறவுகள்.


(ஜே என் யூ பேராசிரியர் உம்மு சல்மா பாவா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி) நார்வே பிரதமர் எர்னா ஸோல்பர்க் அவர்கள் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டார். இந்தியா சுதந்திரம் பெற்றவுடன் உடனடியாக அங்கீகாரம் செய்த உலக நாடுகளுள் நார்வேயும் ஒன்று என்பது குறிப்பிடத் தக்கது. நீடித்த சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், புதுப்பிக்கத்தக்க எரியாற்றல் உள்ளிட்ட பசுமை அம்சங்களை உள்ளடக்கி மேம்படுத்தப்பட்ட நார்வே தூதரகத்தை அவர்…

நிதியுதவிக்குக் கையேந்தும் வரலாறு – பாகிஸ்தானின் பொருளாதார வளர்ச்சியின் ஓர் அங்கம்.


(ஆல் இண்டியா ரேடியோ செய்தி ஆய்வாளர் கௌஷிக் ராய் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஆ.வெங்கடேசன்.) பாகிஸ்தானின் பொருளாதார சிக்கல்கள் தொடர்கின்றன. சர்வதேச பண நிதியத்தில் (IMF ) இருந்து  நிதியுதவி பெறுவது பாகிஸ்தானுக்குக் கடினமாக உள்ளதால், அந்நாட்டிற்குப் பொருளாதார நெருக்கடி நீடிக்கிறது. இந்தப் பிரச்சினையை சமாளிக்க சமீபத்தில் பாகிஸ்தான் சவுதி அரேபியாவிடம் இருந்து 200 கோடி டாலர் உதவியைப் பெற்றுள்ளது. சீனாவும் உதவித்தொகை வழங்குவதாக அறிவித்துள்ளது ஆனால்…

அறிவியலில் புதிய எல்லைகளை ஆராயும் இந்திய அறிவியல் காங்கிரஸ்


(மூத்த அறிவியல் விமர்சகர் என். பத்ரன் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஸ்ரீபிரியா சம்பத்குமார்) இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து, அறிவியல், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் சிறந்த நிபுணத்துவம் படைத்தவர்கள் கலந்துகொள்ளும் வருடாந்திர நிகழ்வான இந்திய அறிவியல் காங்கிரசின் 106-ஆவது சந்திப்பு பஞ்சாபின் ஜலந்தரில் நிறைவு பெற்றது. இந்தியாவில் அறிவியலையும் அது சார்ந்தத் துறைகளையும் ஊக்குவிப்பதே இந்த மிகப்பெரிய வருடாந்திர நிகழ்ச்சியின் நோக்கமாகும். அறிவியலின் மூன்று முக்கிய பங்குதாரர்களான அறிவியல்…

அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்குப் பதிலடியாக, சீன ராணுவத்தில் மாற்றங்கள்.


(ஜேஎன்யூ கிழக்காசியக் கல்விப் பிரிவின் தலைவர் ஸ்ரீகாந்த் கொண்டப்பள்ளி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி) சீனாவில் மிகவும் சக்தி வாய்ந்த மத்திய ராணுவக் கமிஷனில் கடந்த வாரம் அதிபர் ஸீ ஜிங்பிங் உரையாற்றினார். அப்போது, குறிப்பிடத்தக்க வகையில் அவர் துருப்புக்களுக்குக் கூறிய அறிவுரையில், எந்த கடுமையான போர் சூழலையும் துணிவுடன் எதிர்கொண்டு, வெற்றி பெறும் திறனை வளர்த்துக் கொள்ளுமாறு வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து, ராணுவப் பயிற்சி குறித்த…

இந்திய பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்காக இணைக்கப்படும்  வங்கிகள்


மூத்த பொருளாதார  நிருபர் ஆதித்ய ராஜ் தாஸ் ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம் சத்யா அசோகன் விஜயா வங்கி, தேனா வங்கி, பேங்க் ஆப் பரோடா ஆகிய மூன்று பொதுதுறை வங்கிகளை ஒன்றாக இணைப்பதற்கான இறுதி கட்ட ஒப்புதலை மத்திய அரசு வழங்கியுள்ளதன் மூலம்,  இந்தியாவின் மிகப்பெரும் பொதுத் துறை அமைப்பாக விளங்கும் பாரத ஸ்டேட் வங்கிக்கு அடுத்து இரண்டாவது மிகப்பெரும் பொதுத் துறை வங்கிகள் அமைப்பாய் உருவெடுக்கலாம்;  இந்த முடிவானது…

வடகொரிய அதிபரின் 2019 ஆம் ஆண்டுக்கான செயல் திட்டம்.


(கிழக்கு, தென்கிழக்காசிய விவகாரங்கள் செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் தித்லி பாசு அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி) வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் அவர்கள், தனது புத்தாண்டு உரையில், 2019 ஆம் ஆண்டுக்கான தனது செயல் திட்டத்தில் 4 அம்சங்களை முன்னிலைப்படுத்தினார். தன்னிறைவு பெற்ற, சக்தி வாய்ந்த நாடாக வடகொரியாவை உருவாக்கி, பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வது, தேசிய பாதுகாப்புத் திறனை வலுவாக்குவது, இரு கொரிய நாட்டு…

இந்திய, அமெரிக்க உறவுகளுக்கு ஊக்கமளிக்கும் ஆசிய உறுதியளிப்பு முன்னெடுப்பு சட்டம்.


(அமெரிக்க விவகாரங்களுக்கான செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் ஸ்துதி பேனர்ஜி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.ராமமூர்த்தி) அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்ப் அவர்கள், 2018 ஆம் ஆண்டின் கடைசி நாளான டிசம்பர் 31 ஆம் தேதியன்று ஆசிய உறுதியளிப்பு முன்னெடுப்பு சட்டத்தில் கையொப்பமிட்டார். கடந்த ஏப்ரல் மாதம், அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களான கோரி கார்டனர், எட் மர்க்கி, மார்க்கோ ரூபின் மற்றும் பென் கார்டின் ஆகியோரால் அறிமுகப்படுத்தப்பட்ட இச்சட்டம்,…