கருத்துரை

நாடாளுமன்ற குளிர்காலத் தொடர்.


(பத்திரிக்கையாளர் வி.மோகன்ராவ் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி) நாடாளுமன்ற குளிர்காலத் தொடர் இன்றிலிருந்து தொடங்குகிறது. ஏறத்தாழ ஒரு மாதம் நீடிக்கும் இத்தொடரில் 20 அமர்வுகள் இருக்கும். இத்தொடர் அடுத்த மாதம் 8 ஆம் தேதி முடிவுக்கு வரும். இத்தொடரில், மேலவையில் 8 முக்கிய சட்ட மசோதாக்களும், மக்களவையில் 15 உம் தாக்கல் செய்யப்படவுள்ளன. அடுத்த நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னதாக நிகழும் கடைசி நாடாளுமன்றத் தொடர்…

சீராக முன்னோக்கி செல்வதற்காக சீர்திருத்தப்படும் உலக வர்த்தக அமைப்பு


மூத்த பொருளாதார வர்ணணையாளர் திரு சத்யஜித் மொஹந்தி ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம் சத்யா அசோகன்.  இரண்டாம் உலகப்போருக்கு பின்னர்,  GATT எனப்படும் தீர்வைகள் மற்றும் வர்த்தக பொது ஒப்பந்தமும் அதன் பின் வந்த உலக வர்த்தக அமைப்பும் நாடுகளுக்கு இடையேயான வர்த்தகத்தை சரியாக நிர்வகிப்பதற்கும், ஆள்வதற்கும், பல்வேறு விதிகள், செயல்முறைகள், விதிமுறைகள் ஆகியவற்றை ஏற்படுத்தி, உலகளாவிய வர்த்தகமானது சுமுகமாக செயல்படுவதற்கு வழி வகுத்து, கவனித்துக்கொண்டன.  ஆனால் கடந்த சில காலங்களாக, …

வளர்ச்சிப் பாதையில் இந்திய – ரொமேனிய உறவுகள்


ஐரோப்பாவுக்கான செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் தினோஜ் குமார் உபாத்யாய அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் பி குருமூர்த்தி. இந்திய – ரொமேனிய உறவுகளை வலுப்படுத்தும் முயற்சியாக, ரொமேனியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் திரு தியோடார் மெலஸ்கனு இந்தியாவிற்குப் பயணம் மேற்கொண்டார்.1948 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இரு தரப்பு ராஜ்ஜிய உறவுகள் 70 ஆண்டுகளை நிறைவு செய்யும் இந்நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே இணக்கமான, நட்புடன் கூடிய உறவுகள் நிலவிவருவதுடன் அவை…