ஃபின்லாந்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஃபின்லாந்து சமுக ஜனநாயகக் கட்சி குறைந்த வித்தியாசத்தில் வெற்றி.

ஃபின்லாந்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஃபின்லாந்து சமுக ஜனநாயகக் கட்சி குறைந்த வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

200 உறுப்பினர்களைக் கொண்ட அந்நாட்டு நாடாளுமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான 100 சதவீத வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், அந்தக் கட்சி 40 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.

அதற்கு அடுத்தபடியாக, ஃபின்லாந்து மக்கள் கட்சி 39 இடங்களிலும்,  தேசிய கன்சர்வேட்டிவ் கட்சி 37 இடங்களிலும், தற்போதைய பிரதமர் திரு ஜுஹா சிபிலியாவின் மத்திய கட்சி 31 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

Pin It