அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களுக்குப் பிரார்த்தனைக் கூட்டம்

மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்கும் பிரார்த்தனைக் கூட்டம் புது தில்லி இந்திராகாந்தி உள் விளையாட்டு அரங்கில் இன்று மாலை நான்கு மணிக்கு நடைபெறுகிறது. இதில் பல்வேறு அரசியல் கட்சியினரும் பல துறைகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்களும் பங்கேற்கின்றனர். இதே போன்று மற்றொரு பிரார்த்தனைக் கூட்டம் வரும் 23 ஆம் தேதி லக்னோவில் நடைபெறவுள்ளது. இதில் மத்திய உள் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், உத்தரப்பிரதேச முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத், அடல் பிஹாரி வாஜ்பாயின் உறவினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.  இந்திய மக்களால் பெரிதும் நேசிக்கப்பட்ட வாஜ்பாய் தமது 93 ஆவது வயதில் தில்லியில் கடந்த வியாழனன்று காலமானார். அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் தில்லி ராஷ்ட்ரிய ஸ்மிருதி ஸ்தல் –இல் கடந்த வெள்ளியன்று தகனம் செய்யப்பட்டது.  நேற்று உத்தராகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் நேற்று வாஜ்பாயின் அஸ்தி கரைக்கப்பட்டது.

Pin It