அகஸ்டாவெஸ்ட்லாண்ட் வழக்கில் இங்கிலாந்து இடைத்தரகர் கிறிஸ்டியன் மிஷெல்லுக்கு ஐந்து நாள் சி பி ஐ காவல்- தில்லி நீதிமன்றம்.

மூவாயிரத்து 600 கோடி ரூபாய் அகஸ்டா வெஸ்ட்லாண்ட் ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் இங்கிலாந்து நாட்டின் இடைத்தரகர் கிறிஸ்டியன் மிஷெல்-ஐ ஐந்து நாள் சிபிஐ  காவலில் வைக்க தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கில் மிஷெல்லிடம் அத்தாட்சிகளைக் காட்டி ஊழல் தொடர்பான பணத்தைக் கண்டுபிடிப்பதற்கென அவரை 14 நாள் காவலில் வைக்க வேண்டும் என சிபிஐ தரப்பில் கோரப்பட்டது.

மிஷெல்லின் வழக்கறிஞர் அவரை நீதிமன்றக் காவலில் வைக்க வேண்டும் என்று கூறினார்.

நேற்று பிற்பகல் மிச்செல்  சிபிஐ தனி நீதிபதி அரவிந்த் குமார் முன்னிலையில் கொண்டு வரப்பட்டார். அப்போது மிஷெல் சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.

சம்பந்தப்பட்ட ஆவணங்கள், குற்றப்பத்திரிகை ஆகியவற்றை மிச்செலுக்கு வழங்குமாறு சிபிஐக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

நேற்று அதிகாலை தில்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் மிச்செலை சிபிஐ கைது செய்தது.

முன்னதாக அவர் விசாரணைக்கென ஐக்கிய அரபு அமீரகத்தால் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

Pin It